India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மாநகராட்சி 57-வது வார்டு ஜனசக்தி நகர் மக்கள், நில உரிமை தொடர்பான நீதிமன்ற வழக்கில் அரசு மற்றும் அரசியல் கட்சிகள் தங்களுக்கு உதவாததைக் கண்டித்து, 2026 சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். “ஓட்டுக் கேட்க யாரும் வரவேண்டாம்” என அவர்கள் வைத்துள்ள பேனர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை, கொத்தமங்கலப்பட்டியை சேர்ந்தவர் பண்டிசெல்வம்(41). இவர் கீரனூர், விவேகானந்தா நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், கோயில் விழாவிற்கு தனது மனவியுடன் வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். பின் நேற்று காலை வந்த பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, 10 சவரன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்தவர் முகமது பல்லோரா(59) .இவர், 5ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதையெடுத்து, பெற்றோர் சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.

கண்டமங்கலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் விநாயகபுரம் கிராமத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள ஒருவர் வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் 41 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர் அதே கிராமத்தைச் சேர்ந்த பிரபாஸ்கர்(45) என்பது தெரிய வந்ததும், அவரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்: ஆவடியை அடுத்த பட்டாபிராம், சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா(25). இவருக்கும் கார்த்திக்(28) என்பவருக்கும் கடந்த பிப்.22ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று(மார்ச் 23) மாலை சந்தியா வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றதாக தெரிகிறது. ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுபெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்(40). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். மதுப் பழக்கத்திற்கு அடிமையான இவரை, குடும்பத்தினர் குன்றத்தூர் அருகே ஆண்டாங்குப்பத்தில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நேற்று(மார்ச் 23) காலை வலிப்பு ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இறந்ததாக தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஜியோ டவரில் பேட்டரி மற்றும் டீசல் திருடிய தம்பதியை போலீசார் கைது செய்தனர். சிங்களாந்தபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் (37) மற்றும் அவர் மனைவி காமாட்சி (35) ஆகிய இருவரும் டவர் ஜெனரேட்டரிலிருந்து டீசல் திருடும்போது கையும் களவுமாகப் பிடிபட்டனர். திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு 15,000 ரூபாய் ஆகும். புதுச்சத்திரம் போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை: கொடைக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை (25). இவர் நேற்று (மார்ச் 23) அப்பகுதியில் உள்ள குளத்தின் அருகே இருந்த வேப்ப மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்துத் தகவல் அறிந்த கிராம மக்கள், கொண்டபாளையம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார், வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Sorry, no posts matched your criteria.