Tamilnadu

News March 28, 2026

BREAKING ஈரோடு திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

image

சட்டமன்ற தேர்தல் திமுக சார்பாக போட்டியிடும் தொகுதி வேட்பாளர்களை அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். அதன்படி, 1. ஈரோடு மேற்கு – சு.முத்துசாமி
2.கோபிச்செட்டிப்பாளையம் -நல்லசிவம்
3.அந்தியூர்- சிவபாலன்
4.பெருந்துறை-தோப்பு வெங்கடாசலம்
5.பவானி -கே.எஸ்.சேகர்

News March 28, 2026

BIG BREAKING சிவகங்கை வேட்பாளர்கள் அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்ட வேட்பாளர்கள் பட்டியலை சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

1.சிவகங்கை – கருணாஸ் – முக்குலத்தோர் புலிப்படை
2.காரைக்குடி – காங்கிரஸ் (ஒதுக்கீடு)
3.திருப்பத்தூர் – பெரியகருப்பன் MLA
4.மானாமதுரை – தமிழரசி MLA

News March 28, 2026

செந்தில் பாலாஜி கோவையில் போட்டி: ஸ்டாலின் அறிவிப்பு!

image

திமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இதில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். மேலும் தொண்டாமுத்தூர் -என்.ஆர்.கார்த்திகேயன், கோயமுத்தூர் வடக்கு – செந்தமிழ்செல்வன், சூலூர் – தளபதி முருகேசன் ஆகியோர் திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

News March 28, 2026

BIG BREAKING சங்கரன்கோவிலில் காங்கிரஸ் Vs அதிமுக

image

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்.23 ம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் (தனி) காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சங்கரன்கோவிலில் காங்கிரஸ் Vs அதிமுக என்ற நிலை உள்ளது. சற்று நேரத்தில் வேட்பாளர்களின் பட்டியலை மு.க ஸ்டாலின் வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

News March 28, 2026

BIG BREAKING: மதுரை தெற்கில் – மதிமுக vs பாஜக

image

வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக தலைமையிலான NDA கூட்டணியின் தொகுதி பங்கீடு வெளியிடப்பட்டது. இதில் மதுரை தெற்கு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் அதிமுக போட்டியிட்ட நிலையில், இம்முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், திமுக கூட்டணி இந்த தொகுதியை மதிமுகவிற்கு வழங்கியுள்ளது. இதனால் மதுரை தெற்கில் மதிமுக(உதயசூரியன் சின்னத்தில்) மற்றும் பாஜக போட்டி நிலை உருவாகியுள்ளது.

News March 28, 2026

ELECTION BREAKING தருமபுரி: திமுக கூட்டணி தொகுதிகள் அறிவிப்பு!

image

வருகிற சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி பென்னாகரம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக டி.ஆர்.பாலு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த தொகுதியில் யார் போட்டியிடுவார்கள்? என்று உங்களது கருத்தை பதிவிடுங்க.

News March 28, 2026

BREAKING: திண்டுக்கல் திமுக தொகுதிப் பங்கீடு அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்டத்தின் தொகுதிப் பங்கீட்டை திமுக தலைமை வெளியிட்டுள்ளது. இதன்படி, நத்தம் சட்டமன்றத் தொகுதியில் தமிழர் தேசம் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. அதேபோல்,பழனி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)களம் காண்கிறது.கூட்டணிக் கட்சிகளுக்கான இந்தத் தொகுதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது

News March 28, 2026

BIG BREAKING குமரியில் களம் காணும் காங்கிரஸ்

image

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்.23 ம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு, கிள்ளியூர், குளச்சல் ஆகிய மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சற்று நேரத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை மு.க ஸ்டாலின் வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

News March 28, 2026

BREAKING: கோவை DMK கூட்டணிப் பங்கீடு வெளியானது!

image

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. அதேபோல், பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (கொமதேக) போட்டியிடுகிறது. இத்தொகுதியில் கொமதேக வேட்பாளர் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் களம் காண்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கூட்டணி கட்சியினரிடையே தேர்தல் பணிகளை வேகப்படுத்தியுள்ளது.

News March 28, 2026

BREAKING கிருஷ்ணகிரி: திமுக கூட்டணி தொகுதிகள் அறிவிப்பு!

image

வருகிற சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி ஊத்தங்கரை (தனி), கிருஷ்ணகிரி ஆகிய 2 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கும், தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக டி.ஆர்.பாலு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

error: Content is protected !!
↑