India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரம் ஒன்று வாக்கு எண்ணிக்கையின் போது பழுதடைந்தது. இதையடுத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வி விபேட் இயந்திரங்கள் உள்ள வாக்குச் சீட்டினை எண்ணுவதற்கு அனுமதி அளித்தனர். இதனை வாக்குச்சாவடி முகவர்களும் ஏற்றுக் கொண்டனர்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குகள் இன்று தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டு வருகிறன. இந்த வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து திமுக வேட்பாளர் முன்னணியில் இருந்து வந்த நிலையில் முதல் சுற்றின் முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில் திமுக வேட்பாளர் கனிமொழி 29618 வாக்குகளும். அதிமுக வேட்பாளர் 6963 வாக்குகளும் பெற்றுள்ளார்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (ஜூன் 4) நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது. இதில் முதல் சுற்று முடிவில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வரும் நிலையில் பிரதான கட்சியான அதிமுக கட்சி வேட்பாளர் ஜான்சி ராணி பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றார். இந்த நிலையில் திருநெல்வேலியில் பெரும் தோல்வியை அதிமுக சந்திக்கும் என கருதப்படுகின்றது.
கரூரில் தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி முன்னிலை.அவர் 50,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று ஜோதிமணி முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பின்னடைவை சந்தித்துள்ளர்.
சிதம்பரம் மக்களவை தொகுதியின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை வெளியாகியுள்ளது. இதில் விசிக வேட்பாளர் திருமாவளவன் 17,264 வாக்குகள் பெற்று 6000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் 13,212 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார். பாமக வேட்பாளர் 6,205 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் 1,511 வாக்குகள் பெற்றுள்ளார்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வாக்கு எண்ணும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி,இன்று (04.06.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் இங்கு சுமுகமாக வாக்கு எண்ணிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி பதியப்பட்ட வாக்குகள் வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகின்றது. இதில் முதல் சுற்று திமுக முன்னிலை பெற்றுள்ளது. திமுக மலையரசன் – 22,712, அதிமுக குமரகுரு – 22,324, பாமக தேவதாஸ் – 2587, நாமக ஜெகதீசன் – 2379, இதில் திமுக வேட்பாளர் – 388 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை விட 4,000 வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில் 51% வாக்குகளை இவரே பெற்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்று முடிவில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் – 25005 , அதிமுக – 12318 , பாமக – 10031 ,நாதக – 5312 மேலும்
12,687 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா முன்னிலை வகித்து வருகிறார். தொடர்ந்து வாக்கு என்னும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மதிமுக முன்னிலை பெற்றுள்ளது.
இதில் மதிமுக-16, 411 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறது.
இரண்டாவது இடத்தில் அதிமுக-8159, மூன்றாவது இடத்தில் அமமுக-2940, நான்காவது இடத்தில் நாதக-3713 வாக்குகள் பெற்றுள்ளது. இதில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
Sorry, no posts matched your criteria.