India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி காவல்துறை பொதுமக்களுக்கு மற்றவர்கள் உங்கள் செல்போனை ஹேக் செய்வதில் இருந்து பாதுகாக்க சில டிப்ஸ் வழங்கியுள்ளது. ▶️ ஆப் ஸ்டோரிலிருந்து மட்டும் ஆப்ஸைப் பதிவிறக்கவும் ▶️பொது வைஃபையைப் பயன்படுத்த வேண்டாம் ▶️passwords-யை மொபைல் போனில் சேமித்து வைக்க வேண்டாம் ▶️ உங்கள் ஆப்ஸைப்பை எப்போது அப்டேட்டில் வைத்திருங்கள். மேலும் புகாரளிக்க <
விழுப்புரம் மக்களே மற்றவர்கள் உங்கள் செல்போனை ஹேக் செய்வதில் இருந்து பாதுகாக்க சில டிப்ஸ் பற்றி காண்போம். ▶️ ஆப் ஸ்டோரிலிருந்து மட்டும் ஆப்ஸைப் பதிவிறக்கவும் ▶️பொது வைஃபையைப் பயன்படுத்த வேண்டாம் ▶️passwords-யை மொபைல் போனில் சேமித்து வைக்க வேண்டாம் ▶️ உங்கள் ஆப்ஸைப்பை எப்போது அப்டேட்டில் வைத்திருங்கள். மேலும் புகாரளிக்க <
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆகஸ்ட.17) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை 40.99 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 65.46 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 9.08 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 9.19 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும், பேச்சிப்பாறைக்கு 1036 கன அடி, பெருஞ்சாணிக்கு 432 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.
தர்மபுரியில் அமைந்துள்ள ஸ்ரீ பரவாசுதேவப் பெருமாள் கோயில், முக்கியமான விஷ்ணு கோயில் ஆகும். இக்கோயிலின் மூலவரான பரவாசுதேவர், ஆதிசேஷன் மேல் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் உள்ள பெருமாளின் திருவடிகளை பிரம்மா பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்படுகிறது. சுப காரியங்கள் தடைபடுவது, திருமணத் தடை போன்ற பிரச்சனைகளை நீக்கும் என்பது நம்பிக்கை. ஞாயிற்றுகிழமையான இன்று குடும்பத்துடன் சென்று வாருங்கள். ஷேர்
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மனநல மருத்துவமனைகள் மற்றும் போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களில் பல மையங்கள் உரிமம் இல்லாமல் செயல்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர் புகார் வருகிறது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உரிமைப் பெறாமல் இருந்தால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற குடற்புழு நீக்க முகாமில் மொத்தமாக 8 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது. கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற தேசிய குடற்புழு நீக்க தின முகாமில் 2080 அங்கன்வாடி மையங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட 1,10,886 குழந்தைகளுக்கும், பள்ளி, கல்வி நிறுவனங்கள் மூலம் 5,28,766 மாணவ, மாணவிகளுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டது.
திருவள்ளூரில் உள்ள திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோயில் மிகவும் புகழ்பெற்ற சிவன் கோயிலாகும். ஒரு மாடு தினமும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பால் சுரந்துள்ளது. அதைக் கண்டவர், அந்த இடத்தை தோண்டியபோது, சிவலிங்கம் சுயம்புவாகக் கிடைத்ததாக கூறப்படுகிறது. அதுவே வாசீஸ்வரர் என வழிபடப்படுகிறது.குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கு இங்கு வந்து வழிபடுகின்றனர். ஞாயிற்றுகிழமையான இன்று குடும்பத்துடன் சென்று வாருங்கள். ஷேர்!
சேலம் மாவட்டத்தில் கடந்த 5 மாதத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 25,747 விவசாயிகளுக்கு ரூபாய் 244 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பயிர்க்கடன் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன் உள்ளிட்ட அனைத்து விதமான கடன்களையும் பெற்று பயனடையலாம் என வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
செங்கல்பட்டு ஊனமாஞ்சேரி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ கோதண்டராமர் கோயில். இந்தக் கோயில் 1000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமையானது. இந்தக் கோயிலில் உள்ள அஞ்சநேயர் (அனுமன்) இரண்டு முகங்களுடன் இருப்பது ஒரு தனித்துவமான அம்சம். இந்தக் கோயில் குழந்தை வரம் வேண்டி வரும் பக்தர்களுக்கு மிகவும் பிரசித்தி பெற்றது. குடும்ப ஒற்றுமைக்கும் இங்கு வழிபடலாம். ஞாயிற்றுகிழமையான இன்று குடும்பத்துடன் சென்று வாருங்கள். ஷேர்
இராமநாதபுரம் மக்களே.. தீபாவளி பண்டிகைக்கான இரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (ஆக.17) துவங்குகிறது. அதன்படி, அக்.16ஆம் தேதிக்கான முன்பதிவை இன்று செய்து கொள்ளலாம். அக்.17ஆம் தேதிக்கான முன்பதிவு நாளையும், அக்.18ஆம் தேதிக்கான முன்பதிவை நாளை மறு நாளும் செய்து கொள்ளலாம். அதேபோல, அக்.19ஆம் தேதிக்கான முன்பதிவு ஆக.20ஆம் தேதியும், தீபாவளி நாளான அக்.20ஆம் தேதிக்கான முன்பதிவை ஆக.21ஆம் தேதியும் செய்து கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.