Tamilnadu

News August 8, 2025

ராம்நாடு விவசாயிகள் மானியம் பெற ஆட்சியர் அழைப்பு

image

2025-26ம் ஆண்டு தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மின்சாரத்தினால் இயங்கும் புல்வெட்டும் கருவிகள், அரசினால் 50 சதவீத மானியத்தில், 50 பயனாளிகளுக்கு மாவட்டத்தில் வழங்கப்படவுள்ளது. விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகி கால்நடை விபரம், தீவன சாகுபடி விபரம், நில சர்வே எண் கூடிய விண்ணப்பத்தினை சமர்பித்து பயன் பெறலாம் என ஆட்சியர் சிம்ரன் ஜித் கூறியுள்ளார்.

News August 8, 2025

கரூரில் ரூ.18,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

கரூர் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய 62, Staff Nurse பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாத சம்பளமாக ரூ.18,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் (ஆகஸ்ட் 14) மாலை 5 மணிகுள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும். இதை வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க!

News August 8, 2025

தர்மபுரி: 10th போதும் ரூ.35,000 சம்பளத்தில் அரசு வேலை

image

தர்மபுரி மாவட்ட வருவாய்த்துறையில் காலியாக உள்ள 39 கிராம உதவியாளர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளமாக வழங்கப்படும். ஆக.20-ம் தேதி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் தகவல்களுக்கு <>இங்கே கிளிக்<<>> செய்து தெரிந்துக்கொள்ளுங்கள். வேலை தேடும் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க.

News August 8, 2025

சிவகங்கையில் நாய் கடித்து 18,033 பேர் பாதிப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை நாய்கள் கடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு 18,033 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் ஒரு வாரத்தில் மட்டுமே 23 பேர் நாய் கடித்து தடுப்பூசி போட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News August 8, 2025

தூத்துக்குடியில் சிவன் மீது சூரிய ஒளி விழும் அதிசய கோவில்

image

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் உள்ளது திருமூலநாதர் கோவில் எனப்படும் சிவன் கோவில். 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படும் இக்கோவில் நவலிங்கபுர சிவ ஆலயங்களில் முதலாவது ஆலயமாக போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தில் மார்ச் மாதம் 21, 22, 23 ஆகிய தேதிகளில் மூலவர் மீது சூரிய ஒளி படும் வகையில் கட்டப்பட்டுள்ளது பெரும் அதிசயமாகும். மனநலம் இதய நோய் உள்ளவர்கள் இங்கு வழிபட்டால் பினி தீரும் என்பது ஐதீகம்.

News August 8, 2025

திருவண்ணாமலை தலைமை ஆசிரியருக்கு விருது

image

திருவண்ணாமலை மாவட்ட அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமதாஸ் தலைமையில் 26 பள்ளி மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்ல வழி வகித்ததால் சிறந்த தலைமை ஆசிரியருக்கான விருதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று பெற்றுக் கொண்டார். மேலும் இது போன்ற சேவைகளை செய்து மாணவர்களை வழிநடத்த வேண்டுமென்று கூறினார்கள். ஆசிரியருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டு குவிகிறது.

News August 8, 2025

தேசிய குடற்புழு நீக்க தினத்தில் மாத்திரைகள் வழங்கல்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அரசு, தனியார் கல்லூரிகளில், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ அலுவலர்கள் ஆகியோர் மேற்பார்வையில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது. இந்த முகாமில் பங்கேற்று பயன்பெற கலெக்டர் அருணா அறிவுறுத்தியுள்ளார்.

News August 8, 2025

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

நாமக்கலில் இருந்து இன்று நள்ளிரவு 1:05 மணிக்கு மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில் போன்ற பகுதிகளுக்கு செல்ல 12689 சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் வாரந்திர ரயிலில் டிக்கெட்டுகள் உள்ளன. ரயில் பயணிகள் விரைவாக முன்பதிவு செய்து பயணிக்கலாம். நாமக்கலில் இந்த ரயில்கள் புறப்படும் நேரம் திங்கள் அதிகாலை 5:05 மணிக்கு 12690 நாகர்கோவில் – சென்னை சென்ட்ரல் SF ரயில் உள்ளது.

News August 8, 2025

தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய அழைப்பு!

image

நாமக்கல், தொழிலாளர் உதவி ஆணையர் மூலம் தமிழ்நாடு உடலுழைப்பு வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், இணையம் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் அலுவலகத்தின் தொழிலாளர்களின் நல வாரியத்தில் அதிகளவில் பதிவு செய்வதற்கு ஏதுவாக நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகங்களில் பதிவு செய்து பயன்பெற மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் துர்கா மூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

News August 8, 2025

தஞ்சை: வாழை, மரவள்ளி பயிர்களுக்கு காப்பீடு

image

தஞ்சையில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட குறுவட்டங்களில் நடப்பாண்டு காரீப் பருவத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கு பின்வரும் விவர அடிப்படையில் பிரீமியம் செலுத்தி காப்பீடு செய்ய வேண்டும். வாழை மற்றும் மரவள்ளி பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்வதற்கு அடுத்த மாதம் 16ஆம் தேதி கடைசி நாளாகும் என தஞ்சை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!