India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா
விவசாயிகள் சங்கம் சார்பில் நாட்றம்பள்ளி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள விவசாய சங்க அலுவலகத்தில் 05-06-2024 அன்று செயற்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ளும் அனைத்து விவசாயிகளும் தங்களது மொபைல் போன் கொண்டு வரவேண்டும் சங்கத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
திருச்சியில் நேற்று (மே.31) பெய்த மழைப்பொழிவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சிறுகமணி KVK AWS பகுதியில் 3 செ.மீட்டரும், சிறுகுடி, துறையூர், தேவிமங்கலம், திருச்சி நகரம் மற்றும் ரயில் நிலையம் போன்ற பகுதிகளில் 1 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.
தர்மபுரியில் நேற்று (மே.31) பெய்த மழைப்பொழிவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பென்னாகரத்தில் 3 செ.மீட்டரும், பாப்பிரெட்டிப்பட்டியில் 2 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே குறைந்தளவு மழைப்பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2023 2024 ஆம் கல்வி ஆண்டில் கல்வி மற்றும் கல்வி இணை செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்ட அரசு பள்ளிகளுக்கு காமராஜர் விருது மற்றும் பரிசு தொகையினை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்பு.
செங்கல்பட்டு மாவட்டம் மெய்யூர் பாலாற்று பகுதியில் ‘தக்லைஃப் ‘ திரைப்படத்திற்கான சூட்டிங் நடைபெற இருக்கிறது. நாயகன் படத்திற்கு பிறகு 36 வருடங்கள் கழித்து மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தப் படத்திற்காக பாலாறு பகுதியில் கூடாரம் அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பரமக்குடி அருகே எமனேஸ்வரத்தில் வில்லேஜ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் இன்று 6ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் ஐவர் கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் சிறப்பு விருந்தினராக இந்திய கால்பந்தாட்ட வீரர் சிவசக்தி நாராயணன் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழகம் முழுவதுமிருந்து 32 அணிகள் கலந்துகொண்டன. பின் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நாமக்கல்லில் நேற்று (மே.31) பெய்த மழைப்பொழிவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ராசிபுரம் பகுதியில் 3 செ.மீட்டரும், புதுச்சத்திரம், ராசிபுரம் ARG ஆகிய பகுதிகளில் 1 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே குறைந்தளவு மழைப்பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரியில் நேற்று (மே.31) பெய்த மழைப்பொழிவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ராயக்கோட்டையில் 3 செ.மீட்டரும், பாம்பார் அணையில் 2 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே குறைந்தளவு மழைப்பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
சேலத்தில் நேற்று (மே.31) பெய்த மழையளவு விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏற்காடு ISRO AWS பகுதியில் 4 செ.மீட்டரும், ஏற்காட்டில் 3 செ.மீட்டரும், சந்தியூர் KVK AWS, சேலம் ஆகிய பகுதிகளில் 1 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே குறைந்தளவு மழை பதிவாவது குறிப்பிடத்தக்கது.
நத்தம் சட்டமன்ற தொகுதி சாணார்பட்டி அருகே உள்ள கம்பிளியம்பட்டியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று(மே 31) வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது. இதில் கணவாய் பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி(30) மரம் ஏறும்போது வழுக்கி கீழே விழுந்தார். உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே சுப்பிரமணி பரிதாபமாக உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.