Tamilnadu

News June 4, 2024

திருச்சியில் தொடர்ந்து திமுக முன்னிலை

image

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மொத்த வாக்குகள் இன்று காலை 11.12 மணி நேர நிலவரபடி, திமுக கூட்டணி சார்பில் மதிமுக – துறை வைகோ – 74,475, அதிமுக – கருப்பையா – 35,770, அமமுக – செந்தில்நாதன் – 13,052, நா த க – ராஜேஷ் – 17,083, 38,705 வாக்குகள் வித்தியாசத்தில் துரை வைகோ தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

News June 4, 2024

திமுக வேட்பாளர் மலையரசன் தொடர்ந்து முன்னிலை

image

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் ஆறு சுற்றுகள் எண்ணி முடிக்கப்பட்டு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக வேட்பாளர் மலையரசன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் குமரகுருவை விட 17309 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். 6 சுற்று முடிவில் திமுக -மலையரசன் 151953 பெற்ற வாக்குகள் பெற்றுள்ளார்.

News June 4, 2024

20, 098 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை

image

திருநெல்வேலியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவை பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று (ஜூன் 4) திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டு வருகின்றது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் நிலவரப்படி திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி இந்திய கூட்டணி வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 20098 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை

image

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் மூன்றாவது சுற்று முடிவு வெளியாகியுள்ளது. அதில், காங்கிரஸ் 72233, அதிமுக 36551, பா.ம.க 29642 , நா.த.க 17141 வாக்குகள் பெற்றுள்ளன. மொத்தமாக 35682 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

News June 4, 2024

நெல்லையில் எதிர்பாராத திருப்பம்

image

மக்களவை பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இந்திய கூட்டணி வேட்பாளர் ராபர்ட் புரூஸ் வெற்றி பெறும் தருவாயில் உள்ளார்.

News June 4, 2024

இரண்டாவது சுற்றின் அதிகாரப்பூர்வ முடிவுகள்

image

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குகள் இன்று தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து திமுக வேட்பாளர் கனிமொழி முன்னணியில் இருந்து வருகிறார் . இரண்டாவது சுற்று அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் திமுக வேட்பாளர் கனிமொழி 25885 ,அதிமுக வேட்பாளர் 7176 வாக்குகள் பெற்றுள்ளார்.

News June 4, 2024

நெல்லையில் நோட்டாவுக்கு 1045 வாக்குகள் பதிவு

image

திருநெல்வேலியில் கடந்த ஏப்ரல் மாதம் மக்களவை பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) நெல்லை அரசு பொறியியல் கல்லூரி வைத்து எண்ணப்பட்டு வருகின்றது. இதில் இதுவரை வெளியான நிலவரப்படி இந்திய கூட்டணி வேட்பாளர் ராபர்ட் புரூஸ் முன்னிலை வகித்து வருகின்றார். இந்த நிலையில் 1045 வாக்குகள் நோட்டாவில் பதிவாகியுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

News June 4, 2024

தபால் வாக்குகளில் அமமுக முன்னிலை.!

image

திருச்சியில் இன்று காலை முதல் திருச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்கு எண்ணிக்கைகள் ஜமால் முகமது கல்லூரியில் எண்ணப்பட்டு வருகிறது. அந்த வகையில் தபால் வாக்குகளின் முதல் சுற்று எண்ணிக்கையின் நிலவர படி, மதிமுக- 269,அதிமுக-180, அமமுக-319 நாம் தமிழர் கட்சி 99 என அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் தற்போது தபால் வாக்குகளில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

புதுக்கோட்டை துரை வைகோ முன்னிலை

image

திருச்சி மக்களவை தொகுதியின் 2ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை வெளியாகியுள்ளது. இதில், மதிமுக வேட்பாளர் துரை வைகோ 24,135 வாக்குகள் பெற்று 11,940 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 12,195 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார். அமமுக செந்தில்நாதன் 4205 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் 5,601 வாக்குகள் பெற்றுள்ளார்.

News June 4, 2024

வாக்கு என்னும் அறையை திறந்து வைத்த அலுவலர்

image

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள, பாராளுமன்ற தேர்தல் வாக்கு என்னும் மையத்தில் வாக்கு என்னும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான பிரதீப் குமார் அவர்கள், திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை பார்வையாளர் தினேஷ்குமார் முன்னிலையில் இன்று திறந்து வைத்தார்.

error: Content is protected !!