India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் கல்வராயன் மலை மற்றும் தியாகதுருகம் வட்டாரங்களின் வளர்ச்சி குறித்த ஆய்வுக் கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.தனபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதுகை மாவட்டத்தில் 1433 பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நேற்று தொடங்கியது. புதுகை வட்டாட்சியரகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் வருவாய்த்துறையினரின் நிலஅளவைக் கருவிகள், சங்கிலிகள் காட்சிப்படுத்தப்பட்டன. அவற்றை ஆட்சியர் மெர்சி ரம்யா பார்வையிட்டார். அப்போது
நெடுஞ்சாலை நிலமெடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், வட்டாட்சியர் பரணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கம்பைநல்லுர் அடுத்த பட்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை(65). விவசாயியான இவர் கடந்த மாதம் மே 30ஆம் தேதி டிராக்டர் உழவுப் பணியின் போது தவறி கிணற்றில் விழுந்து படுகாயம் அடைந்தார். அவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் நாகல் நகர் சந்தை ரோடு பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெறும் மராமத்து பணிகளை நேற்று மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் மாமன்ற உறுப்பினர் சுபாஷினி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று(ஜீன் 19) காவல் கண்காணிப்பாளர் தலைமையில் குறைத்தீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் மனு அளித்து நடவடிக்கை எடுக்காமல் மற்றும் திருப்தி பெறாத புகார் மனுதாரர்கள் எஸ்பியை நேரில் சந்தித்து மனு அளிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜான் தெரிவித்துள்ளார்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் மே மாதத்திற்குரிய துவரம் பருப்பு, பாமாயில் பெற்றுக் கொள்ளாதவர்கள் ஜூன் மாதம் முழுவதும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் பெற்றுக் கொள்ளலாம் என உணவு வழங்கல் துறை அறிவித்துள்ளது. மே மாதம் வாங்க தவறியவர்கள் தங்கள் குடும்ப அட்டைக்கு தேவையான பொருட்களை வாங்கி பயனடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படைக்கு அக்னி வீர் வாயு திட்டம் மூலம் ஆட்கள் சேர்க்கைக்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 16 முதல் 20 வயதுடைய ஆண்கள், பெண்கள் எழுத்துத் தேர்வுக்கு https://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் மூலம் ஜூலை.8 முதல் ஜீலை. 28 வரை விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மின்துறை ஐடிஐ நலச் சங்க பொதுச் செயலாளர் ரவி வெளியிட்டுள்ள செய்தியில், மின் துறையில் 750 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. கூடுதல் பணி சுமை காரணமாக ஊழியர்கள் பராமரிப்பு பணி மேற்கொள்ளும் போது கவனம் சிதறி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே தொழிலாளருக்கான காப்பீடு திட்டத்தை அரசு சார்பில் கொண்டு வர வேண்டும் என்றார்.
இந்திய பிரதமர் பி எம் கிஷான் 17வது தவணைத் தொகையினை விடுவித்தார்.நாமக்கல் துறையூர் சாலையில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம் காணொளி மூலம் நிகழ்ச்சியைக்கான ஏற்பாடு செய்யப்பட்டது.இதில் மத்திய தொழிலாளர் நலன் வேலைவாய்ப்புத்துறை மற்றும் சிறுகுறு தொழில்துறை அமைச்சர் சோபா கரந்தலஜே இன்று பங்கேற்று விவசாயிகளுடன் காணொளியை பார்வையிட்டார்
தேனி மாவட்டத்தில் உள்ள 1,01,800 கால் நடைகளை கோமாரி நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் நோக்கத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தில் ஜூன் 10 முதல் 30 வரை 21 நாட்கள் மாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது. இதுவரை 38,960 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 62,840 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.