India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய அரசின் காப்பீடு நிறுவனத்தில் உதவியாளருக்கான 500 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 37 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு 21 – 30 க்குள் இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாதம் ரூ.22,405 – 62,265 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுடையவர்கள் வரும் ஆகஸ்ட் 17க்குள் <
திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் வரலட்சுமி விரதம் மற்றும் ஆடி வெள்ளியை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.500 முதல் ரூ.600 வரை விற்றது, விலை உயர்ந்து கிலோ ரூ.800 வரை விற்பனை செய்யப்பட் டது. அதேபோல் கிலோ ரூ.350 வரை விற்பனை செய்யப்பட்ட முல்லைப்பூ விலை அதிகரித்து ரூ.500 முதல் ரூ.600 வரையிலும், ரூ.150-க்கு விற்ற அரளி கிலோ ரூ.250-க்கும் நேற்று(ஆக.7) விற்பனையானது.
நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், புதிய குடும்ப அட்டை கோருதல், பதிவு மற்றும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகாா்களை தெரிவிக்கும் வகையில், நாளை(ஆக.9) காலை 10 மணிமுதல் நண்பகல் 1 மணிவரை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில், குறைதீா் முகாம் நடைபெறுகிறது.
சேலம்: மேட்டூர் அருகே குஞ்சாண்டியூர் பனங்காடு பகுதியைச் சேர்ந்த பத்மராஜன்(65) துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக சுயேட்சையாக தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இது இவரது 250ஆவது வேட்பு மனுத்தாக்கல் ஆகும். இதற்கு முன்பு 249 தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான்பாண்டியன் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதில் நமனசமுத்திரம், அன்னவாசல், இலுப்பூர், விராலிமலை, திருமயம் உள்ளிட்ட இடங்களில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வரும் 24ஆம் தேதி திண்டுக்கல்லில் நடைபெற உள்ள சமூக சமத்துவ மாநில மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கிறார்.
திருச்சி மாநகரில் இயங்கி வரும் உரிமம் பெற்ற மது விற்பனை கூடங்களில் உறுப்பினா் அல்லாத நபா்களுக்கு மது விற்பனை செய்வதை ஒழுங்குபடுத்த வேண்டுமென, திருச்சி கருமண்டபத்தை சேர்ந்த சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள், இது குறித்து திருச்சி கலால் துறையின் உதவி ஆணையா் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
மத்திய அரசின் காப்பீடு நிறுவனத்தில் உதவியாளருக்கான 500 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 37 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு 21 – 30 க்குள் இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாதம் ரூ.22,405 – 62,265 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுடையவர்கள் வரும் ஆகஸ்ட் 17க்குள் <
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அமைந்துள்ள ரங்கபூபதி கல்லூரியில் நாளை (ஆக.9) தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமில் 18 – 40 வயதுடைய இருபாலரும் பங்கேற்கலாம். 8ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை அனைவருக்கும் வேலைவாய்ப்பு உள்ளது. தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க.
பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு நாளை (ஆக.9) காலை 9.25 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் முற்பகல் 11.10 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும், மறுமாா்க்கத்தில் சிறப்பு ரயில் நாளை (ஆக.9) பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே இரட்டைஊரணி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக 36 பண்டல்களில் 1000 கிலோ பீடி இலைகளை டிராக்டரில் கொண்டு வந்தனர். உச்சிப்புளி காவல்துறையினர் கடத்தல்காரர்களை மடக்க முயன்றபோது, டிராக்டர் கவிழ்ந்தது. இச்சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர் வருண்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து பீடி இலை பண்டல்களை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.