Tamilnadu

News April 7, 2026

நாகையில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம்

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஏப்.07) மாலை 3 மணிக்கு நாகப்பட்டினத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். நாகப்பட்டினம் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா, வேதாரண்யம் திமுக வேட்பாளர் புகழேந்தி, கீழ்வேளூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் லதா ஆகியோரை ஆதரித்து அவர் பேசுகிறார்.

News April 7, 2026

திருப்பூர் இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 06.04.26 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை தாராபுரம் பல்லடம் அவிநாசி காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதிகளில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும் .அவசர உதவிக்கு 108 அழைக்கவும்

News April 7, 2026

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 276 வேட்புமனுக்கள்

image

சட்டமன்றத் தேர்தலையொட்டி இன்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவுபெற்ற நிலையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தமாக 276 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 39 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக முசிறி சட்டமன்ற தொகுதியில் 21 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 7, 2026

புதுச்சேரி: இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ. 2000 – ராகுல்

image

புதுச்சேரி லாஸ்பேட்டையில் இன்று (ஏப்ரல் 6) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பங்கேற்று உரையாற்றினார். மேலும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரியில் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் 2000 ரூபாய் வழங்கப்படும் என்றும், 30000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

News April 7, 2026

புதுச்சேரி: தேர்தல் சாவடிகளுக்கு கட்டுப்பாடு

image

புதுவை தேர்தல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வாக்குச் சாவடியின் நுழைவு வாயிலில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் வேட்பாளரோ (அ) அரசியல் கட்சியோ தற்காலிக தேர்தல் சாவடிகளை அமைக்க கூடாது. வாக்குப்பதிவு நாளன்று, வாக்கு சாவடியை சுற்றியுள்ள 100 மீட்டர் பரப்பளவிற்குள் எந்த விதமான தேர்தல் பிரச்சாரமும் செய்ய அனுமதி கிடையாது. இந்த விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 7, 2026

கடலூர் மாவட்டத்தில் 260 பேர் வேப்பு மனு தாக்கல்

image

கடலூர் மாவட்டத்தில் இன்று மாலை 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், 9 தொகுதிகளிலும் 260 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடலூர் 33, குறிஞ்சிப்பாடி 19, புவனகிரி 25, சிதம்பரம் 29, பண்ருட்டி 17, திட்டக்குடி 39, நெய்வேலி 32, விருத்தாசலம் 41, காட்டுமன்னார்கோவில் 25 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 165 ஆண்களும், 95 பெண்களும் ஆவார்கள்.

News April 6, 2026

தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஏப்.6) இரவு 10 முதல், நாளை (ஏப்.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!
↑