India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆலங்குடியில் ஜூலை 16ஆம் தேதி டாஸ்மாக் முன்பு ரஞ்சித் என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் அருவாளால் வெட்டி கொலை செய்தது. இது தொடர்பாக ஆலங்குடி போலீசார் ஸ்ரீதர், கலையரசன், வெங்கடேஷ், மதிவாணன் ஆகிய 4 பேர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த 4 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி அபிஷேக் குப்தா பரிந்துரையின் பேரில் நான்கு பேரும் குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் அருணா உத்தரவிட்டார்.
கொட்டாம்பட்டி: கணவரை இழந்த ராகவியை, அவரை விட வயது குறைந்த சதீஷ் திருமணம் செய்ததால் உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில், சதீஷ் மற்றும் ராகவி பைக்கில் சென்றுகொண்டிருந்த போது மர்ம கும்பல் ஒன்று காரை விட்டு அவர்கள் மீது மோதியதுடன், கீழே விழுந்த 2 பேரையும் கொடூரமாக தாக்கியுள்ளது. சதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ராகவி படுகாயத்துடன் மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் எண்கள் மாவட்ட இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
▶️கடலாடி – 04576-266558
▶️கமுதி – 04576-223235
▶️முதுகுளத்தூர் – 04576-222223
▶️பரமக்குடி – 04564-226223
▶️இராஜசிங்கமங்கலம் – 04561-299699
▶️திருவாடானை – 04561-254221
▶️கீழக்கரை – 04567-241255
▶️இராமேஸ்வரம் – 04573-221252
▶️இராமநாதபுரம் – 04567-220352
வாகன ஓட்டிகளே! போலியான இ-சலான் இணையதளங்கள் குறித்து திருப்பூர் காவல்துறை எச்சரித்துள்ளது. https://echallanparivahan.in/ போன்ற போலியான தளங்களைத் தவிர்க்கவும். அதிகாரப்பூர்வமான https://echallan.parivahan.gov.in/ என்ற இணையதளத்தை மட்டுமே பயன்படுத்துங்கள். இதே போன்ற மோசடிச் செய்திகள் வந்தால், உடனடியாக 1930 என்ற எண்ணில் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளியுங்கள். (ஷேர் பண்ணுங்க)
சிவகங்கை மாவட்ட மக்கள் இந்த அரசு அதிகாரிகளின் எண்களை கண்டிப்பாக Save செய்து கொள்ளவும்..
▶️சிவகங்கை மாவட்ட தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) – 04575-240391
▶️பொது மேலாளர் (மாவட்ட தொழில் மையம்) – 04575-240257
▶️கூடுதல் தனி உதவியாளர் (நிலம்) – 04575-240391
▶️கருவூல அலுவலர் – 04575-240440
▶️துணை இயக்குனர் (தோட்டக்கலை) – 04575-246161
Share It.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் எண்கள் மாவட்ட இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
▶️தூத்துக்குடி – 0461-2321448
▶️ஸ்ரீவைகுண்டம் – 04630-255229
▶️திருச்செந்தூர் – 04639-242229
▶️சாத்தான்குளம் – 04639-266235
▶️கோவில்பட்டி – 04632-220272
▶️ஓட்டப்பிடாரம் – 0461-2366233
▶️எட்டயாபுரம் – 04632-271300
▶️ஏரல் – 04630-270055
Share It.
தர்மபுரியில் நடைபெற்ற விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின், சித்தேரி ஊராட்சி, கொளகம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிசெட்டிப்பாளையம் ஆகிய பகுதிகளை பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் வட்டத்தில் இருந்து அரூர் வட்டத்தில் இணைப்பதாக அறிவித்தார். மேலும், அரூர் பகுதியில் உள்ள வள்ளிமதுரை அணையிலிருந்து ₹15 கோடி மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து குடிநீர் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு இலவம்பாடி, ஒடுகத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து கத்தரிக்காய் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த வாரங்களில் 1 கிலோ ரூ.40 – ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்ட கத்தரிக்காய் தற்போது விலை உயர்ந்துள்ளது. இதனால், ரூ.60 – ரூ.70 வரை தரத்துக்கு ஏற்றார்போல் விற்பனை செய்யப்படுகிறது. ஆடி மாதம் முடிவடைவதால், ஓரிரு நாட்களில் விலை குறைய வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
மயிலாடுதுறையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் செயல்படும் மிஷன் சக்தி திட்டத்தில் மத்திய மாநில அரசின் திட்டங்களை செயல்படுத்துதல் நிதி ஒதுக்கீடு போன்ற பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில் mayiladuthurai.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து வருகிற 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூரில் இன்று (ஆகஸ்ட் 17) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழையின் அளவு 7 முதல் 11 செ.மீ வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மிதமான கனமழைக்கான எச்சரிக்கையாகும். பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Sorry, no posts matched your criteria.