India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 7,761 மாணவர்கள் 7,931 மாணவிகள் என 15,692 பேர் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில் 7,372 மாணவர்கள், 7,749 மாணவிகள் என 15,121 பேர் தேர்ச்சி அடைந்தனர். மாவட்டத்தில் உள்ள 138 அரசு பள்ளிகளில் 64 பள்ளிகள், அரசு உதவி பெறும் 49 பள்ளிகளில் 17 பள்ளிகள், 75 மெட்ரிக் பள்ளிகளில் 52 பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்தன.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் 10ம் வகுப்பு தேர்வில் 496 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.கடலூர் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் பள்ளி மாணவி சங்கீதா 496 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தார்.அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘காலை 5 மணிக்கு எழுந்து படிப்பேன்.மாதத் தேர்வையும் பொதுத் தேர்வாக எண்ணிப் படித்தேன் என கூறினார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 94 அரசு பள்ளியில் 2984 மாணவர்களும், 3886 மாணவிகளும் ஆக மொத்தம் 6870 பேர் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதியதில் மாணவர்கள் 2570 பேரும் மாணவிகள் 3666 பேரும் என மொத்தம் 6236 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி 86.13 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி 94.34 சதவீதமாகவும், அரசு பள்ளிகளின் தேர்ச்சி 90.77 சதவீதமாகவும் உள்ளது.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா பொதக்குடி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 10ம் தேர்வு எழுதிய மாணவிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளியில் முதல் மாணவியாக மு.பஹிமா 500க்கு 480 மதிப்பெண்ணும், இரண்டாம் இடத்தில் நூர் அஃபிலா 500க்கு 476ம் மூன்றாவதாக த.மு.ராயிகா 500க்கு 475 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மதியநல்லூர் அரசு உயர் நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 % தேர்ச்சி பெற்றது. இப்பள்ளியானது தொடர்ந்து 12 ஆண்டுகளாக 100% சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இப்பள்ளியின் மாணவன் பவிக்சாத் 464 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். இப்பள்ளியின் தொடர் வெற்றியை பாராட்டி இன்று பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் இராமசாமி ஆசிரியர், மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நாமக்கல் அருகே முத்துடையார்பாளையத்தை சேர்ந்த மாணவி ஹரிணி புதன்சந்தை ஸ்ரீ சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து 10ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். தேர்ச்சி பெற்ற மாணவி ஹரிணி 500க்கு 494 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதல் மாணவியாக இடம் பிடித்துள்ளார். மாணவி ஹரிணிக்கு ஊர் மக்களும் பள்ளி நிர்வாகத்தினரும் பாராட்டி மகிழ்ந்தனர்.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா கடந்த 7ஆம் தேதி உதகை வந்தார். ஒரு தனியார் பங்களாவில் தங்கி இருந்து ஓய்வு எடுத்தார். அவர் இன்று உதகையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பெங்களூர் புறப்பட்டுச் சென்றார். AICC உறுப்பினர் விவேக் லஜபதி, மாநில காங்கிரஸ் செயலாளர் நாகராஜ், மாவட்ட செயலாளர்கள் எஸ்.எம்.ரபீக், மானேக் சந்திரன், ரவிக்குமார் மற்றும் காங்கிரசார் மலர் கொத்து வழங்கி வழியனுப்பி வைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட அரசு மாதிரிப்பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் தேர்வு எழுதிய 76 மாணவ, மாணவியர் தேர்ச்சி அடைந்ததுடன் 495 மதிப்பெண் பெற்று ஒரு மாணவர் முதலிடத்தையும், 2 மாணவர்கள் 494 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடமும் பெற்றுள்ளனர். கணிதம் பாடத்தில் 20 பேர், அறிவியல் பாடத்தில் 11 பேர், சமூக அறிவியலில் 9 பேர் சதம் அடித்து சாதனை செய்துள்ளனர்.
வைகை அணையில் இருந்து 3000 கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்மாய்களில் நீரை தேக்கி வைத்து, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்குவதற்காக வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை ஆற்றில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அரசு பள்ளியின் தேர்ச்சி சதவீதம் வெளியாகியுள்ளது. புதுச்சேரி அரசு பள்ளியில் 81.72% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 75.61% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 87.43 % தேர்ச்சி அடைந்துள்ளனர். காரைக்கால் அரசு பள்ளியில் 65.42 % தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 56.89 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 73.89 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.