Tamilnadu

News March 26, 2026

சோளிங்கர் அருகே 2 வாலிபர்கள் பலி!

image

ராணிப்பேட்டை; சோளிங்கர் அருகே கட்டாரிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த தருண் குமார்(18). இவரும், நவீன்(25), அருண்(26) ஆகிய 3 பேரும் நேற்று முன் தினம் இரவு 10 மணியளவில் சோளிங்கர் நோக்கி பைக்கில் சென்றனர். பாணாவரம் – சோளிங்கர் சாலையில், யார் முந்தி செல்வது என போட்டி போட்டு பைக் ஓட்டியதில், நிலை தடுமாறி விழுந்து விபத்திற்குள்ளானனர். இதில், அருண், தருண் குமார் ஆகியோர் உயிரிழந்தனர்.

News March 26, 2026

ஸ்ரீபெரும்புதூர் அருகே தூக்கிட்டு தற்கொலை!

image

ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் புஷ்பகிரி பகுதியில் தனியார் தோட்டத்தில் உள்ள மரத்தில் ஆண் நபர் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவர் சிறுமாத்தூரைச் சேர்ந்த பிரதீப்(22) என்பதும், அவருக்கு மன நிலை பாதிக்கப்பட்டதும் தெரிய வந்தது.

News March 26, 2026

சின்ன சேலம் அருகே விஷம் குடித்து தற்கொலை!

image

கள்ளக்குறிச்சி; சின்னசேலம் அருகே உள்ள தகரை கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி(49). விவசாயியான இவர், சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி பரிதாபமக உயிரிழந்தார்.

News March 26, 2026

செங்கல்பட்டில் உடல் நசுங்கி பலி!

image

அம்பத்தூரை சேர்ந்த ஜான் சார்லஸ்(60), அபிசேகம்(25) ஆகிய இருவரும் தனியார் நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று வேலை சம்பந்தமாக சென்னை-திண்டிவனம் நோக்கி பைக்கில் சென்றுள்ளனர். அப்போது மாமண்டூர் பகுதியில் பின்னால் வந்த லாரி அவர்கள் மீது மோதியதில் இருவரும் உடல் நசுங்கி பரிதாபமாக இருவரும் உயிரிழந்தனர். தகவல் அறிந்த படாளம் போலீசார் லாரி ஓட்டுநரிடம் விசாரித்து வருகின்றனர்.

News March 26, 2026

தஞ்சை: தனியார் கிரிப்டோ கரன்சி மோசடி

image

கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்ட தனியார் கிரிப்டோ கன்சல்டன்சி நிறுவனம் ஒன்று, கவர்ச்சிகரமான வட்டி மற்றும் தங்க நாணயம் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் தஞ்சை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என துணை காவல் கண்காணிப்பாளர் பூர்ணிமா அறிவித்துள்ளார்.

News March 26, 2026

திருச்சி மாவட்டத்தில் ரூ.44.25 லட்சம் பறிமுதல்

image

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் மேற்கொண்ட சோதனையில், நேற்று(மார்ச் 25) மாலை வரை ரூ.44,25,820 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் ரூ.21,57,380 விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

News March 26, 2026

புதுக்கோட்டை: தலைகீழாக கவிழ்ந்த சரக்கு வாகனம்

image

புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் அருகே உள்ள துவார் சாலையில் மளிகை பொருட்களை ஏற்றி சென்ற சரக்கு வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் சரக்கு வாகனம் தலை குப்பிற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும் இருசக்கர வாகனம் சேதமடைந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 26, 2026

வேலூரில் துடிதுடித்து பலி

image

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பி.என். பாளையம் ஏரியில் நேற்று நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மேல் செட்டிக்குப்பத்தை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவர் சுரேந்தர் (17) சேற்றில் சிக்கி துடிதுடித்து உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட பொதுமக்கள் பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து குடியாத்தம் கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 26, 2026

திருச்சியில் 5 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

ராம்ஜி நகர் பகுதியில் சுமார் 7,000 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த தீன தயாளன், தரனேஸ்வரன், ஆனந்த், ஜெயசூர்யா, ராஜாராம் ஆகியோரை திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில், அவர்களின் தொடர் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக, 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க திருச்சி மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News March 26, 2026

மாயவரம்: இளைஞர் உயிரிழப்பு – உறவினர்கள் போராட்டம்

image

திருவிளையாட்டம் கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார்(29). இவர் கடந்த 22ம் தேதி மூங்கில்தோட்டம் அருகே பைக்கில் சென்ற போது மற்றொரு பைக்குடன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்ற இவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் விபத்து ஏற்படுத்தியவர்களை கைது செய்ய வெண்டுமென அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!
↑