Tamilnadu

News July 6, 2025

கால் மாற்றி அறுவை சிகிச்சை விசாரணைக்கு உத்தரவு

image

விழுப்புரம் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த நடத்துநர் மாரிமுத்துவிற்கு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் வலது காலில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து நான்கு பேர் கொண்ட மருத்துவக் குழு விசாரணை செய்ய இன்று ஜூலை 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

News July 6, 2025

அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் விசாரணை – எஸ்.பி உத்தரவு

image

அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் மற்றும் யுவராஜ் ஆகியோர் வழக்கு ஒன்றுக்காக அலங்காநல்லூர் காவல்நிலையம் வந்தபோது, காவலர்களால் தாக்குதல் நடத்தியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் மாவட்ட காவல்துறை எஸ்.பி உத்தரவின் பேரில் சமயநல்லூர் டி.எஸ்.பி விசாரணை மேற்கொள்வார் என பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

News July 6, 2025

தி.மலை பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

image

திருவண்ணாமலையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளிக்கும் ஸ்ரீ அண்ணாமலையார் சமேத உண்ணாமலை அம்மன் திருக்கோவிலில் ஆனி மாத பௌர்ணமி கிரிவலம் வரும் ஜூலை 10, வியாழக்கிழமை காலை 2.26 மணிக்கு தொடங்கி ஜூலை 11, வெள்ளிக்கிழமை காலை 3.11 மணிக்கு முடிவடையும் என்று ஸ்ரீ அண்ணாமலையார் திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

News July 6, 2025

இலவசமாக நாட்டுப்புறக்கலையை கற்றுக்கொள்ளுங்கள்!

image

சேலம்: தளவாய்பட்டியில் உள்ள மண்டல கலை பண்பாட்டு மையத்தில் மாணவர் சேர்க்கை, வரும், 10ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. தப்பாட்டம், சிலம் பாட்டம், உள்ளிட்ட நாட்டுப்புற கலைகள் இலவசமாக கற்றுத்தரப்படும் என கலெக்டர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். இதில் கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், இல்லத்தரசிகள் சேரலாம். விண்ணப்பங்கள், விபரங்களுக்கு, 0427 2906197, 99526 65007களில் தொடர்பு கொள்ளலாம்.

News July 6, 2025

பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் கடனுதவி பெற அழைப்பு

image

மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கடன் விண்ணப்பங்களை பெற்று, உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், கூட்டுறவு வங்கிகளில் சமர்ப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

News July 6, 2025

அச்சரபக்கம் ஏரியை காணவில்லை – மக்கள் கவலை

image

அச்சரப்பாக்கம் ஏரி பல ஆண்டுகளாக எந்த பராமரிக்கும் இல்லாததால் செடி கொடிகள் முட்கள் காடுகளாக மாறி காட்சியளிக்கிறது. இந்த இடம் சமூக விரோதிகளால் ஆக்கிரமிப்புகள் செய்யும் இடமாக மாறிவிட்டது. நீர்நிலை பறவைகள் சரணாலயமாக இருந்த இடம், அரசு கவனக்குறைவால் இப்படி மாறிவிட்டதை கண்டு பொது மக்கள் மிகவும் கவகையில் உள்ளனர். அரசு இதனை சரி செய்தால், சுற்றுலாத்தலமாக மாறலாம் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

News July 6, 2025

பட்டாசு வெடி விபத்து ஒரு சாபக்கேடு – பிரேமலதா விஜயகாந்த்

image

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு வெடி விபத்தில் ஆலையின் உரிமம் ரத்து என்பது கண் துடைப்பாக இல்லாமல் இனி வரும் காலங்களில் விபத்து ஏற்படாத வகையில் சட்டம், அரசாணை பிறப்பிக்க வேண்டும். பட்டாசு வெடி விபத்து விருதுநகர் மாவட்டத்திற்கு ஒரு சாபக்கேடாக உள்ளது. பட்டாசு தொழிலாளர்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

News July 6, 2025

ராமநாதபுரம் சர்ச்சை பேச்சு குறித்து அன்வர் ராஜாவின் விளக்கம்

image

முன்னாள் எம்.பி. அன்வர் ராஜாவின் பேச்சு தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு அவரது தரப்பு விளக்கம் அளித்துள்ளது. தனியார் நாளிதழ் செய்தியாளரின் கேள்விக்கு, “பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததால் சிறுபான்மையினர் வாக்குகள் பெருமளவு கிடைக்காது, ஆனால் மாற்று சமூகத்தின் வாக்குகள் பெரும்பான்மையாக கிடைக்கும்” எனக் கூறியதாகவும், இதை தவறாக சித்தரித்து செய்தி வெளியிடப்பட்டதாகவும் அன்வர் ராஜா தரப்பு தெரிவித்துள்ளது.

News July 6, 2025

புதிய 25 வழித்தட பேருந்துகள் விவரம்

image

புதிய வழித்தட பேருந்துகள் விவரம்:
38A நாகர்கோவில்-புத்தன்துறை, 15L நாகர்கோவில்-யாக்கோபுரம், 15V நாகர்கோவில்-வடக்கன்குளம், 4BV நாகர்கோவில்-காற்றாடிவிளை, 38P நாகர்கோவில்-பிலாவிளை, 14E/V நாகர்கோவில்-முட்டம், 4H நாகர்கோவில்-திடல், 33C நாகர்கோவில்-கண்ணன்பதி, 4N நாகர்கோவில்-சுருளகோடு, 5/A நாகர்கோவில்-குளச்சல், 5D/PHS நாகர்கோவில்-வாணியாகுடி, 3 நாகர்கோவில்- கண்ணன்குளம்.

News July 6, 2025

மகளிர் உரிமைத்தொகை பெற நாளை முதல் விண்ணப்பம்

image

மகளிர் உரிமை தொகை பெற நாளை ஜூலை 7 முதல் விண்ணப்பங்கள் வீடு வீடாக விநியோகிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தின் கீழ் உள்ள தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்பம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை பெறாதவர்கள் உரிய ஆவணங்கள் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!