Tamilnadu

News April 13, 2026

ராணிப்பேட்டை விசிக நிர்வாகிகள் 3 பேர் கட்சியிலிருந்து இடைநீக்கம்!

image

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தும் செயல்பட்டதாக, மாவட்டத் தொண்டரணி துணை அமைப்பாளர் காரை அ.நரேஷ், மாநிலத் துணைச் செயலாளர் ஆயப்பாடி முஜிபூர் ரஹ்மான், அப்துல்காதர் ஆகிய 3 பேர் கட்சியிலிருந்து 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

News April 13, 2026

புதுகை: 3,793 பேர் அஞ்சல் வாக்கு செலுத்த ஏற்பாடு

image

புதுகை மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் என 3,793 பேர் அஞ்சல் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுகை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட மூத்தவர்கள், 40 சதவீதத்திற்கும் மேல் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கும், வீட்டில் இருந்து அஞ்சல் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News April 13, 2026

BREAKING: தருமபுரியில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி

image

தருமபுரி பாப்பிநாயக்கனஅள்ளியில் தவெக தலைவர் விஜய் நாளை பரப்புரை செய்யக் காவல்துறை அனுமதி அளித்துள்ளது. காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், தவெக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

News April 13, 2026

கடலூர் மாவட்ட கூடைப்பந்து அணிக்கு வீரர்கள் தேர்வு!

image

கடலூர் மாவட்ட கூடைப்பந்து அணிக்கு 16 வயதுக்குட்பட்ட வீரர், வீராங்கனைகள் தேர்வு வருகிற ஏப்.18ஆம் தேதி பண்ருட்டி ஜான்டூயி பள்ளியில் காலை 8 மணிக்கு நடக்கிறது. இந்த அணி தேர்வுக்கு 1.1.2010 தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் அனுமதிக்கப்படுவர். இதற்கு வரும் மாணவர்கள் பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் நகலுடன் நேரில் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் பாலமுரளி தெரிவித்துள்ளார்.

News April 13, 2026

BREAKING: திருப்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி!

image

திருப்பூர் பெருமாநல்லூரில் நாளை தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ மற்றும் பரப்புரை மேற்கொள்ளக் காவல்துறை அனுமதி அளித்துள்ளது. அவிநாசி புறவழிச்சாலை பகுதியில் ரோடு ஷோ செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெருமாநல்லூர் பிரச்சாரத்தின் போது 8 தொகுதி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரையாற்ற உள்ளார். பெருமாநல்லூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News April 13, 2026

ELECTION SPECIAL: கோவை யாருக்கு?

image

அதிமுகவின் கோட்டையான கோவையில் இந்த முறை தேர்தல் களம் அனல் பறக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கில் திமுக சார்பில் செந்தில் பாலாஜி களமிறங்கியுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் எஸ்.பி. வேலுமணி கோவையில் தனது செல்வாக்கைத் தக்கவைக்கத் தீவிர வியூகம் வகுக்க, செந்தில் பாலாஜி அரசின் சாதனைகளை முன்வைத்து கோட்டையை தகர்க்க போராடுகிறார். இந்த பலப்பரீட்சையில் யார் கை ஓங்கும் என்பதை கமெண்ட் பண்ணுங்க!

News April 13, 2026

அரியலூரில் தேர்தல் முன்னேற்பாடு குறித்து ஆய்வு

image

அரியலூர் மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு நடைபெறும் பணிகளை தேர்தல் காவல் பார்வையாளர் ஓம் பிரகாஷ் திரிபாதி நேரில் ஆய்வு செய்தார். அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு, வசதி மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் பரிசோதிக்கப்பட்டன. மேலும், பொதுமக்கள் புகார்களுக்கு 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை மற்றும் cVIGIL செயலி மூலம் தகவல் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 13, 2026

சேலம்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

சேலம் மக்களே, ‘பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

News April 13, 2026

சேலம்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

சேலம் மக்களே, ‘பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

News April 13, 2026

பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது

image

மணப்பாறை அடுத்த அனியாப்பூரை சேர்ந்தவர் சுப்ரமணி(52). இவர் ஒரு சிறுமியிடம் தவறான செய்கைகளை காட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையறிந்த தாயார் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!
↑