India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மக்களே வனவிலங்குகளால் உயிர் மற்றும் பொருட் சேதத்திற்கு இழப்பீடு வழங்கப்படுகிறது.▶️உயிர் இழப்பு-நிரந்தர ஊனம்: ₹10 லட்சம், கடுமையான காயம்: ₹2 லட்சம், சிறிய காயம் ₹25000.▶️முற்றிலும் சேதமான ஓட்டு வீடுக்கு ₹35000,கூரை வீடுக்கு ₹10000, பயிர் சேதம் ஏக்கருக்கு ₹25000.▶️ இதை பெற அருகேயுள்ள வன அலுவகத்தையும்&1800 425 4409, 044-24323783 இந்த உதவி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இதை ஷேர் செய்யுங்க.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை திமுக மேற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சுந்தர் சந்தித்து புத்தகம் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வில் திமுக மாநில மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
சேலம் மக்களே; ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க
முட்டுக்காடு பகுதிய சேர்ந்த இம்மானுவேல் (56). கானத்தூரை சேர்ந்த ரகுபதி (37). நண்பர்களான இருவரும் நேற்று கானத்தூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான பாரில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த ரகுபதி பீர் பாட்டிலால் இம்மானுவேலை குத்தி கொலை செய்தார். போலீசார் ரகுபதியை கைது செய்து விசாரிக்கின்றனர்.
தமிழ்நாடு வனத்துறை மற்றும் திருச்செந்தூர் வனச்சரகம் சார்பில் இலவசமாக மரக்கன்று வழங்குதல். இலவசம் மரக்கன்றுகள் பெற தண்ணீர் வசதி மற்றும் வேலி வசதி அவசியம் என வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தேவையான ஆவணங்கள்
1) கம்ப்யூட்டர் பட்டா புதியது -2
2) ஆதார் கார்டு ஜெராக்ஸ்-2
3) பாஸ்போர்ட் சைஸ் போட்டோ -2
4) பேங்க் பாஸ்புக் ஜெராக்ஸ் -2
தொடர்புக்கு : 9514906974, 9360323114.
அரியலூர் மக்களே, சாலை, குடிநீர், கல்வி, சுகாதாரம் சார்ந்து தினமும் ஏதேனும் பிரச்னைகளை சந்தித்து வருகிறீர்களா நீங்கள்? இனி கவலை வேண்டாம். உங்கள் பிரச்னைகள் & கோரிக்கைகளை நீங்களே முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள். “<
அதிமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்பிலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் முன்னாள் எம்பி சத்தியபாமா, இன்று முதல் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை தொடர்ந்து அவரது ஆதரவாளரான சத்தியபாமா கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி அல்லிநகரம் பகுதியில் அமைந்துள்ள சிவன் திருக்கோவிலில் வீற்றிருக்கும் நடராஜருக்கு ஆவணி சதுர்த்தசி தினத்தினை முன்னிட்டு இன்று அதிகாலை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து வண்ண பட்டுடுத்தி மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட நடராஜருக்கு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு நடராஜரை வழிபட்டுச் சென்றனர்.
கலியாவூரை சேர்ந்த செய்யது இப்ராஹிம் ஷா, குறிச்சியை சேர்ந்த முத்துக்குமார் ஆகியோர் ஆகிய 2 பேரும் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போக்சோ மற்றும் அடிதடி வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் இரண்டு பேரையும் எஸ்பி சிலம்பரசன் பரிந்துரைப்படி கலெக்டர் சுகுமார் உத்தரவுப்படி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.
கரூர் மக்களே, சாலை, குடிநீர், கல்வி, சுகாதாரம் சார்ந்து தினமும் ஏதேனும் பிரச்னைகளை சந்தித்து வருகிறீர்களா நீங்கள்? இனி கவலை வேண்டாம். உங்கள் பிரச்னைகள் & கோரிக்கைகளை நீங்களே முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள். “முதல்வரின் முகவரி” திட்டம் மூலம் நீங்கள் அரசுக்கு தெரியப்படுத்தலாம் (அ) 1100 என்ற எண்ணில் புகார் செய்யலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.