Tamilnadu

News August 20, 2025

நீலகிரி: இலவச பயிற்சியுடன் வேலைவாய்ப்பு!

image

நீலகிரி மக்களே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், இளைஞர்களுக்கு இலவசமாக வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு (Videography and Video Editing) பயிற்சி 3 மாதம் வழங்கபடவுள்ளது. இப்பயிற்சியினை முழுமையாக முடிப்பவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News August 20, 2025

சேலம்: டிகிரி போதும்.. ரூ.64,000 சம்பளத்தில் வேலை!

image

சேலம் மக்களே, SBI வங்கியில் வாடிக்கையாளர் சேவை மற்றும் சேல்ஸ் பிரிவில் உள்ள, 5,180 ஜூனியர் அசோசியேட்ஸ் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 26.08.2025 ஆகும். இதை வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க!

News August 20, 2025

தருமபுரியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

image

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தருமபுரியில் நாளை (ஆகஸ்ட் 21) நடைபெற உள்ளது. தருமபுரியில் உள்ள செங்குந்தர் திருமண மண்டபம், கடத்தூரில் உள்ள மீனாட்சி மஹால், பென்னாகரத்தில் உள்ள பிக்கிலி 4 சாலை திறந்தவெளி, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தடங்கம், பாலக்கோடு விபிஆர்சி கட்டிடம் கமலாம் பட்டி மற்றும் அரூரில் உள்ள அண்ணமார் திருமண மண்டபம் ஆகிய ஆறு இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்பட உள்ளன. ஷேர்!

News August 20, 2025

திருச்சி: அதிக மகசூல் பெரும் விவசாயிகளுக்கு பரிசு அறிவிப்பு

image

மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மாநிலத்தில் அதிக மகசூல் பெரும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.2.50 லட்சம், 2-ம் பரிசாக ரூ.1.50 லட்சம், 3-ம் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது. இதில் திருச்சியை சேர்ந்த விவசாயிகள் பயன்பெற, நிலத்தின் ஆவணங்களுடன் வேளாண்மை உதவி இயக்குனரை நேரில் அணுகி விண்ணப்பிக்க வேண்டும் என திருச்சி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

News August 20, 2025

திண்டுக்கல்: ரூ.64,000 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY NOW

image

திண்டுக்கல் மக்களே, பட்டப்படிப்பு முடித்தவரா நீங்கள்.? உங்களுக்காக ரெப்கோ வங்கியில் (Repco Bank) 30 வாடிக்கையாளர் சேவை அதிகாரி/கிளார்க் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<> இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 08.09.2025 ஆகும். வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க!ஒருவருக்காவது உதவும்!

News August 20, 2025

கிருஷ்ணகிரி மாவட்டம் இரவு ரோந்து பணி விவரம்‌

image

கிருஷ்ணகிரியில் இன்று (ஆக.20) இரவு 10 மணி முதல் காலை (ஆக.21) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு 100 ஐ டயல் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 20, 2025

வீட்டு வசதி வாரியம் சாா்பில் வட்டி தள்ளுபடி அறிவிப்பு

image

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் திட்டப் பகுதிகளில் வீட்டுமனை மற்றும் குடியிருப்புகளைப் பெற்றவர்களில், வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தத் தவறியவர்களுக்கு வட்டி தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. என கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் நிலுவைத் தொகை முழுவதையும் செலுத்தி, தங்கள் பெயருக்கான கிரையப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளலாம்

News August 20, 2025

கோவை: தோஷங்களை நீக்கும் கரிவரதராஜ பெருமாள்!

image

கோவை, குப்பிச்சிபாளையத்தில் புகழ்பெற்ற கரிவரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. சக்திவாய்ந்த பெருமாளை வணங்கினால், ஜாதக ரீதியிலான தோஷங்கள் நீங்குமாம். இங்கு பச்சை பயறும், உருண்டை வெல்லமும் பெருமாளுக்கு படைத்து, பின்பு அவற்றை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கினால், தோஷங்கள் அனைத்தும் முற்றிலும் நீங்குமாம். வெள்ளிக்கிழமைகளில் மாங்கல்ய பாக்கியம் கேட்டு வரும் பெண்களுக்கு சிறப்பு பூஜையும் நடைபெறுகிறதாம்.SHAREit

News August 20, 2025

நாளை நடைபெறும் முகாம் அட்டவணை

image

காரைக்குடி, சிவகங்கை, தேவகோட்டை, காளையார் கோவில், திருப்பத்தூர், சிங்கம்புணரி உட்பட்ட பகுதிகளில் நாளை (ஆக.21) நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 3:30 மணி வரை நடைபெற இருப்பதால் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

News August 20, 2025

மதுரை த.வெ.க மாநாடு ஒரு பார்வை

image

3000 போலீசார் பாதுகாப்பு
2000 பவுன்சர்கள்
1.50 லட்சம் நாற்காலி
400 நடமாடும் கழப்பறை
உள்ளே வெளியே செல்வதற்கு 18 வழித்தடங்கள்-12 அவசர கால வழிகள்
1 லட்சம் மினரல் வாட்டர் பாட்டில்கள்
zone wise 1000 லிட்டர் குடிநீர் தொட்டி
400 மீட்டர் நீளத்திற்கு ராம்ப்வாக் மேடை
15 முதலுதவி மையங்கள்

error: Content is protected !!