India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 ஐ முன்னிட்டு திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ள திண்டுக்கல் முத்தனம்பட்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தயாராக உள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி நேற்று(மே 31) வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கான வாக்குகள் வரும் 4 ஆம் தேதி அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ளும் அரசியல் கட்சி முகவர்கள் காலை 6 மணி முதல் அனுமதிக்கப்படுவர் என்றும், கைபேசி கொண்டு வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் பகுதியில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் புதிய இயக்குநராக சி.ஜி.கர்ஹட்கர் நேற்று(மே 31) பொறுப்பேற்றுக்கொண்டார். ஏற்கனவே இருந்த இயக்குநர் வெங்கட்ராமன் ஓய்வு பெற்றதையடுத்து இவர் பதவி ஏற்றுக் கொண்டார். இவர் மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் 36 ஆண்டுகள் பணியாற்றி டாக்டர் பட்டம் பெற்றவர் ஆவார்.
சிவகங்கை மாவட்ட அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான உலகப் புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறையின் வழிகாட்டுதலின் பேரில் செயல்பட்டு வரும் மாணவ, மாணவியர் குழு இணைந்து புகையிலை விழிப்புணர்வு குறித்த சுவரொட்டி தயாரித்தல் மற்றும் கட்டுரைப் போட்டியை கல்லல் முருகப்பா மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது.
புதுச்சேரியில் போக்குவரத்து துறை சார்பாக 75 மின்சார பேருந்துகள் அறிமுகம் செய்ய உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி டெல்லி, கர்நாடகா போன்ற சில மாநிலங்களில் தற்போது டீசலில் இயங்கும் வாகனங்களை நிறுத்தப்பட்டு மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை அங்கு பயன்படுத்துகின்றனர். அதேபோல் புதுச்சேரியிலும் மாசு கட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு தற்பொழுது மின்சார இயக்க முடிவு செய்துள்ளனர்.
திருக்குவளை அண்ணா பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை மையம் செயல்படுகிறது. அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் கவுன்சிலிங் விண்ணப்பத்திற்கான பதிவு கட்டணத்தை மட்டும் செலுத்தி இங்கு இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் பதிவு நடைபெறும் என கல்லூரி முதல்வர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
கரடிக்கல் ஊராட்சி பெருமாள் பட்டியைச் சேர்ந்த பெருமாள்- உமா தம்பதியினர் மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் மகளுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு மகளுடன் தாய் உமா செல்போனில் பேசியதை கண்டித்து பெருமாள் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உளுந்தூர்பேட்டையில் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கூட்டம் இன்று (ஜூன்.01) நடைபெற்றது. இதில் திமுக முன்னாள் முதல்வர் கருணாநிதி 101 ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக நடத்துவது குறித்து எம்எல்ஏ மணிக்கண்ணன் பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன், நகர செயலாளர் டேனியல்ராஜ் , மாவட்ட துணை செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்க கூட்டரங்கில், மழைநீர் சேகரிப்பு தொடர்பான கருத்தரங்கு கூட்டம், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) அங்கித்குமார் ஜெயின் , மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், செயற்பொறியாளர்கள் முருகேசன், கருப்பசாமி உள்ளனர்.
போளூர் அடுத்த கேளூர் சந்தைமேட்டில் வாரந்தோறும் சனிக்கிழமை மாட்டுச்சந்தை மற்றும் காய்கறி சந்தை நடைபெறுவது வழக்கம். இதில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான மாடுகள், கன்றுகள் விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து காய்கறிச் சந்தை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்து வந்தனர்.
Sorry, no posts matched your criteria.