India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். இந்த <

கடலூர் மாவட்டத்தில் மார்ச் 1 ஆம் தேதி முதல் நேற்று மார்ச் 31 ஆம் தேதி வரை இயல்பாக 19.1 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இதுவரை 26.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் மூலம் மழை இயல்பை விட 38 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளதாக வானிலை மையம் இன்று தெரிவித்துள்ளது. இதனால் கடலூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்.23 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு, 100% வாக்குப்பதிவினை வலியுறுத்தும் வகையில். கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ராட்சத பலூனை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் இன்று வாக்காளர்கள் பார்வையிடும் வகையில் பறக்கவிட்டார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் புண்ணியகோட்டி உள்ளிட்ட பலர் இருந்தனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து பயணிகளின் கடைசி மைல் இணைப்பை உறுதி செய்ய 220 மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்கான வழித்தட ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது. பணமில்லாப் பரிவர்த்தனை, நடத்துனர் இல்லாத சேவை என இது அமையவுள்ளது. கோயம்பேடு, விமான நிலையம் உட்பட முக்கிய நிலையங்களைச் சுற்றி 6 முதல் 8 கி.மீ தூரத்திற்கு இந்த பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எழும்பூர் ரயில் நிலையம் ரூ.760 கோடியில் விமான நிலையத் தரத்தில் மறுசீரமைக்கப்பட்டு வருகிறது. இதில் 11 நடைமேடைகளையும் இணைக்கும் பிரம்மாண்ட வளாகம், 43 லிஃப்ட்கள், 29 எஸ்கலேட்டர்கள் மற்றும் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் அமையவுள்ளன. பயணிகள் நெரிசலைத் தவிர்க்கத் தனித்தனி வழித்தடங்கள் அமைக்கப்படுகின்றன. நவீன வசதிகளுடன் இப்பணிகள் மிக விரைவில் நிறைவுபெறும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

கோகுல மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் M V சேகர், நெல்லை எம்எல்ஏவும், பாஜக மாநில தலைவருமான நயினார் நாகேந்திரனை சந்தித்தார்.இந்த சந்திப்பில் 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அவர்கள் கட்சியின் முழு ஆதரவு இருக்கும் என உறுதியளித்தார். இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கோகுல மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் M V சேகர், நெல்லை எம்எல்ஏவும், பாஜக மாநில தலைவருமான நயினார் நாகேந்திரனை சந்தித்தார்.இந்த சந்திப்பில் 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அவர்கள் கட்சியின் முழு ஆதரவு இருக்கும் என உறுதியளித்தார். இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்ட கால்பந்து சங்கம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மதுரை பிரிவு சார்பில் மாவட்ட அளவிலான கால்பந்து லீக் போட்டி மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் மற்றும் கே. புதூரில் உள்ள தொன்போஸ்கோ ஐடிஐ மைதானங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்த ‘ஏ’ பிரிவு ஆட்டத்தில், சேது பொறியியல் கல்லூரி அணி மதுரை போலீஸ் அணியை 5:0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் களப்பணி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி இதுவரை வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி ஏற்பட்டதன் காரணமாக தேர்தல் மேலாண்மை ஒருங்கிணைப்பு குழு தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் தலைவர் கார்கேவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு திருவண்ணாமலை மாநகராட்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் க.தர்ப்பகராஜ் நேற்று (மார்ச்.31) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.