India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வந்த நா.புகழேந்தி மறைவெய்திய நிலையில், கௌதம் சிகாமணி விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
மேலும், ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பை வெளியிட்டார்.
மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி பகுதிகளைச் சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் சபாநாயகர் அப்பாவுவை இன்று (ஜூன் 11) நேரில் சந்தித்து மனு அளித்தனர். மாஞ்சோலை எஸ்டேட் மக்கள் தொடர்ந்து அந்த பகுதியிலேயே குடியிருக்க ஏதுவாக எஸ்டேட் நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: திருச்சி மாநகரத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று 50,655 கிலோ தூசி மற்றும் வண்டல் நீக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 25 தினத்திலிருந்து ஜூன் 9 வரை மொத்தம் 42.5 கிலோமீட்டர் கால்வாய் தூர்வாரும் பணியும், ஸ்ரீரங்கம் பகுதியில் இன்று(ஜூன் 11) 12 மரக்கன்றுகள் நடும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை அதிகளவு கொண்டு வந்து விடுவதால் பேருந்தில் வரக்கூடிய நோயாளிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இதற்கு மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விக்கிரவாண்டி திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா (மாநில விவசாய அணிச் செயலாளர்) அறிவிக்கப்பட்டுள்ளார். மற்றக் கட்சிகளை விட திமுக தேர்தல் பணியை வேகமாக முடுக்கிவிட்டுள்ளது. ஜெயலலிதா பாணியில் வேட்பாளர்களை முன்னதாகவே அறிவித்து திமுக தேர்தல் பணியில் உடனே இறங்கியுள்ளது. முன்னதாக விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளராக பொன்முடி மகன் கௌதம சிகாமணியை அறிவித்து திமுக அதிரடி காட்டியது குறிப்பிடத்தக்கது.
தென்காசி மின் பெயர் பொறியாளர் அலுவலகத்தில் இன்று மாதாந்திர மக்கள் குறைதீர்க்கும் நார் கூட்டம் நடைபெற்றது. மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ் தலைமை தாங்கி பொதுமக்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். கோட்ட செயற்பொறியாளர் கற்பக விநாயகம் மற்றும் உதவிப் பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் ராமன்புதூர் கோல்டன் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக நேசமணி நகர் போலீசாருக்கு தகவலை சென்றது. இதையடுத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் அங்கு 40 வயது பெண்ணும், ஜெகன் ஜோஸ்(39) என்பவரும் பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரிந்தது. ஜெகன் ஜோஸ் கைது செய்யப்பட்டு, பெண் காப்பகம் அனுப்பப்பட்டார். 2 புரோக்கர்களை தேடி வருகின்றனர்.
மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் ஆலயத்தின் 118வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக ஜூன் 11 – ஜூன் 14 வரை சென்னை எழும்பூர்-சேலம் எக்ஸ்பிரஸ் ரயில், சேலம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஜூன் 13ல் புதுச்சேரி-மங்களூரு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் ஜூன் 15ல் யஷ்வந்த்பூர்-புதுச்சேரி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் மேல்நாரியப்பனூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் பிரதான அருவியல் இன்று (ஜூன் 11) தண்ணீர் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் குளிர்ந்த காற்று வீசுகிறது. வேலை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை சற்று குறைவாகவே காணப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குற்றாலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேனி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தங்கதமிழ்ச்செல்வன் எம்.பி.- ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எம்.பி-யாக பதவியேற்ற நிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக உயர்நிலை செயல் திட்ட தலைவருமான எல்.மூக்கையாவை இன்று மரியாதை நிமித்தமாக தங்கதமிழ்ச்செல்வன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Sorry, no posts matched your criteria.