Tamilnadu

News January 20, 2026

இராம்நாடு: கடன், வறுமை, தடை நீக்கும் முருகன் கோவில்!

image

தேவிபட்டினம், பெருவயல் விலக்கு அருகே உள்ளது ரண பலி முருகன் கோயில். பெருவயல் வந்த வாரியார் சுவாமிகள், “நான் எத்தனையோ தலங்களில் முருகனை தரிசித்திருக்கிறேன். ஆனால் வேலில் முருகன் உருவம் பதித்திருப்பதை பெருவயல் கோயிலில்தான் கண்டேன்”. இந்த வேலை வழிபாடு செய்வதால் பக்தர்கள் வாழ்வில் உள்ள கடன், வறுமை, சுபகாரியத் தடை, எதிரிகளின் தொல்லை போன்ற சத்ருக்களை இந்த வேல் சம்காரம் செய்கிறது என கூறியுள்ளார். *SHARE

News January 20, 2026

வேலூரில் விபத்தில் தூக்கி வீசப்பட்ட உடல்!

image

மேல்பாடி அடுத்த வெப்பாலை கிராமத்தில் நேற்று (ஜன.19) தனியார் பள்ளி பேருந்து அவ்வழியே சென்ற இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேல்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 20, 2026

தஞ்சை: வசமாக சிக்கிய குற்றவாளி

image

பாபநாசம் தெற்கு ராஜ வீதியில் உள்ள செல்போன் கடையில் கடந்த 16ஆம் தேதி பூட்டை உடைத்து திருடிய வழக்கில் போலீசார் CCTV பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரனை மேற்கொண்டனர். இதனையடுத்து, குற்றவாளியான ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த முகேஷ் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 24 செல்போன்கள், 5 Air Buds ஆகியற்றை பறிமுதல் செய்தனர்.

News January 20, 2026

கடலூர்: தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

image

தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தொழிற்பழகுநராக சேர்க்கை செய்திட மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் கடலூர், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்டத் திறன் பயிற்சி அலுவலகத்தில் வருகின்ற 21.01.2026 அன்று காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது. இதில், மாவட்டத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட அரசு மற்றும் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 20, 2026

புதுவை: சீனியர் எஸ்.பி-க்களுக்கு பறந்த உத்தரவு

image

சீனியர் எஸ்.பி லட்சுமி சவுஜன்யா, நித்யா ராதாகிருஷ்ணன் மற்றும் 16 சீனியர் எஸ்.பி-க்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள புதுவையில் உள்ள மொத்த காவல் நிலையங்களிலும் ஆண்டு ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.‌ மேலும் இந்த ஆய்வறிக்கையை 6 பிரதிகளாக தயார் செய்ய வேண்டும். பிப்.15-க்குள் இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்று காவல்துறை தலைமையக சீனியர் எஸ்.பி அனில்குமார் லால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News January 20, 2026

திருச்சி: பள்ளி பேருந்து மோதி மாணவி படுகாயம்

image

திருவெறும்பூர் அடுத்த கூத்தைப்பார் பகுதியில், தனியார் பள்ளி பேருந்து ஒன்று முன்னே சென்று கொண்டிருந்த ஸ்கூட்டர் மீது மோதியது. ஒதில், ஸ்கூட்டரை ஒட்டிச்சென்ற கல்லூரி மாணவி நர்மதா என்பவர் படுகாயமடைந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், விபத்தை ஏற்படுத்திய பள்ளி பேருந்தை போலீசார் பறிமுதல் செய்து, வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 20, 2026

பெரம்பலூர்: வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

image

பெரம்பலூரில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டல் மையத்தில் சிறிய அளவிலான, தனியார்த் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற ஜன.23-ம் தேதி அன்று நடைபெறவுள்ளது. எனவே இந்த தனியார்த் துறை வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறும் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அழைப்பு விடுத்துள்ளார்.

News January 20, 2026

நாகை: காதலியின் அப்பாவை தாக்கிய காதலன்

image

வேதாரணியம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கோடியக்காடு பகுதியை சேர்ந்தவர் தனுஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்வரின் மகளை அதே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனுஷ்க்கும் கார்த்திகேயனுக்கு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கார்த்திகேயனை தனுஷ் வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக அளித்த புகாரின் பாடி, வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

News January 20, 2026

தேனியில் இளம் பெண் தற்கொலை..!

image

தேனி பகுதியை சேர்ந்தவர் கார்த்திகா (27). இவருக்கு அவ்வப்போது தீராத வயிற்று வலி ஏற்பட்டு அதற்கு சிகிச்சை எடுத்தும் பலனளிக்காத காரணத்தினால் வலியின் வேதனையில் இருந்து வந்த கார்த்திகா சில தினங்களுக்கு முன்பு விஷ விதைகளை சாப்பிட்டுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று முன்தினம் (ஜன.18) அவர் உயிரிழந்தார். இது குறித்து அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News January 20, 2026

மதுரை: வாயில் நுரை தள்ளி இளைஞர் உயிரிழப்பு

image

மதுரை நாராயணபுரத்தை சேர்ந்தவர் மணி மகன் முத்துக்குமார்(40). திருமணமாகாத இவர், இஸ்திரி வேலை செய்து வந்தார். நேற்று மது போதையில் வரியேனந்தலில் உள்ள அவரது நண்பர் வீரணன் வீட்டிற்கு வந்து படுத்து தூங்கியுள்ளார். இன்று காலை வாயில் நுரை தள்ளியபடி அவர் இறந்து கிடந்தார். இது குறித்த சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்து ஊமச்சிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!
↑