Tamilnadu

News June 1, 2024

மயிலாடுதுறையில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான கண்காணிப்பு மற்றும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி உட்பட பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News June 1, 2024

கையெழுத்திடும் அதிகாரம் ரத்து; கலெக்டர் அதிரடி

image

ஆவுடையானூர் ஊராட்சியில் பல்வேறு திட்டங்களில் நடந்த முறைகேடு மோசடிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தொடர்ந்து புகார் மனுக்கள் அளித்ததின் அடிப்படையில்
இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் முதற்கட்ட நடவடிக்கையாக ஊராட்சி மன்ற தலைவர் குத்தாலிங்கராஜன் (எ) கோபி காசோலைகளில் கையெழுத்து இடும் அதிகாரத்தை ரத்து செய்தார்

News June 1, 2024

கிராமச் சாலையில் கனரக லாரிகள் செல்ல அனுமதி இல்லை.

image

தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் பகுதிகளில் உள்ள கல்குவார்கள் மூலம் கேரளாவிற்கு தினமும் நூற்றுக்கணக்கான கனரக லாரிகளில் கனிமவளம் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் கிராமச் சாலைகள் பலத்த சேதம் அடைந்து வருகிறது. இந்நிலையில் அஞ்சான் கட்டளை ஊராட்சி பகுதி கிராமச் சாலை வழியாக கனரக லாரிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

தனியாருக்கு சொந்தமான கல்குவாரி வெடிசத்தத்தால் மக்கள் அச்சம்

image

இராசிபுரம் அடுத்துள்ள இராசிபுரம்சேலம் செல்லும் சாலையில் உள்ள அகரம் மகாலட்சுமி நகரில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி இயங்கி வருகின்றது.இதில் கற்களை வெட்டி எடுக்க வெடிபொருட்களை பயன்படுத்தி 24மணிநேரமும் வெடிசத்தமாய் கேட்டுக்கொண்டுள்ளது.இதனால் அருகில் வசிக்கும் மக்கள் பெரிதும் அச்சத்துடனே வாழ்ந்துவருகின்றனர்.இதனை முறைப்படுத்த வேண்டும் என தமிழக தன்னுரிமைகட்சி நிறுவனர் நல்வினைசெல்வன் இன்று அறிக்கை

News June 1, 2024

கூடலூர் தெருக்களில் மூலிகை செடி 

image

தேனி மாவட்டம் கூடலூரில் சோலைக்குள் கூடல் அமைப்பின் சார்பில் இன்று கோட்டை மேடு, கர்ணம் பழனிவேல் பிள்ளை தெருக்களில் மரக்கன்றுகள், மூலிகை தாவரங்கள் நடுவதற்கு குழிதோண்டும் பணிகளும், அழகர் கோயில் வளாகத்தில் கவாத்து எடுக்கும் பணிகளும் நடைபெற்றது. இதில் சோலைக்குள் கூடல் அமைப்பு நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News June 1, 2024

அந்தியூர் பகுதியில் இரவில் சாரல் மழை

image

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இருப்பினும் மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த வரம் மழை பெய்தது. பின்னர் கடந்த 3 நாட்களாக மீண்டும் வெயில் வாட்டியது. இந்நிலையில் அந்தியூர் அடுத்த அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு 10:30 மணிக்கு மேல் சுமார் 1 மணி நேரம் சாரல் மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.

News June 1, 2024

வாக்கு எண்ணிக்கை குறித்து ஆலோசனை

image

புதுச்சேரியில் 4ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை குறித்து திமுக சார்பில் கலந்தாலோசனைக் கூட்டம் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தலைமையில் இன்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில், புதுச்சேரி மாநில திமுக தலைமை அலுவலகத்தில் மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் எண்ணிக்கை முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கினார். இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News June 1, 2024

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆய்வு

image

புதுச்சேரியில் போக்குவரத்து துறை அதிகாரிகள் மாணவ மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்கள் பயணம் செய்யும் கல்வி நிறுவன வாகனங்களை ஆய்வு செய்யும் சிறப்பு முகாம் இன்று நடத்தி வருகின்றனர். இதில் பள்ளி, கல்லூரி மற்றும் அரசின் மாணவர்களுக்கான இலவச பேருந்து என மொத்தம் 900 வாகனங்கள் அதிகாரிகளின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து ஆனையர் சிவகுமார் முன்னிலையில் 6 குழுக்கள் ஆய்வு செய்தனர்.

News June 1, 2024

வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு

image

செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை MIT கல்லூரியில் செயல்படும் வாக்கு எண்ணிக்கை மையத்தினை மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் அபிஷேக் சந்திரா மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ச. அருண்ராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். உடன் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகு மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி ஆகியோர் உடன் இருந்தனர்.

News June 1, 2024

58,127 பேர் விண்ணப்பம்: ஆட்சியர் தகவல்

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் நேற்று கூறியதாவது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் -4 தேர்வு வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு 58,127 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வுக்காக 194 மையங்கள் அமைக்கப்பட்டு, தேர்வை துணை ஆட்சியர் அளவிலான குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றார்.

error: Content is protected !!