India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சமயநல்லூர் பர்மா காலனியை சேர்ந்தவர் போதும் பொண்ணு(23). தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர் இவர் மாற்று ஜாதியை சேர்ந்த பாலகுமாரனை திருமணம் செய்து கொண்டார். பாலகுமாரன் தாயார் இவரை ஜாதியை குறை கூறி பேசி வந்துள்ளார். இதனால் போதும் பொண்ணு நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆர்டிஓ விசாரணை மேற் கொள்ளப்பட்டுள்ளது. சமய நல்லூர் போலீசார் தாய் மற்றும் மகனிடம் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதிற்கு புதுமை, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம், சமூக சேவை ஆகிய துறைகளில் சாதனை புரிந்த 5 வயதிற்கு மேற்பட்டு 18 வயதுமிகாத கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தைகள் 31.07.2024க்குள் (https://awards.gov.in) என்ற இணையதளம் வாயிலாக விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஜூன் 9ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப்-4 தேர்வில், பெரம்பலூர் மாவட்டத்தில் 61 தேர்வு மையங்களில் 18,169 பேர் தேர்வு எழுத உள்ளனர். இந்த தேர்வர்கள், தேர்வு எழுத ஏதுவாக அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடையால் சிற்றாற்றின்கரையைச் சேர்ந்தவர் பிபின்(42), முன்னாள் ராணுவ வீரரான இவர் மனைவி, குழந்தையை பிரிந்து வாழ்கிறார். கடந்த சில நாட்களாக இவர் முதப்பன்கோட்டில் உள்ள செல்வராஜ்(66) என்பவரின் ஆட்டோவில் இரவு தூங்கியுள்ளார். இந்நிலையில் இன்று காலை அவர் ஆட்டோவில் இறந்து கிடந்தார். இதுகுறித்து செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் அருமனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலூர் அண்ணா மேம்பாலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் இன்று காலை அந்த வழியாக வந்த ஒரு நபர் திடீரென்று சாலையில் படித்ததால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்தனர். இந்த நிலைகளில் தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து அவரிடம் விசாரணை செய்தனர். அந்த வாலிபர் மனவளர்ச்சி குன்றியதாக கருதி அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் பரவலாக கனமழை பெய்தது. இந்நிலையில் மழையின் அளவு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் – 33.4 மி.மீ,
உத்திரமேரூர் – 13.0 மி.மீ, வாலாஜாபாத் – 80.0 மி.மீ, ஶ்ரீபெரும்புதூர் – 29.0 மி.மீ, குன்றத்தூர் – 22.2 மி.மீ பதிவாகியுள்ளது. மொத்தமாக மாவட்டம் முழுவதும் 200.26 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் வேலையில்லா இசை பள்ளி ஆசிரியர்கள் சார்பில் மனு கொடுக்க வந்திருந்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது கடலூரில் 40க்கும் மேற்பட்ட இசை பள்ளி ஆசிரியர்கள் கடந்த 20 ஆண்டுக்கும் மேலாக வேலையில்லாமல் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எங்களுக்கு அனைத்து விதமான தகுதி இருந்தும் வேலை கிடைக்கவில்லை எங்களை பதிவு மூப்பு அடிப்படையில் வேலைக்கு எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.
06.06.24. விழுப்புரம்
2024 தேர்தல் முன்னிட்டு தேர்தல் நடத்தை விதி அமுலில் இருந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் துறை மூலம் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அத்தியாவசியப்பொருளான பாமோலின் எண்ணெய் மற்றும் துவரம்பருப்பு பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2024-மே மாதம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 2024-ஜீன் மாதத்தில் முதல் வாரத்தில் வழங்கப்படும்
கடலூரில் நேற்று சூறைக்காற்றுடன் மழை பெய்தது.இதில் கடலூர் பகுதியில் 79.2 மி.மீ, வானமாதேவி 72.8 மில்லி மீட்டர், வேப்பூர் 53 மில்லி மீட்டர், பண்ருட்டி 49 மில்லி மீட்டர், கலெக்டர் அலுவலகம் 62.6 மில்லி மீட்டர், விருதாச்சலம் 32 மிமீ. குப்பநத்தம் 32.8 மில்லி மீட்டர் குடிதாங்கி 42 மில்லி மீட்டர் போன்ற பல்வேறு பகுதிகளில் பெய்த மழையின் அளவு மொத்தமாக 586.50 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சியின் சார்பில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு
மகத்தான வெற்றி பெற்ற வை.செல்வராஜ், கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணுவை சந்தித்து இன்று வாழ்த்து பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் வஹிதா நிஜாம், பி.எஸ்.மாசிலாமணி, க.மாரிமுத்து எம்எல்ஏ, சிவகுருபாண்டியன், எஸ்.கேசவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.