India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில், திமுக கூட்டணி சார்பில் வேளச்சேரி காங்கிரசுக்கும், அதிமுக கூட்டணியில், மயிலாப்பூர் பாஜவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மீதமுள்ள 14 தொகுதிகளில் திமுக & அதிமுக நேரடியாக களம் காண்கின்றன. திமுக சார்பில் போட்டியிடப்படும் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுகவி ராயபுரத்திற்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சியின் தற்போதைய திமுக எம்எல்ஏக்கள் ஸ்ரீரங்கம் பழனியாண்டி, முசிறி தியாகராஜன், துறையூர் ஸ்டாலின்குமார், லால்குடி சௌந்தரபாண்டியன் ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. பழனியாண்டி குவாரியில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்ட விவகாரமும், லால்குடி சௌந்தரபாண்டியன், அமைச்சர் நேரு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

தூத்துக்குடியில் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் பதவி காலியாக இருந்து வந்தது. இந்நிலையில் தற்பொழுது சட்டமன்ற தேர்தலில் நடைபெற உள்ளதால் தூத்துக்குடி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் அமைச்சரும் அதிமுக வர்த்தக அணி மாநில செயலாளரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருமான சித செல்ல பாண்டியன் நியமனம் செய்து தலைமை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், மார்ச் 26ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் மட்டும் 22,343 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களது விண்ணப்பங்கள் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு, தகுதியுள்ள வாக்காளர்கள் பெயர், பட்டியலில் சேர்க்கப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரொக்க பணம் பரிசுப் பொருட்கள் என மொத்தம் ரூபாய் 67 லட்சத்து 91 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இவைகளில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின் ரூபாய் 45 லட்சத்து 34,000 மதிப்புள்ள ரொக்கப்பணம் பொருட்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

1.திருமங்கலம் – சேடப்பட்டி மு.மணிமாறன்
2.திருப்பரங்குன்றம் – கிருத்திகா தங்கபாண்டி
3.மதுரை மேற்கு – ரகு பாலாஜி
4.மதுரை மத்திய – பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் MLA
5.மதுரை வடக்கு – கோ.தளபதி MLA
6.சோழவந்தான் (தனி) – ஆ.வெங்கடேசன் MLA
7.மதுரை கிழக்கு – பி.மூர்த்தி MLA
8.மதுரை தெற்கு – மதிமுக
9.உசிலம்பட்டி – காங்கிரஸ் (ஓதுக்கீடு)
10.மேலூர் – காங்கிரஸ் (ஓதுக்கீடு)

திமுக போட்டியிடும் தொகுதியை இன்று திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள
▶️மதுராந்தகம் (தனி) – எஸ்.அமுலு பொன்மலர்
▶️செங்கல்பட்டு – எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி
▶️தாம்பரம் – டாக்டர் ஆர்.எஸ்.கிருத்திகாதேவி
▶️சோழிங்கநல்லூர் – ச. அரவிந்த் ரமேஷ்

சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் தொகுதி வேட்பாளர்களை அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில்,
ஒட்டன்சத்திரம் – அர.சக்கரபாணி,
ஆத்தூர் – இ.பெரியசாமி,
நிலக்கோட்டை (தனி) – நாகஜோதி,
திண்டுக்கல் – ஐ.பி. செந்தில்குமார்
வேடசந்தூர் – டி. சாமிநாதன்
ஆகியோர் களம் காண்கின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அதன்படி, திருவண்ணாமலை – எ.வ.வேலு, வந்தவாசி (தனி), எஸ்.அம்பேத்குமார், செய்யாறு – ஓ.ஜோதி, ஆரணி – மகாலட்சுமி கோவர்த்தனன், கலசப்பாக்கம் – பெ.சு.தி.சரவணன், கீழ்பென்னாத்தூர் – கு.பிச்சாண்டி, செங்கம் (தனி) – மு.பெ.கிரி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த தொகுதிகளில் திமுகவின் வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கும்னு சொல்லுங்க.

கரூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கரூரில் போட்டியிடவில்லை. இவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதாக திமுக தலைமை இன்று அறிவித்தது. கோவை தெற்கு தொதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமமன் K அர்ச்சுணன் என்பவருக்கு எதிராக போட்டியிடுகிறார். செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிடுவது குறித்து உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.