Tamilnadu

News January 14, 2026

கரூரில் ரூ.300 கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

image

கரூர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? <>இங்கு க்ளிக்<<>> செய்து (Bharatgas, indane, HP) எந்த நிறுவனம் என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், ஐஎப்எஸ்சி கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் CREDITED குறுஞ்செய்தி வரும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News January 14, 2026

திண்டுக்கல்: ரூ.300 கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

image

திண்டுக்கல் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? <>இங்கு க்ளிக் <<>>செய்து (Bharatgas, indane, HP) எந்த நிறுவனம் என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், ஐஎப்எஸ்சி கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் CREDITED குறுஞ்செய்தி வரும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News January 14, 2026

JUST IN: திருப்பத்தூரில் உடல் சிதறி பலி!

image

திருப்பத்தூர்- ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு இடையே இன்று (ஜன.14) சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது முதியவர் மீது அவ்வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 14, 2026

நாமக்கல்-சேலம் சாலையில் பயங்கரம்!

image

நாமக்கல்-சேலம் சாலை, சாமிநகரைச் சேர்ந்த மாட்டு வியாபாரி குருநாதன் (70). இவர் தனது டூவீலரில் சேலம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் குருநாதன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 14, 2026

தேனி : NO EXAM… போஸ்ட் ஆபீஸில் வேலை ரெடி..!

image

தேனி மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு இங்கு <>கிளிக் செய்து<<>>, விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 14, 2026

வேலூர் சிறையில் இருந்து பரோலில் சென்ற 16 கைதிகள்

image

வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் மத்திய சிறையில் பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட பரோல் கேட்டு 30-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களின் விண்ணப்பங்கள் சிறைத்துறை உயர் அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டது. இதில் நேற்று மதியம் வரை 16 கைதிகளுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அவர்கள் சிறையில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News January 14, 2026

கள்ளக்குறிச்சி: நிரந்தர பந்தல் அமைக்க ரூ.3 லட்சம் மானியம்!

image

கள்ளக்குறிச்சி மக்களே, பீர்க்கன், பாகல், புடலை உள்ளிட்ட கொடி வகை காய்கறிகளுக்கு பந்தல் அமைக்க செலவு அதிகம் என்ற கவலை இனி வேண்டாம். தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், நிரந்தர பந்தல் அமைத்து காய்கறிகள் / பழங்களை சாகுபடி செய்ய ரூ.3 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் பயனாளிகள் அருகில் இருக்கும் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம். SHARE பண்ணுங்க!

News January 14, 2026

திருச்சி: டிஜிட்டல் டிக்கெட்டுகளுக்கு தள்ளுபடி அறிவிப்பு

image

ரயில் ஒன் செயலி மூலம் பெறப்படும் முன்பதிவு இல்லா டிக்கெட்டுகளுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், ரயில் ஒன் செயலி மூலம் ட
பெறும் முன் பதிவில்லா டிக்கெட்டுகளுக்கு 3% தள்ளுபடி வழங்கப்படும். இந்த சலுகை இன்று (ஜன.14) முதல் ஜூலை.14 வரை அமலில் இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 14, 2026

வேலூர் மாவட்டம் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு

image

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வேலூர் மாவட்டம் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், இன்று (ஜன-14) முதல் 17-ம் தேதி வரை இந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என மாவட்ட காவல்துறையின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 14, 2026

BREAKING: கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

image

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று (ஜன.14) மீண்டும் ஒரு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டல் வந்ததை தொடர்ந்து, வெடிகுண்டு செயலிழப்பு மற்றும் தடுப்புப் பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இது கடந்த சில மாதங்களில் விடுக்கப்படும் 29-வது மிரட்டல் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!
↑