India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் துறை மூலம் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அத்தியாவசியப் பொருளான பாமோலின் எண்ணெய் மற்றும் துவரம்பருப்பு மே மாதம் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நிலுவையில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜீன் மாதத்தில் முதல் வாரத்தில் சம்மந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இன்று(ஜூன் 6) அறிவித்துள்ளார்
ஈரோடு மாவட்டத்தில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசி பணிகள் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரும் 10ம் தேதி முதல் 10.07.2024 வரை கால்நடைகளை கோமாரி நோய் தாக்காமல் இருக்க, இலவசமாக அனைத்து கால்நடைகளுக்கும் கோமாரி தடுப்பூசி முகாம் மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது என ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஜுன் 6) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். அதில், “190 லிட்டர் கள்ளச்சாராயம், 50 மதுபாட்டில்கள், 55 கிராம் கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஒரே நாளில் 10 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது” என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் 2வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற சு.வெங்கடேசன் இன்று அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் எம்எல்ஏ கோ.தளபதி ஆகியோருடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் தினமும் 100 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தி வந்த நிலையில் இன்று (ஜுன் 6) வெயிலின் தாக்கம் சற்று குறைந்து 94.3°F பதிவானது. பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தற்போது மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீசி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
மதுரை புதுார் தொழிற்பேட்டையில் உள்ள மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையத்தில் வரும் ஜூலை மாதம் முதல் ஸ்மார்ட் போன் ஹார்டுவேர், சி.சி.டி.வி., கேமரா குறித்த இலவச பயிற்சியளிக்கப்பட உள்ளதாக ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். 8ஆம் வகுப்புக்கு மேல் படித்த 40 வயதுக்குட்பட்ட இருபாலரும் பயிற்சி பெறலாம், கூடுதல் தகவல்களுக்கு 86956 46417ல் தொடர்பு கொள்ளலாம்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மாங்குடி நெடுஞ்சாலையில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் ராட்சத குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து பார்வையிட்டு வருகின்றனர். இதனால் கோடைகாலத்தில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாடு குறையும் என்று மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தமிழகத்தின் துணிநூல் துறையில் புதிய வேலைவாய்ப்பினை உருவாக்குவதற்காக 10 மற்றும் +2 படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் பயிற்சி அளிக்க உள்ளது. இப்பயிற்சியினை பெற விரும்புவர்கள் <
மயிலாடுதுறையில் (9.6 2024)ஆம் தேதி தமிழ்நாடு அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் முன்னேற்பாடு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூன்-06) மாவட்டத்தில் அதிகபட்சமாக 91.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.