Tamilnadu

News June 16, 2024

விவசாயிகளுக்கு ஆட்சியர் அளித்த தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் மண்வளத்தை அதிகரிக்க  கோடை காலத்தில், விவசாய பெருமக்கள் பசுந்தாள் உரப்பயிர் சாகுபடியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டால், பருவ காலத்தில் சாகுபடி செய்யக்கூடிய பயிர்களில் அதிக விளைச்சலைப் பெறலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News June 16, 2024

மதுரையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

image

மதுரை மாநகராட்சி வைகை கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாய்களில் இணைப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் வரும் 19ஆம் தேதி வார்டு எண்.10 முதல் 16 வார்டுகள் மற்றும் வார்டு எண்.21 முதல் 35 வரை உள்ள ஆகிய வார்டு பகுதிகளுக்கும், வரும் 21ம் தேதி வைகை தென்கரை பகுதிகளான வார்டு எண் 46, 47, 48, 49, 53, 70, 72 74 வரை உள்ள ஆகிய வார்டுப் பகுதிகளுக்கு குடிநீர் நிறுத்தம் செய்யபடுவதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

News June 16, 2024

குமரி; கல்லூரி திறப்பு தேதி வெளியானது

image

தற்போது இரண்டாம் ஆண்டுக்கு செல்லும் மாணவர்களின் கல்லூரி திறப்பு தேதி குறித்து அறிவிப்ப வெளியாகியுள்ளது. அதன்படி வரும் 19.6.2024 அன்று இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி திறக்கப்படும் என்று கோணம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தெரிவித்துள்ளது. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் அன்று திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 16, 2024

காவல்துறையினருக்கு முக்கிய அறிவுரை!!

image

மதுரை மாநகர் போக்குவரத்து துணை கமிஷனர் குமார் இன்று வெளியிட்ட அறிக்கையில், மதுரை மாநகரில் ‘நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் காவல்துறையினர் அனைவரும் கண்டிப்பாக சீட் பெல்ட், ஹெல்மெட் அணிய வேண்டும். மீறும் பட்சத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்படும்’ என கடுமையாக எச்சரித்துள்ளார்.

News June 16, 2024

ரவுண்டானாவில் கொடி கட்டினால் நடவடிக்கை -ஆட்சியர்

image

நாகர்கோவில் ஆட்சியரகம் பகுதியில் உள்ள ரவுண்டானாவைச் சுற்றி, கட்சி தலைவர்கள் வரும்போது கட்சியினர் கொடி தோரணங்களை கட்டி வந்தனர். இதனால் ரவுண்டானாவின் அழகு பாதித்தது. இதை தடுக்கும் வகையில் ரவுண்டானாவில் அரசியல் கட்சிகள் கொடிகள் கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஆட்சியர் ஸ்ரீதர் பிறப்பித்துள்ளார். இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

News June 16, 2024

முகூர்த்த நாளை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு

image

முகூர்த்த நாள் மற்றும் வரத்து குறைவு காரணமாக சென்னையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக, மல்லிகைப் பூவின் விலை 2 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ. 700 – ரூ.800 என்ற அளவில் விற்பனையாகி வந்த நிலையில், இன்று ஒரு கிலோ ரூ.1,200 ரூ.2,000 வரை விற்பனை செய்யப்பட்டது. முல்லைப்பூ ரூ.500க்கும், ஜாதி மல்லி ரூ.600க்கும் விற்பனையாகிறது.

News June 16, 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பது ஏன்?; ஈபிஎஸ்

image

“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜனநாயக படுகொலை நடைபெற்றது. வாக்காளர்களை பட்டியில் அடைப்பது போல் அடைத்து திமுகவினர் முறைகேட்டில் ஈடுபட்டனர். தேர்தல் ஆணையம், அதிகாரிகள், காவல்துறையினர் திமுகவுக்கு துணையாக இருக்கின்றனர். மேலும், திமுக ஆட்சியில் சுதந்திரமாக மக்கள் வாக்களிக்க முடியாத நிலை உள்ளது. இதனால்தான் நாங்கள் விக்bகிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம்” என அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் கூறியுள்ளார்

News June 16, 2024

சர்ச்சை அகில இந்திய வானொலியில் தமிழ் நீக்கம்!

image

சென்னையில் இயங்கி வரும் அகில இந்திய வானொலி செய்தி நிறுவனம் தொடங்கப்பட்டு 86 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. தமிழில் வானொலி அறிவிப்பு வெளியாகத் தொடங்கி ஏறத்தாழ நூறாண்டுகள் நெருங்கிவிட்ட நிலையில், சென்னை வானொலி நிலையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தமிழ் மொழி நீக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில், அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளில் 9 மொழிகளுக்கு மட்டுமே இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

News June 16, 2024

தஞ்சாவூர் மாவட்ட நீரிழிவு நோயாளிகள் விபரம்

image

தஞ்சாவூர் மருத்துவகல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் கூறுகையில், “மாவட்டத்திலுள்ள சுகாதார களப்பணியாளர்கள் மற்றும் 77 ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் மூலம் நீரிழிவு நோயாளிகளின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 1,75,000 பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. 3,000 பேருக்கு காலில் புண் ஏற்படுவதற்கான அறிகுறிகளும், 2,500 பேருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலையும் உள்ளது” என தெரிவித்தார்.

News June 16, 2024

குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க பொதுக்குழு கூட்டம்

image

குன்னூர் ஒய்.எம்.சி‌.ஏ அரங்கில் குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க 35வது பொது குழு கூட்டம் இன்று நடைபெற்றது. சங்க தலைவர் சு.மனோகரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் குன்னூர் ரயில்வே கேட் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றி அந்த பகுதியில் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் செயலாளர் ஆல்துரை மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

error: Content is protected !!