Tamilnadu

News January 14, 2026

வேலூர்: சம்பளப் பிரச்சனையா? உடனே CALL!

image

வேலூர் மக்களே.., உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். இந்த லிங்கில் அல்லது கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, தொழிலாளர் இணை ஆணையர் – 0416-2222926, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601 எண்களுக்கு அழைத்து புகார் செய்யலாம். ஷேர்!

News January 14, 2026

சென்னையில் சம்பளப் பிரச்னையா?

image

சென்னை மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். <>இந்த லிங்கிலோ<<>> (அ) கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107 எண்களிலோ புகார் செய்யலாம். ஷேர் செய்து குழப்பத்தில் உள்ளவர்களுக்கு உதவுங்கள்.

News January 14, 2026

ராணிப்பேட்டையில் கொடூர வன்முறை!

image

கலவையைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர், நேற்று(ஜன.13) இரவு மது போதையில் கத்தியால் மனைவியின் கையை வெட்டி துண்டாக்கினார். மேலும் பல இடங்களில் கத்தியால் வெட்டியுள்ளார் . இதனால், படுகாயமடைந்த லட்சுமி, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News January 14, 2026

ராணிப்பேட்டையில் கொடூர வன்முறை!

image

கலவையைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர், நேற்று(ஜன.13) இரவு மது போதையில் கத்தியால் மனைவியின் கையை வெட்டி துண்டாக்கினார். மேலும் பல இடங்களில் கத்தியால் வெட்டியுள்ளார் . இதனால், படுகாயமடைந்த லட்சுமி, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News January 14, 2026

பரமக்குடி: இமானுவேல் சேகரன் மணி மண்டபம் ஜன.17 திறப்பு

image

வரும் 17-ம் தேதி மதுரை அலங்​காநல்​லுார் ஜல்​லிக்​கட்டு விழா உள்​ளிட்ட நிகழ்ச்​சிகளில் பங்​கேற்க வரும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், அன்று பரமக்​குடி​யில் ரூ.3 கோடி மதிப்பில் அமைக்கபட்டுள்ள இமானுவேல் சேகரனின் மணிமண்டபத்தை திறந்து வைக்க உள்​ளார். இமானுவேல் சேகரன் முழு உருவ சிலையுடன் மணி மண்டபம் கட்டபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News January 14, 2026

தேனியில் 15 கிலோ புகையிலை பறிமுதல்

image

கூடலூர் தெற்கு போலீசார் குற்றத்தடுப்பு சம்பந்தமாக நேற்று (ஜன.13) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று இருந்த ஜெயச்சந்திரன், விஜய், வினோத் ஆகியோரை சோதனை செய்த பொழுது அவர்கள் மூவரும் 15.482 புகையிலை பொருட்களை வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

News January 14, 2026

நாமக்கல்: உங்கள் குழந்தையை கோடீஸ்வரர் ஆக்கும் திட்டம்

image

மத்திய அரசின் NPS வாத்சல்யா திட்டத்தில் மாதம் ₹1,000 சேமித்தால், உங்கள் குழந்தைகளுக்கு 18 வயதில் சுமார் ₹5.5 லட்சமும், 60 வயதில் ₹2.75 கோடி வரையும் கிடைக்கும். கல்வி மற்றும் மருத்துவச் செலவுக்காக இடையில் பணம் எடுக்கும் வசதி உண்டு. உங்கள் குழந்தைளை எதிர்கால கோடீஸ்வரராக மாற்ற இன்றே இணையுங்கள்;கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்
அல்லது அருகிலுள்ள வங்கி, தபால் அலுவலகத்தை அணுகவும்.

News January 14, 2026

நெல்லை: கூட்டத்தில் புகுந்த அரசு பேருந்தால் ஒருவர் பலி

image

நெல்லை காந்திநகர் பகுதியை சேர்ந்த பொன் பரமசிவன்(25), டவுனை சேர்ந்த ராஜ கல்யாணி(31) உள்ளிட்டோர் ஒரு குழுவாக நேற்று மாலை திருச்செந்தூருக்கு பாதையாத்திரை சென்றுள்ளனர். கிருஷ்ணாபுரம் பகுதியில் இவர்கள் சென்ற போது நெல்லை – திருச்செந்தூர் சென்ற அரசு பேருந்து பாதையாத்திரை கூட்டத்துக்குள் புகுந்ததில் பொன்பரமசிவன் உயிரிழந்தார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

News January 14, 2026

சேலம் கலெக்டர் கடும் எச்சரிக்கை!

image

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி விடுத்துள்ள அறிக்கையில், திருவள்ளுவர் தினமான ஜனவரி 16, குடியரசு தினமான ஜனவரி 26 மற்றும் ராமலிங்க அடிகளார் பிறந்த தினமான பிப்ரவரி 1 ஆகிய மூன்று நாட்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை மீறி மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

News January 14, 2026

காஞ்சிபுரத்தில் உடனடி அரசு வேலை!

image

காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் மற்றும் சுகாதாரப் பார்வையாளர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவத்தை <>இங்கே பதிவிறக்கம்<<>> செய்து, சான்றிதழ்களுடன் நேரடியாகவோ அல்லது ஸ்பீட் போஸ்ட் மூலமோ அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஜன.23ஆம் தேதியே கடைசி நாள். உடனே அனைவருக்கும் SHARE!

error: Content is protected !!
↑