Tamilnadu

News June 7, 2024

கடலூரில் இஸ்லாமிக் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

image

கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே பாலஸ்தீனம் பகுதியில் உள்ள ராஃப் தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்ததை கண்டித்து இஸ்லாமிய கூட்டமைப்பு மற்றும் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர் பின்பு அனைவரும் எழுந்து நின்று இஸ்ரேலுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

News June 7, 2024

ஜமாபந்தி குறித்து ஆட்சியர் தகவல்

image

1433-ம் பசலிக்கான ஜமாபந்தி எதிர்வரும் ஜூன்.12ஆம் தேதி தொடங்கி ஜூன்.28ஆம் தேதி வரை அனைத்து வட்டங்களிலும் நடைபெற உள்ள ஜமாபந்தியில் பொதுமக்கள் வருவாய்துறை தொடர்பான கோரிக்கையை மனுக்களை அளித்து தீர்வு பெற்றுக் கொள்ளலாம் என பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் அழைப்பு விடுத்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News June 7, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

தமிழக அரசு, துணிநூல் துறை மூலம் 10, 12ஆம் வகுப்பு முடித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலமாக ஸ்பின்னிங் (ம) தொழில்நுட்ப ஜவுளி பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சி பெறவிரும்புபவர்கள் https://tntextiles.tn.gov.in./jobs/ என்ற வலைதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News June 7, 2024

வாணியம்பாடியில் ரயிலில் அடிபட்டு பெண் பலி

image

திருப்பத்தூர், வாணியம்பாடி ரயில் நிலையத்தில் (07.06.2024) இன்று மாலை 5 மணியளவில் சென்னையில் இருந்து வாணியம்பாடி வந்த குடும்பத்தினர் ரயிலில் இறங்கி தண்டவாளத்தைக் கடக்கும் பொழுது எதிரே வந்த ரயில் மோதி பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து, ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News June 7, 2024

கூலி தொழிலாளர்களுக்கு அதிர்ச்சி

image

ஜோலார்பேட்டை ஏலகிரி கிராமம் சேர்ந்த கூலி தொழிலாளி மணி, மனைவி மலர். இவர் தேசிய ஊரக வேலை திட்டத்தில் 100 நாள் வேலை செய்து வருகிறார். இவரது கணவர் மீன் வியாபாரம் செய்து வருகின்றார்.
இந்நிலையில் இவருக்கு விழுப்புரம் பகுதி வணிக வரி துறை மூலம் வரி பணம் 22 கோடி, வட்டி 17 கோடி என மொத்தம் 39 கோடி வரி செலுத்த வேண்டும் என கடிதம் வந்துள்ளதால் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.

News June 7, 2024

காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம்

image

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு (ம) புதுச்சேரியில் போட்டியிட்ட 9 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் வரும் 11ம் தேதி காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News June 7, 2024

தருமபுரி மாவட்டத்திற்கு மழை

image

தமிழகத்தில் அடுத்த சில மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் அடுத்த சில மணி நேரத்தில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. இப்பகுதியில் கடந்த நில நாட்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News June 7, 2024

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்

image

இந்திய பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் முடிவுட்டதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதி வாரம் (10.6.2024) திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். மேலும் இக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி  தகவல் தெரிவித்துள்ளார்.

News June 7, 2024

குடும்ப அட்டை தாரர்களுக்கு நற்செய்தி

image

திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தில் நியாய விலைக் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த மே-2024-ஆம் மாதத்தில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு பெறாதவர்கள் ஜுன்-2024-ஆம் மாதத்தின் முதல் வாரத்தில் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

News June 7, 2024

புதுச்சேரி பொது நர்சிங் நுழைவுத் தேர்வு – விவரங்கள்

image

புதுவை சென்டாக் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான புதிய பதிவு சென்டாக் இணையதளத்தில் ஜூன்.10ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே B.Sc. Nursing படிப்பிற்கு விண்ணப்பித்திருந்தாலும், புதியதாக சென்டாக் இணையதளத்தின் மூலம் B.Sc.Nursing படிப்பிற்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம். தவறினால் பொது நர்சிங் நுழைவுத் தேர்வு – 2024லில் (PCNET) பங்கேற்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!