Tamilnadu

News April 23, 2025

வேலூர் அருகே பெண் தற்கொலை

image

வேலூர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் (34). இவரது மனைவி ராஜகுமாரி (29). ராஜகுமாரிக்கு கடந்த சில மாதங்களாக தீராத நோயினால் பாதிக்கப்ட்டுள்ளார். இதனால் விரக்தியடைந்த அவர் கடந்த 21-ம் தேதி வீட்டில் தூக்கிட்டு கொண்டார். உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 23, 2025

கோடையிலும் வற்றாத அங்குத்தி நீர் வீழ்ச்சி

image

கிருஷ்ணகிரி, கெடகானூர் கிராமத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அங்குத்தி நீர் வீழ்ச்சியில், வற்றாத அருவி ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வற்றாத நீர் நிலையாக ஐந்து நீர் நிலைகள் இதில் உள்ளது. ஜவ்வாது மலையில் நிறைந்துள்ள மூலிகை செடிகளின் ஊடே வரும் அங்குத்தி அருவி நீர் நோய்களை தீர்க்கும் தன்மைகளைக் கொண்டுள்ளது. பார்வையாளர்களிடம் நுழைவு கட்டணமாக ₹30 வசூலிக்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க மக்களே!

News April 23, 2025

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

image

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (23.04.2025) பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. A.சுஜாதா, பெற்றுக் கொண்டு மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும் மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News April 23, 2025

ஆபாச படங்களை அனுப்பிய நபர் கைது

image

கோவை, குனியமுத்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர், பொன்னுசாமி (27) என்பவரிடம் நட்புடன் பழகி வந்துள்ளார். பின்னர் அவரது நடத்தை சரி இல்லாமல் அவரிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் பொன்னுசாமி, அப்பெண்ணின் ஆபாச படங்களை அவருக்கு அனுப்பி மிரட்டி வந்துள்ளார். இதுகுறித்து அப்பெண் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் விசாரணை செய்து பொன்னுசாமியை கைது செய்தார்.

News April 23, 2025

ஆயுளை அதிகரிக்க விழுப்புரத்தில் இந்த கோயிலுக்கு போங்க

image

விழுப்புரம் மாவட்டத்தில், இரும்பையில் அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் 7ம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்க சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோயிலுக்கு வந்து வழிபட்டால் ஆயுள் அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அதுமட்டுமின்றி உண்மையுடன் நடந்தும் அவப்பெயர் எடுத்தவர்கள், அவப்பெயர் நீங்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். ஷேர் பண்ணுங்க

News April 23, 2025

கடலுாரில் 25ஆம் தேதி விவசாயிகள் குறைகேட்பு

image

கடலுார் மாவட்ட விவசாயிகள் குறைக்கேட்புக் கூட்டம் வரும் 25ஆம் தேதி நடைபெற உள்ளது. கடலுார் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏப்ரல் மாத விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 25ஆம் தேதி கலெக்டர் அலுவலகம் குறைதீர்வு கூட்டரங்கில் காலை 10.30 மணிக்கு நடக்கிறது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.

News April 23, 2025

சேலம் :+1 மாணவன் விஷம் குடித்து தற்கொலை

image

சேலம் மாவட்டம், தலைவாசல் அடுத்த மணிவிழுந்தான் தெற்கு புதூரைச் சேர்ந்த விவசாயியின் மகன் யுவராசு (16).பிளஸ் 1 பொதுத்தேர்வு முடித்துள்ள நிலையில் யுவராசு செல்போனில் கேம் விளையாடி கொண்டிருந்தார். இதை தந்தை செல்வம் கண்டித்துள்ளார்.தோட்டத்தில் இருந்த பூச்சி மருந்தை அருந்தியுள்ளார்.மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட யுவராசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தலைவாசல் போலீசார் விசாரணை

News April 23, 2025

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

image

திருவாரூர் மாவட்டம், கூத்தநல்லூரில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கூத்தநல்லூர் நகராட்சியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் 17-ஆவது வார்டு புளியங்குடி, குனுக்கடி பகுதியில் சுடுகாட்டு சாலை அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நாளைக்குள் சாலையை அமைத்திட வட்டாட்சியருக்கு கலெக்டர் உத்தரவிட்டர்.

News April 23, 2025

மயிலாடுதுறைக்கு நாளை டிடிவி தினகரன் வருகை

image

மயிலாடுதுறை கூறை நாட்டில் உள்ள தனியார் திருமண மஹாலில் மயிலாடுதுறை தொகுதி அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு கட்சியின் பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்ற உள்ளார். துணைப் பொதுச் செயலாளர் ரங்கசாமி மற்றும் அமமுக மாநில நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பொன். பாரிவள்ளல் தெரிவித்துள்ளார்.

News April 23, 2025

அமெரிக்க தூதரகத்தில் இளவச சம்மர் கிளாஸ்

image

சென்னை அமெரிக்க தூதரகத்தில், கோடை விடுமுறையை முன்னிட்டு மாணவர்களுக்கு இலவச கோடை வகுப்பு நடந்து வருகிறது. தங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ள பலவகை பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 3D பிரிண்டிங், VR கணினிகள், அறிவியல், தொழில்நுட்பம், கணிப்பொறி பாடங்கள் உள்ளிட்டவை உள்ளடக்கமாகும். இவை மே 5 வரை நடைபெறும் என தூதரகம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் கலந்து கொண்டு பாயான் அடையலாம்.

error: Content is protected !!