Tamilnadu

News April 2, 2026

புதுக்கோட்டை: பொங்கல் பரிசு ரூ.1000 – EPS பிரச்சாரம்!

image

புதுக்கோட்டை திலகர் திடலில் எடப்பாடி பழனிசாமி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நேற்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000, ஒவ்வொரு குடுமபத்தினருக்கும் ப்ரீட்ஜ் மற்றும் பொங்கல் பரிசு ரூ.1000 வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும், அதிமுகவின் திட்டங்களுக்கு திமுக பெயர் வைத்து வருவதாக குற்றம் சாட்டினார்.

News April 2, 2026

புதுச்சேரி வருகைதரும் தவெக தலைவர் விஜய்

image

புதுச்சேரியில் ஏப்ரல் 4-ம் தேதி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் தேர்தல் பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், நகரில் 4 இடங்களில் பிரசாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுடன், வாகனப் பிரசாரம் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

தென்காசி: தாம்பரம் – தென்காசி சிறப்பு ரயில் அறிவிப்பு

image

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் – தென்காசி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 11.10 மணிக்கு புறப்பட்டு செல்லும் தென்காசி சிறப்பு ரயில் (வ.எ 06135) மறுநாள் காலை 11 மணிக்கு தென்காசி சென்றடையும். மறுமார்க்கமாக செங்கோட்டையில் ஏப்.,5ம் தேதி இரவு 11 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 2, 2026

திருச்சி: வேட்பு மனு தாக்கல் செய்யும் விஜய்!

image

சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிட உள்ளார். இதற்காக இன்று திருச்சிக்கு வருகை தந்து வேட்பு மனுதாக்கல் செய்து, தொடர்ந்து திருச்சி மரக்கடை பகுதியில் தனது முதல் திருச்சி பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். முன்னதாக இத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் MLA இனிகோ இருதயராஜ் விஜய்யை திராணியற்றவர் என விமர்சித்திருந்தார். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன மக்களே..

News April 2, 2026

செங்கல்பட்டு: களத்தில் நிற்கும் 3 சிங்கப்பெண்கள்!

image

செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம் தனித்தொகுதியில், 2021 தேர்தலில் வென்ற அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக வேட்பாளராக அமுலு பொன்மலர், தவெக சார்பில் எழில் கேத்தரின் முதன்முறையாக போட்டியிடுகின்றனர். 2009 தொகுதி மறுசீரமைப்பில் தனித்தொகுதியாக மாற்றப்பட்டது. 3 பெண் வேட்பாளர்கள் முக்கிய கட்சியில் போட்டியிடுவதால் பரபரப்பு நிலவியுள்ளது.

News April 2, 2026

ஆற்காடு வருகிறார் இபிஎஸ்!

image

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாளை (ஏப்.3) மாலை 4 மணிக்கு ஆற்காடு பேருந்து நிலையம் அருகே நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். ​தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் வாக்கு சேகரிக்க உள்ள இந்த நிகழ்வில், மாவட்ட நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொள்ளுமாறு ஆற்காடு தொகுதி வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

திண்டிவனம்: பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிஷேகம்!

image

விழுப்புரம்: திண்டிவனத்தில் நடந்த பங்குனி உத்திர விழாவையொட்டி, பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிேஷகம் நடந்தது. செஞ்சி ரோட்டிலுள்ள பாலமுருகன் கோயிலின் 49ஆம் ஆண்டு பங்குனி உற்சவத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை சக்தி கலசமும், சக்திவேலும் பூஜித்து வீதியுலா நடந்தது. தொடர்ந்து நேற்று(ஏப்.1) காலை 11.30 மணிக்கு சிறப்பு அபிஷேகத்தைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிஷேக நேர்த்திக்கடன் நடந்தது.

News April 2, 2026

வேலூர் ஆட்சியர் அறிவித்தார்!

image

இந்திய ராணுவ ஆட்சேர்ப்புக்கான இணையவழி பதிவு செய்ய காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 10-ந்தேதி வரை www.joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தொடர்ந்து இணையவழி பொது நுழைவு தேர்வு, உடல் தகுதி, மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். மேலும் உதவிக்கு சென்னையில் உள்ள ஆட்சேர்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!
↑