India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் செல்லும் வழியில் உள்ள பிரபல அல்வா கடையில் சிலிண்டர் தட்டுப்பாட்டால் இன்று பிற்பகல் முதல் உற்பத்தி நிறுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. சிலிண்டர் கிடைக்காத நிலையில் அல்வா உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த இருப்பதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இருட்டுக்கடை அல்வாவுக்கு அடுத்தபடியாக நெல்லையில் இந்த கடை புகழ்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ராணிப்பேட்டை அமமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான என்.ஜி. பார்த்திபன் சோளிங்கர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில், தற்போது அந்த தொகுதி பாமக ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பார்த்திபன் தனது ஆதரவாளர்களுடன் மாற்று கட்சியில் இணைவது குறித்து நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள தனியார் திரையரங்கில், நேற்று இரவு தவெக தலைவர் விஜய்யின் படம் பொறிக்கப்பட்ட டப்பாக்களில் பாப்கார்ன் வழங்கப்பட்டது. இது குறித்த புகாரை அடுத்து, சேலம் மேற்கு தொகுதி தேர்தல் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து அந்த டப்பாக்களைப் பறிமுதல் செய்தனர். தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறப்படும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருமங்கலம் அருகே 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். தி.நகர் 139வது வட்ட திமுக துணை அமைப்பாளர் மற்றும் வழக்கறிஞர் அணியை சேர்ந்த பரத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

திருச்சியில் காலை 6 மணிக்கு புறப்பட்டு, மயிலாடுதுறையில் காலை 9.15 மணிக்கு வரும் ரயில், வருகிற மார்ச் 25,27,30 மற்றும் ஏப்.1 ஆகிய தேதிகளில் கும்பகோணத்தில் நிறுத்தப்படும். அதேபோல் மயிலாடுதுறையில் மதியம் 12.35க்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும் ரயில் கும்பகோணத்தில் இருந்து மதியம் 1.08 மணிக்கு புறப்படும், மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் வரை மேற்கூறிய தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான இழுபறி மற்றும் தெளிவின்மை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஊசுடு, நெட்டப்பாக்கம், உழவர்கரை ஆகிய மூன்று தொகுதிகளில் விசிக வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ம் தேதி நடைபெற உள்ளது. அதனையொட்டி அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நாளை (25.03.2026) மாலை 4 மணிக்கு சென்னை மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள மந்தைவெளி மார்க்கெட் பகுதியில் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்.
Sorry, no posts matched your criteria.