Tamilnadu

News April 10, 2026

தஞ்சாவூர் வருகைதரும் தமிழக முதலமைச்சர்

image

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.10) தனது 4-ம் கட்டத் தேர்தல் பிரச்சாரத்தைத் தஞ்சாவூரில் தொடங்குகிறார். அதன்படி இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில், தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, பாபநாசம், திருவிடைமருதூர், கும்பகோணம் உள்ளிட்ட 8 தொகுதி வேட்பாளர்களையும் ஆதரித்து அவர் வாக்கு சேகரிக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் அருகே ஏரியில் மூழ்கிய வாலிபர் பலி!

image

பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் சாய்ராம் (24). இவர், உணவு டெலிவரி வேலை செய்து வந்தார். நண்பர் நவீன் குமார் (25) என்பவருடன் நாராயணபுரம் ஏரி அருகில் அமர்ந்து மது அருந்திய போது, சாய்ராமின் செல்போன் ஏரியில் தவறி விழ, அதனை எடுப்பதற்காக அவர் ஏரியில் இறங்கி தேடிய போது, நீரில் மூழ்கிய சாய்ராம் மாயமானார். இந்நிலையில் சாய்ராம் உடல் கரை ஒதுங்கிய நிலையில், போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 10, 2026

வேலூர்: தீ வைத்து முதியவர் தற்கொலை

image

வேலூர் வேலப்பாடி பூந்தோட்டம் அருகே நேற்று உடல் கருகிய நிலையில் ஒருவர் இறந்து கிடப்பதாக தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் அதே பகுதியை சேர்ந்த பெருமாள் (79) தனக்கு தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரியவந்தது.

News April 10, 2026

தி.மலை இரண்டாக பிரிக்கப்படும் – அன்புமணி ராமதாஸ்!

image

போளூர் தொகுதியில் பாமக வேட்பாளர் சி.ஆர்.பாஸ்கரனை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “அதிமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் கையெழுத்து தி.மலை மாவட்டத்தை இரண்டாக பிரிப்பதுதான் எனவும், ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சியில் கூட விவசாயிகள் மீது வழக்கு பதியவில்லை; ஆனால் தி.மலை விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட ஒரே அரசாங்கம் திமுக” என விமர்சனம் செய்தார்.

News April 10, 2026

புதுக்கோட்டைக்கு வருகை தரும் CM மு.க.ஸ்டாலின்!

image

புதுக்கோட்டைக்கு நாளை (ஏப்.11) CM மு.க.ஸ்டாலின் வருகிறார். புதுகை மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளான புதுகை, விராலிமலை, கந்தர்வகோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, திருமயம் தொகுதிகளின் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, மாலை 4 மணியளவில் திருக்கோகர்ணம் பள்ளத்திவயல் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். அதன்பிறகு CM சிவகங்கை செல்கிறார்.

News April 10, 2026

கடலூர்: விபத்தில் துடிதுடித்து பலியான இளைஞர்

image

சேத்தியா தோப்பை அடுத்த துறுச்சி கொள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(23). ட்ரைவரான இவர், நேற்று மாலை பைக்கில் சேத்தியா தோப்பு கடைவீதிக்கு சென்றார். அப்போது விகேடி சாலையை கடந்த போது சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த கார் மோதியதில், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த சேத்தியாதோப்பு போலீசார் உடலை கைப்பற்றி, வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 10, 2026

காஞ்சிபுரம் வருகிறார் இபிஎஸ்!

image

வருகின்ற சட்டமன்ற தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தமிழ்நாடெங்கும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அதிமுக கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, இன்று(ஏப்.10) மாலை 3:00 மணிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக காஞ்சிபுரம் வருகை தர உள்ளார். இதில், அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு அளிக்க உள்ளனர்.

News April 10, 2026

பெரம்பலூர்: பறக்கும் படையினரின் பணிகள் ஆய்வு

image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளிலும் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர பாதுகாப்பு சோதனைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் எவ்வாறு பணிகளை மேற்கொள்கிறார்கள் என்று தேர்தல் பார்வையாளர் இரு தொகுதிகளிலும் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

error: Content is protected !!
↑