Tamilnadu

News May 11, 2024

நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (மே.11) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.

News May 11, 2024

கோடை மழை: இதை மட்டும் செய்யாதீங்க!

image

திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட அதிகாரிகள் விடுத்துள்ள செய்தி குறிப்பு: திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அவ்வப்போது இடி மின்னலுடன் கோடை மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இந்த மின்னலுடன் மழை பெய்யும்போது பொதுமக்கள் மின்பாதைகள், டிரான்ஸ்பார்மர், மின் சாதனம் உள்ள இடங்கள் மற்றும் மரங்கள் போன்றவற்றின் கீழ் நிற்பதை தவிர்க்க வேண்டும். பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

News May 11, 2024

பெரம்பலூர் அருகே கார் மோதி பலி!

image

பெரம்பலூர் மாவட்டம் கவர்ப்பனையை சேர்ந்தவர் செல்வராஜ்(40). இவர் அங்குள்ள பேக்கரி கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம்(மே 9) டூவீலரில் மனைவி ஜெயலட்சுமியுடன் மரவநத்தத்ததிற்க்கு சென்று கொண்டிருந்தார். நெய்க்குப்பை அருகே சென்றபோது கார் எதிர்பாராத விதமாக செல்வராஜ் ஓட்டி வந்த டூவீலர் மீது மோதியதில் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 11, 2024

நரிக்குறவர் மாணவர்களுக்கு வரவேற்பு

image

சிவகங்கையில் பழமலை நகரில் 300க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியைச் சேர்ந்த துரைப்பாண்டி மன்னர் மேல்நிலைப் பள்ளியிலும் தனுஷ் கே. ஆர் மேல்நிலைப் பள்ளியிலும் பத்தாம் வகுப்பு படித்து வந்தனர் இவர்கள் தேர்வு முடிவில் நல்ல மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இதை எடுத்து நேற்று அந்த மாணவர்களை அப்பகுதி பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்

News May 11, 2024

தென்காசியில் கனமழை..!

image

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை தென்காசி உட்பட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

News May 11, 2024

தி.மலை மாவட்டம் அரசு பள்ளிகள் அசத்தல்

image

தி.மலை மாவட்டம், சென்ற மாதம் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடந்தது.நேற்று தமிழ்நாடு அரசு பள்ளி தேர்வு துறையால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தி.மலை மாவட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் 31 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

News May 11, 2024

அரியலூர்: நகர பேருந்து மோதி விபத்து

image

ஜெயங்கொண்டத்திலிருந்து செந்துறை நோக்கி சென்ற மாநகரப் பேருந்து வாரியங்காவல் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விட்டு புறப்பட்ட சிறிது நேரத்தில் எதிரே வந்த பொக்லைன் வாகனத்தில் நேருக்கு நேர் மோதி விபத்து நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் எந்த சேதமும் இல்லை. சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

News May 11, 2024

வேலூர் அரசு மருத்துவ கல்லூரியில் செவிலியர் தின விழா

image

வேலுார் அடுக்கம்பாறை அரசு நர்சிங் பள்ளியில் உலக நர்சிங் தினவிழா நேற்று (மே 10) நடந்தது. இந்த விழாவிற்கு துணை கண்காணிப்பாளர் ரதிதிலகம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சுகாதாரத்துறை இணை இயக்குநர் பாலசந்தர் கலந்துகொண்டார். இதில் மருத்துவ கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ராஜவேலு, பள்ளி முதல்வர் உமா ராணி, துணை முதல்வர் ரகுபதி, குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

News May 11, 2024

முதலிடம் பிடித்த மாணவிக்கு இருசக்கர வாகனம் பரிசு

image

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் கோட்டார் வாகையடி தெருவை சேர்ந்தவர் வடிவேல் முருகன். இவர் மிட்டாய் கடையில் பணிபுரிந்து வருகிறார்.  இவரது மகள் நந்தினி தனியார் பள்ளியில் 495/500 பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இதையடுத்து  இந்த மாணவிக்கு நேற்று கலப்பை மக்கள் இயக்க தலைவரும், திரைப்பட டைரக்டருமான செல்வகுமார் நேரில் சந்தித்து இருசக்கர வாகனத்தை பரிசாக வழங்கினார்.

News May 11, 2024

பணம் வைத்து சேவல் சண்டை : 8 பேர் கைது

image

நாகமலை புதுக்கோட்டை அருகே ராம்கோ நகரில், நேற்று மாலை சேவல் சண்டை நடப்பதாக அறிந்த எஸ் ஐ சுதன் அங்கு சென்றார். பணம் வைத்து சேவல் சண்டை, சூதாட்டம் நடத்திய ஜெயக்குமார், பாலமுருகன், பிரபாகரன், தில்சன், பன்னீர்செல்வம், கார்த்திக், தங்கவேலு, பாண்டி, என 8 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 7 டூவீலர்கள், சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

error: Content is protected !!