Tamilnadu

News May 5, 2024

இன்று மழைபெய்ய வாய்ப்பு

image

தமிழகத்தில் தற்போது கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. தமிழகத்தின் பல இடங்களில் 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து விடுபட மழை எப்போது பெய்யும் என மக்கள் காத்திருக்கிறார்கள். அதன்படி சேலம் மாவட்டத்தில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News May 5, 2024

பாண்டி “ராக் பீச்” பகலில் வெறிச்சோடி

image

அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கியது. புதுவையில் முதல் நாளிலேயே 100.4 டிகிரி வெயில் பதிவானது. வார இறுதி விடுமுறையை புதுவையில் கொண்டாட வந்த சுற்றுலா பயணிகளும் தங்கும் விடுதிகளில் முடங்கி இருந்தனர். மாலை 5 மணிக்கு பின்னரே அவர்கள் வெளியில் வரத் தொடங்கினார்கள். இதன் காரணமாக புதுவை கடற்கரை, பாண்டி மெரினா, சின்ன வீராம்பட்டினம் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள், மக்கள் கூட்டம் அலைமோதியது.

News May 5, 2024

சென்னை:குழந்தையை கொன்ற தாய் கைது   

image

சென்னை தி.நகரில் தனக்குத்தானே பிரசவம் பார்த்து குழந்தையின் கால்களை வெட்டி கொன்ற பெண் எழும்பூர் தாய் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அந்த பெண் மீது மாம்பலம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து இருந்தனர். அவரை கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

News May 5, 2024

புதுக்கோட்டை அருகே திடீர் தீ விபத்து 

image

விராலிமலை அருகே கொடும்பாளூர் கிராமத்தில் நேற்று அய்யன்குளத்தின் கரையின் ஒரு பகுதியில் இருந்த புளிய மரத்தி லிருந்து நேற்று கரும் புகை வெளியேறியது.
அதனைக்கண்ட அப்பகுதி மக்கள் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு கொடுத்தனர் அதற்குள் அந்த மரத்தில் தீ
பரவியது. இதையடுத்து, இலுப்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்

News May 5, 2024

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

image

அந்தியூர் அடுத்த வெள்ளித்திருப்பூர் – பவானி சாலை, கல்பாவி பிரிவு பகுதியில் ரேசன் அரிசி கடத்தி செல்வதாக ஈரோடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் வாகன அங்கு தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது காரில் 11 மூட்டைகளில் 550 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்த உதயகுமார் (55) என்பவரை போலீசார் கைது செய்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

News May 5, 2024

நாமக்கல் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

24-25ம் வருடத்தில் மே மாதத்திற்கு நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தின் மூலம் சிறப்பு மண் நீர் பரி சோதனை முகாம் நடைபெற உள்ளது. 9.5.24 மல்லசமுத்திரம், 16.05.24 வெண்ணந்தூர், 23.05.24 சேந்தமங்கலம், 30.05.24 கபிலர்மலை ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது. அதனைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்களது நிலங்களின் மண் மற்றும் நீர் மாதிரிகளை ஆய்வு செய்து பயனடையுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.உமா கேட்டுக் கொண்டுள்ளார்

News May 5, 2024

பாரா பீச் வாலிபால் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

image

மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பீச் வாலிபால் உலக சாம்பியன் ஷீப் போட்டி சீனாவில் மே 28-ஆம் தேதி தொடங்கி ஜூன் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.போட்டியில் பங்கேற்கும் வீரா்கள் தோ்வு செய்யும் பணி நாகை புதிய கடற்கரையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கா்நாடகம், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட 10-க்கும் அதிகமான மாநிலங்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்றனா்.

News May 5, 2024

வெளிநாட்டு பெண்ணுடன் திருமணம்

image

கிருஷ்ணகிரி, குரியனப்பள்ளியை சேர்ந்தவர் ரமேஷன் . இவர் போலந்து நாட்டில் உள்ள  பல்கலைகழகத்தில் ஆராய்ச்சித் துறையில் பணியாற்றி வந்தார். அப்போது அதே நாட்டை சேர்ந்த எவலினா மேத்ரோ (31) என்ற பெண்ணுடன்  ரமேஷனுக்கு காதல் மலர்ந்தது. பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் தமிழ் கலாச்சாரத்தின் முறைப்படி திருமணம் நடைபெற்றது. 

News May 5, 2024

வேலூர்: கல்லால் தாக்கி இளைஞா் கொலை

image

குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறை, ஏரியின்கீழ்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் குமாா் (24). கட்டடத் தொழிலாளியான இவா், வியாழக்கிழமை முதல் மாயமானார். அவரது பெற்றோா் தேடி வந்த  நிலையில் நேற்று தட்டப்பாறை அரசுப் பள்ளி வளாகத்தில் கால்வாயில் இருந்து குமாா் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் அவரை மா்ம நபா்கள் தலையில் கல்லால் தாக்கிக் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

News May 5, 2024

காட்டு யானையை வனத்துக்குள் விரட்டிய நாய்

image

நேற்று முன்தினம் இரவு முதுமலையிலிருந்து தொரப்பள்ளிக்குள் நுழைந்த காட்டு யானை காலையில் மைசூரு சாலையில் நுழைந்து முதுமலை நோக்கி சென்றது. இதை பார்த்த தெரு நாய் பின் தொடர்ந்து விரட்டியது. யானை அச்சத்துடன் சாலையில் ஆக்ரோஷமாக ஓடி தொரப்பள்ளி வன சோதனையை கடந்து முதுமலைக்குள் சென்றது. இந்நிலையில், யானையை தெருநாய் விரட்டி சென்றதை பார்த்த மக்கள் ஆச்சரியமடைந்தனர்.

error: Content is protected !!