Tamilnadu

News August 9, 2025

திருவாரூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஆக.08) இரவு 10 மணி முதல் நாளை (ஆக.09) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் விபரங்கள் மாவட்ட காவல் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 9, 2025

ரூ.1 லட்சம் மானியத்துடன் ஆட்டோ வழங்கிய Dy CM

image

ராயப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 100 பெண்கள் மற்றும் திருநங்கை ஓட்டுநர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியத்துடன் புதிய ஆட்டோ வாகனங்களை Dy CM உதயநிதி ஸ்டாலின் வழங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார். பின் பேசிய அவர், இந்தியாவிலேயே மகளிர் மற்றும் திருநங்கையர்களுக்கு ஆட்டோ ஓட்டுநர்களாக பயிற்சி கொடுத்து நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்த்து, மானியத்துடன் ஆட்டோ வழங்கு ஒரே மாநிலம் தமிழ்நாடு என்றார்.

News August 9, 2025

தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட். 08) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 9, 2025

வேலூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

வேலூர் மாவட்டத்தில் இன்று (ஆக.09) குடியாத்தம் நகராட்சிக்கு உட்பட்ட நடு பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காட்பாடி ஊராட்சி ஒன்றியம் டி.கே புரம் டான் பாஸ்கோ பள்ளி, அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம் சேர்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. தேவை உள்ளவர்கள் நேரில் சென்று மனுக்களை அளிக்கலாம்.

News August 9, 2025

புதுகை விநாயகர் சிலை, ஆட்சியர் அறிவுறுத்தல்

image

புதுகை மாவட்டத்தில் விநாயகர் சிலை செய்வோர் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைக் கொண்டு சிலைகளை செய்ய வேண்டும், சுற்றுச்சூழலுக்கு உகந்த துணிமணிகள் பூஜை பொருட்கள் பூக்கள், எல்இடி விளக்கு உள்ளவற்றை பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், தெர்மாகோல், ரசாயனம் கொண்ட சாயங்கள், எண்ணை வண்ணப் பூச்சுகளை, ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தட்டுகளை பயன்படுத்தக் கூடாது என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News August 9, 2025

தருமபுரி மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

image

தருமபுரி மாவட்ட காவல்துறை இரவு முதல் இன்று (ஆக.9) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது‌. தலைமை அதிகாரியாக எஸ்.கரிகால் பாரி சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி லதா, அரூர் ஜெய் கீர்த்தி, பென்னாகரம் இளவரசி, மற்றும் பாலக்கோடு நடராஜன் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 9, 2025

தலைமை தபால் நிலையத்தில் 24 மணி நேர சேவை

image

குமரி அஞ்சல் கோட்டகண்காணிப்பாளர் செந்தில் குமார் இன்று வெளியிட்ட செய்தியில், நாகர்கோவில் தலைமை தபால் அலுவலகத்தில் வருகிற 11-ம் தேதி முதல் பதிவு, விரைவு பார்சல் தபால்களுக்கு 24 மணி நேர முன்பதிவு வசதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் மக்கள் எந்த நேரத்திலும், விடுமுறை நாட்களிலும் தபால் சேவை பெரும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும், மூன்று சீட்டு அடிப்படையில் கவுண்டர் செயல்படும் என தெரிவித்துள்ளார்.

News August 9, 2025

திருச்சியில் சிறப்பு குறைதீர் முகாம்கள்

image

திருச்சி மாவட்டத்திலுள்ள 11 வட்டங்களில் சனிக்கிழமை (10.08.2025) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சிறப்பு குறைதீர் முகாம்கள் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல்,திருத்தங்கள், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பம் என அந்தந்த பகுதிக்குரிய கண்காணிப்பு அலுவலர்கள் தலைமையில் முகாம்கள் நடைபெறும்..

News August 9, 2025

இருசக்கர வாகனத்தில் வைத்த பணம் திருட்டு

image

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த கல்லாலிப்பட்டு பகுதியை சேர்ந்த தனசேகரன் என்பவர் தனது ஸ்கூட்டியில் வைத்திருந்த ரூ.95,000 திருடப்பட்டதாக செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வங்கியில் நகையை அடமானம் வைத்து பெற்ற ரூ. 59,000 மற்றும் வீட்டில் இருந்து எடுத்து வந்த ரூ.36,000 என மொத்தம் ரூ.95,000 திருடப்பட்டுள்ளது. செஞ்சி – தி.மலை சாலையில் உணவகத்தில் உணவருந்திய போது சம்பவம் நடந்துள்ளது.

News August 9, 2025

பட்டாசு தொழிலாளிகளுடன் புகைப்படம் எடுத்த இபிஎஸ்

image

சிவகாசி அருகே ஆண்டியாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஆய்வு செய்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பட்டாசு தொழிலாளர்களிடம் நீண்ட நேரமாக கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பெண் பட்டாசு தொழிலாளர்களுடன் புகைப்படம் எடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.

error: Content is protected !!