Tamilnadu

News April 12, 2025

சேலம்: தமிழில் பெயர் பலகை கட்டாயம்

image

சேலம் மாநகராட்சி கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர்.இளங்கோவன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஏப்.12) நடைபெற்றது. இதில் வரும் மே 15-க்குள் சேலம் மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிலையங்களில் பெயர் பலகைகள் கட்டாயமாக தமிழில் இடம்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. தவறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

News April 12, 2025

தூத்துக்குடி வாழைப்பழ அல்வா சுவைத்திருக்கிறீர்களா?

image

தூத்துக்குடியில், கிறிஸ்தவ பண்டிகை காலங்களில் செய்யும் ஒரு இனிப்பு பதார்த்தம் தான் வாழைப்பழ அல்வா. இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இந்த வாழைப்பழ அல்வா, நாட்டு வாழை, முந்திரி, நாட்டுச்சர்க்கரை, நெய் ஆகியவை கொண்டு தயாரிக்கப்படுகிறது. எவ்வித வேதிப்பொருள் கலக்காமல் தயாரிக்கப்படும் இந்த அல்வாவை, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுகின்றனர். நீங்கள் சுவைத்ததுண்டா?

News April 12, 2025

திருச்சி: திடீர் மின்தடையா ? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!

News April 12, 2025

பூர்வஜன்ம பாவம் நீக்கும் பிரம்மலிங்கேஸ்வரர்!

image

நாமக்கல்: கொக்கராயன்பேட்டையில் பிரம்மலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. சுமார் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயிலில் உள்ள ஈசன் சுயம்புவாகத் தோன்றியவர். பிரம்மதேவர் வழிபட்டதால், இறைவன் பிரம்ம லிங்கேஸ்வரர் என்னும் திருப்பெயர் கொண்டார். இவரை தரிசித்து வழிபட்டால், முன்ஜன்ம பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை. இத்தலத்தின் மகிமையை உணர்ந்த முதலாம் ஆதித்த சோழன், கோயிலுக்கு திருப்பணிகள் செய்திருப்பதாக சொல்கிறார்கள்.

News April 12, 2025

வேலூர்: இன்று கட்டாயம் செல்ல வேண்டிய கோவில்கள்

image

பங்குனிமாத சனிக்கிழமையில் வரும் பௌர்ணமி ரொம்ப ஸ்பெசல் தான். இன்றைய தினம் சிவனுக்கு பால் அபிஷேகம் (or) பூக்களால் அர்ச்சனை செய்தால் பல தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இன்று நீங்கள் செல்ல வேண்டிய சிவன் கோவில்கள் வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில், விரிஞ்சிபுரம் மார்க்கபந்தேஸ்வரர் கோவில், மகாதேவ மலை கோவில், குடியாத்தம் காசி விஸ்வநாதர் கோவில், வலவனூர் விஸ்வநாதீஸ்வரர் கோவில். *நண்பர்களுக்கும் பகிரவும்*

News April 12, 2025

கரூரில் ஒப்பந்த அடிப்படையில் அரசு வேலை !

image

கரூர் மாவட்டத்தில், ஊரகப் பகுதிகளில் திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மைப் பணிகள் மற்றும் IEC பணிகளுக்கும் புற சேவை நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முழு விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவத்தினைப் பெற, மாவட்ட மகமை கிராம சேவை மையக் கட்டிடம், காவல் நிலையம் அருகில், காசா காலனி, மாயனூர் என்ற முகவரியை அணுகவும். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க !

News April 12, 2025

புதுகை அஞ்சலகங்களில் ஆதார் சிறப்பு முகாம்

image

புதுகை தலைமை அஞ்சல் அலுவலகங்களில் வரும் 15ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை சித்திரை திருவிழா மெகா ஆதார் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பெயர், முகவரி, செல்போன் எண் திருத்தம் செய்து கொள்ளலாம். பயோமெட்ரிக் திருத்தம் செய்ய ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை மாவட்டத்திலுள்ள 31 துணை அஞ்சலகங்களில் நன்கு பயன்படுத்திக் கொள்ள கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

News April 12, 2025

தோஷங்கள் தீர்க்கும் பத்மகிரீஸ்வரர் !

image

திண்டுக்கல்: மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள பத்மகிரீஸ்வரர் கோயில் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலில் பத்மகிரீஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர். இந்தக் கோயிலில் வந்து வழிபட்டால் ராகு, கேது தோஷம் நீங்கி, திருமணத் தடை அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News April 12, 2025

திருவள்ளூர் மக்களே! இன்று கட்டாயம் போக வேண்டிய கோவில்

image

பங்குனிமாத சனிக்கிழமையில் வரும் பௌர்ணமி ரொம்ப ஸ்பெசல் தான். இன்றைய தினம் சிவனுக்கு பால் அபிஷேகம் (or) பூக்களால் அர்ச்சனை செய்தால் பல தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். செல்ல வேண்டிய சிவன் கோவில்கள் திருத்தணி வீரட்டேசுவரர் கோவில், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில், பூண்டி ஊன்றீஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவில். *நண்பர்களுக்கும் பகிரவும்

News April 12, 2025

திருமணத் தடை நீக்கும் அற்புத கோயில்

image

ஈரோடு, சென்னிமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1749 அடி உயர மலையின் மீது கம்பீரமாக அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக சுப்பிரமணியர் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமணத் தடை அகலும், குழந்தை பாக்கியம் கைகூடும், தீராத நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!