Tamilnadu

News January 14, 2026

உழவர் சந்தையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

image

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இன்று சமத்துவ பொங்கல் விழா கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் விவசாயிகள் மற்றும் உழவர் சந்தையில் பணியாற்றும் பணியாளர்கள் என பலரும் புது பானையில் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர்.

News January 14, 2026

செங்கல்பட்டு காவல்துறை சார்பில் போகி வாழ்த்துக்கள்

image

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட மக்களுக்கு இன்று (14.01.2026) இனிய போகித் திருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. பழையன கழிந்து புதியன புகும் இந்நாளில், டயர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதைத் தவிர்த்து, புகையில்லா போகி கொண்டாடி சுற்றுச்சூழலைப் பாதுகாக்குமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

News January 14, 2026

மெட்ரோ பயணிகள் கவனத்திற்கு…

image

சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளை (15.01.2026) மற்றும் ஜன.16, 17 தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை சேவை தொடரும். காலை 5–12 மணி மற்றும் இரவு 8–10 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும், மதியம் 12–இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும், இரவு 10–11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படும். ஷேர் பண்ணுங்க

News January 14, 2026

ராணிப்பேட்டை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொங்கல் கலைவிழா வரும் ஜனவரி 15, 16 தேதிகளில் நடைபெற உள்ளது. முத்துக்கடை பேருந்து நிலையம் மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெறும் இந்நிகழ்வில் பரதநாட்டியம் மற்றும் நாட்டுப்புறக் கலைகள் இடம்பெறும். இதில் 100-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று காலை நிகழ்ச்சிகள் நடத்த உள்ளனர். இதில் அனைத்து பொதுமக்களும் வருகை தந்து சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

News January 14, 2026

80 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம்

image

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சேலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் பணியாற்றி வரும் 80 காவல் ஆய்வாளர்களை (Inspectors) இடமாற்றம் செய்து சேலம் சரக டி.ஐ.ஜி (DIG) சந்தோஷ் ஹடிமணி இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News January 14, 2026

ராணிப்பேட்டை: பூட்டிய வீட்டில் வாலிபர் பிணம்

image

நந்தியாலம் அடுத்த குறிஞ்சி நகரை சேர்ந்தவர் விக்னேஷ் (28). இவர் இன்று (ஜன.14) பூட்டப்பட்டிருந்த வீட்டில் தூக்கில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து அப்பகுதி மக்கள் இன்று இரத்தினகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 14, 2026

தஞ்சையில் குறைதீர்க்கும் கூட்டம் – ஆட்சியர் அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற பிப்.13-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்க விரும்பும் ஓய்வூதியர்கள், தங்கள் கோரிக்கை மனுக்களை உரிய விவரங்களுடன் இம்மாதம் ஜன.30ஆம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News January 14, 2026

அரியலூர்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

அரியலூர் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே க்ளிக் செய்து<<>> இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 14, 2026

அரியலூர்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

அரியலூர் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே க்ளிக் செய்து<<>> இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 14, 2026

பெரம்பலூர்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

பெரம்பலூர் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <>க்ளிக்<<>> செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!
↑