Tamilnadu

News April 4, 2026

தருமபுரியில் ‘தேர்தல் மாரத்தான் 2026’ விழிப்புணர்வு ஓட்டம்

image

தருமபுரி மாவட்டத்தில் ‘தேர்தல் மாரத்தான் 2026’ விழிப்புணர்வு ஓட்டம் (ஏப்.8) மாலை 6.30 மணிக்கு மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. ஆண்கள், பெண்கள் தலா 4 கி.மீ ஓட்டத்தில் பங்கேற்கலாம். வெற்றியாளர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும். பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு வாக்கு விழிப்புணர்வை பரப்ப அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News April 4, 2026

கோவை: திமுக நிர்வாகி சண்முகசுந்தரம் ராஜினாமா

image

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக எஸ்.எம்.டி.கவிதா கல்யாண சுந்தரம் அண்மையில் அறிவிக்கப்பட்டார். இதற்கு திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம் தனது அதிருப்தியை தெரிவித்திருந்த நிலையில் இன்று தனது குடும்பச்சூழல் மற்றும் பணிச்சுமை காரணமாக கட்சி பதவி மற்றும் கட்சியிலிருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News April 4, 2026

கடலூர்: ஆற்றில் மிதந்த இளைஞர் சடலம்

image

சிதம்பரம் அருகே மேலதிருக்கழிப்பாலை கொள்ளிடம் ஆற்றில் நேற்று சுமார் 35 வயதுடைய வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். உடனே அண்ணாமலை நகர் போலீசார் விரைந்து சென்று, வாலிபரின் உடலை தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து இறந்த வாலிபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரிக்கின்றனர்.

News April 4, 2026

கடலூர்: சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன்

image

நெய்வேலி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவன் 17 வயது சிறுவன். ஐடிஐ படித்து வரும் இவர் 9-ம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதனால் அந்த மாணவி தற்போது கர்ப்பமாக உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் நெய்வேலி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அச்சிறுவனை கைது செய்து, கடலூர் அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.

News April 4, 2026

வேலூர் மாவட்டத்தில் 6180 பேர் விண்ணப்பம்

image

வேலூர் மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகும் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 26-ம் தேதி வரை நேரடியாகவும், ஆன்லைனிலும் பெறப்பட்டன. அதன்படி வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 6,180 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News April 4, 2026

புதுச்சேரி: மாநில அந்தஸ்து என்ன ஆனது? விஜய் கேள்வி

image

நடிகர் விஜய், புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி பகுதியில் இன்று (ஏப்ரல் 4) பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து என்ன ஆனது என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், ரேஷன் கடைகளில் நடக்கும் பிரச்சனைகள் குறித்தும் அவர் பேசினார். யாரையும் நம்பி களத்தில் இல்லை என்றும், தவெக யாருடனும் ஒட்டி உறவாடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

News April 4, 2026

புதுச்சேரி: விஜய் அளித்த வாக்குறுதிகள்

image

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தவெக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், “துணைநிலை ஆளுநர் தலையீடு இல்லாது, தனி மாநில அந்தஸ்து பெற முழுமையாக முயற்சிக்கப்படும்; மகப்பேறு உதவித் தொகையாக ரூ.25,000 வழங்கப்படும்; அனைத்து அரசுத் துறைகளிலும் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும்; 100% பயிர்க்காப்பீடு மற்றும் மீனவர்களுக்கு டீசல் மானியம் வழங்கப்படும்.” என வாக்குறுதி அளித்தார்.

News April 4, 2026

திமுக-காங் குழம்பிப்போன அணி – விஜய் விமர்சனம்

image

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் புதுச்சேரி, தட்டாஞ்சாவடியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, “தமிழ்நாட்டில் திமுக-காங்கிரஸ் குழப்ப அணியாக இருக்கிறது. இங்கேயும் குழம்பிப்போன அணியாகத்தான் இருக்கிறது. பெயருக்குத்தான் இது கூட்டணி ஆனால் ஒருவரை ஒருவர் எதிர்த்து நிற்கின்றனர்.” என விமர்சித்தார்.

error: Content is protected !!
↑