Tamilnadu

News June 5, 2024

இளமறிவியல் படிக்க விண்ணப்பிக்கலாம்

image

இந்த கல்வியாண்டு முதல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கும் வேளாண்மைப் பிரிவு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கும் ஒரே விண்ணப்பம் வழியாக இளமறிவியல் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இக்கல்வியாண்டில் 14 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 4 பட்டயப்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பிக்க ஜூன்.12ஆம் தேதி இறுதி நாள் என இன்று துணைவேந்தர் கீதாலட்சுமி கூறினார்.

News June 5, 2024

கோவை வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில்

image

கோவை ரயில்வே அதிகாரிகள் இன்று கூறியதாவது, சென்னை தாம்பரம் முதல் மங்களூரு இடையே செல்லும் சிறப்பு ரயில் போத்தனூர் வழித்தடத்தில் ஜூன்.7 ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை இயங்கும். தாம்பரத்தில் இருந்து நண்பகல் 1.55 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 6.55 மணிக்கு கோவை போத்தனூர் வழியாக மங்களூரு சென்றடையும் என்று தெரிவித்துள்ளனர்.

News June 5, 2024

அயோத்தி சமத்துவத்தின் அடையாளமாக ஒளிர்கிறது

image

ராமர் கோவில் கட்டப்பட்ட அயோத்தி பைசாபாத் தொகுதியின் ‘வெற்றியே’ இந்தியா சொல்லும் செய்தி
பொதுத் தொகுதியில் நின்ற சமாஜ்வாதி கட்சியின் தலித் வேட்பாளர் அவதேஷ் பிரசாத் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார் . மதவெறி அரசியலின் அடையாளமாக்கப்பட்ட அயோத்தி சமத்துவத்தின் அடையாளமாக ஒளிர்கிறது.
அன்பே வெல்லும் என
சு.வெங்கடேசன் ட்வீட் என இன்று செய்துள்ளார்.

News June 5, 2024

இமயமலையிலிருந்து சென்னை திரும்பினார் ரஜினி!

image

நடிகர் ரஜினிகாந்த், ‘வேட்டையன்’ படப்பிடிப்பு முடிந்ததையடுத்து இமயமலைக்கு ஆன்மீக சுற்றுலா மேற்கொண்டார். அங்கு ஹரித்துவார், பாபாஜி குகை என பல இடங்களுக்கு சென்றார். அங்கிருந்து வெளியான அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில், ஒருவார ஆன்மீக பயணத்தை முடித்து இன்று (ஜூன் 5) சென்னை திரும்பினார். அவர், ஜூன் 10ம் தேதி தொடங்கும் ‘கூலி’ படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

News June 5, 2024

கால்நடைகளுக்கு காணை நோய் தடுப்பூசி: கலெக்டர் தகவல்

image

தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் காணை நோய் தடுப்பூசி 5-வது சுற்று பணி ஜூன் 10 முதல் 21 நாள், விடுபட்ட கால்நடைகளுக்கு ஜூலை 10 வரை தடுப்பூசி பணி முகாம் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நடைபெறவுள்ளது. தங்கள் கிராமத்தில் முகாம் நடைபெறும் நாளில்
கால்நடை வளர்ப்போர் தங்கள் மாட்டினங்களை அழைத்துச் சென்று தடுப்பூசி செலுத்தி பயன்பெறலாம் ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

News June 5, 2024

விக்கிரவாண்டி அருகே தொழிலாளி உயிரிழப்பு

image

பொன்னங்குப்பம் கிராமத்தில் இன்று அய்யனார் என்பவரது கிணற்றில் ராட்சத கிரைன் மூலம் தூர் வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது சாத்தனூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பொன்னங்குப்பத்தைச் சேர்ந்த ராஜி ஆகியோர் மீது கிரைன் ரோப் அறுந்து விழுந்ததில் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ராஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விக்கிரவாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News June 5, 2024

விவசாயிக்கு நிவாரணம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

image

சிறுமத்தூர் கிராமத்தைச் விக்ரமாதித்தன் தனியார் நிதி நிறுவனம் மூலம் 15.10.2020 அன்று 5,000 முன்பணம் செலுத்தி 12,900 கடன் பெற்று செல்போன் வாங்கி உள்ளார். மாதம் 1,456 வீதம் தனது வங்கி கணக்கில் இருந்து 7மாதம் கடனை திருப்பி செலுத்திய நிலையில், 14,770 கூடுதலாக பணம் பிடிக்கப்பட்டது. மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ரூ.50,000+10,000 நஷ்ட ஈடு வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

News June 5, 2024

இருவர் கைது நகை பறிமுதல்

image

தட்டார்மடம் அருகே உள்ள அழகம்மாள் புரத்தைச் சேர்ந்த இசக்கிராஜா என்பவரது வீட்டில் கடந்த இரண்டாம் தேதி இரண்டரை லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருடு போனது. இது தொடர்பாக தட்டார் மடம் போலீசார் விசாரணை நடத்தி அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த், ராஜன் ஆகிய இருவரை கைது செய்து திருடு போன நகைகளை மீட்டுள்ளனர்.

News June 5, 2024

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகாரத்தை இழந்த நிலையில் மக்களின் இயல்பு நிலையில் வெயிலின் பாதிப்பால் மோசமான சூழ்நிலையில் இருந்த பொழுது தற்பொழுது மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த மழை தொடர்ந்து ஒரு மணி நேரம் பெய்ததால் இந்த மலையானது மக்களுக்கு குளிர்ச்சியான சூழ்நிலையில் தருவதால் புதுகை மக்கள் மகிழ்ச்சியுடன் வெயிலின் தாக்கம் குறைந்து குளுகுளு என காலநிலையில் உள்ளனர்.

News June 5, 2024

மஞ்சளாறு அணையில் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

image

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதியில் மழை காரணமாக பெரியகுளம் அருகே உள்ள மஞ்சள் ஆரணிக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் முழு கொள்ளளவான 57 அடி உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 53 அடியை எட்டியதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளனர். இதனால் கரையோரம் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!