Namakkal

News January 20, 2025

நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (20/01/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கபிலன் (9498178628), ராசிபுரம் – ஆனந்தகுமார் (9498106533), திருச்செங்கோடு – முருகேசன் (9498133890), வேலூர் – கங்காதரன் (6380673283) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News January 20, 2025

நாமக்கல்: வண்டல் மண் எடுக்க ஆட்சியர் அனுமதி

image

நாமக்கல் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று தற்போது கூடுதலாக நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 33 நீர்நிலைகளிலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 21 நீர்நிலைகளிலும் மொத்தம் 54 நீர்நிலைகளில் வண்டல்மண் எடுக்க அரசிதழ் வெளியிடப்பட்டு மொத்தம் 170 நீர்நிலைகளில் வண்டல்மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

News January 20, 2025

நாமக்கல்லில் இன்றைய முட்டை விலை நிலவரம்

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் 20-ஆம் தேதி இன்று நாமக்கல்லில் நடைபெற்றது இக்குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 4.80 ஆக உயர்ந்த செய்யப்பட்டது. மழை பனி குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும் முட்டை விலையில் எந்த விதமான மாற்றம் இல்லாமல் தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 4.80 ஆகவே நீடிக்கிறது.

News January 20, 2025

சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து

image

நாமக்கல்லில் இருந்து திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்திற்கு நேற்று முட்டைகளை ஏற்றிக் கொண்டு, நாமக்கல் – திருச்சி சாலை வழியாக சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற பேருந்து மீது மோதாமல் இருக்க, ஓட்டுநர் வாகனத்தை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், போக்குவரத்தை மாற்றியமைத்து உடைந்த முட்டைகளை அகற்றி சாலையை சீர்படுத்தினர்.

News January 20, 2025

‘கல்வித் தரத்தில் பின்தங்கிய மாநிலமாக தமிழகம் உள்ளது’

image

நாமக்கல்: திருச்செங்கோடில் பாஜக நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் பொறுப்பேற்பு விழா திருச்செங்கோடு, கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது, கடந்த 3 ஆண்டுகளாக தென்னிந்தியாவில் கல்வித் தரத்தில் பின்தங்கிய மாநிலமாக தமிழகம் உள்ளது. ஐஏஎஸ் தேர்வில் தமிழக மாணவா்கள் பின்தங்கியுள்ளனா். அவா்களை அடுத்த கட்டத்துக்கு அரசு தயார்படுத்தவில்லை என்றார்.

News January 19, 2025

இயற்கை எரிவாயு தொடர்பான நிலைக்குழுவில் எம்.பி.

image

நாமக்கல் மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், ஓ.என்.ஜி.சி.யின் மும்பை உயர் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆலைக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவில் கடந்த ஜன.10, தேதி அன்று பங்கேற்றார். இந்த நிகழ்வினை எம்.பி ராஜேஷ்குமார் தனது முகநூல் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.

News January 19, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 5 மில்லி மீட்டர் மழை பதிவு

image

நாமக்கல் மாவட்டத்தில் 19ஆம் தேதி காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விபரம்: நாமக்கல் 2.00 மிமீ, புதுச்சத்திரம் 2.00 மிமீ சேந்தமங்கலம் 1.00 மிமீ என மொத்தம் நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 5.00 மிமீ பதிவாகியுள்ளது என நாமக்கல் மாவட்டம் நிர்வாகம் இன்று 19ஆம் தேதி காலை வெளியிட்டுள்ள அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது. 

News January 19, 2025

நாமக்கல்லில் கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 460 காசுகளாக இருந்து வந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில், அதன் விலையை அதிரடியாக 20 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே, முட்டை கொள்முதல் விலை 480 காசுகளாக அதிகரித்துள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.98க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.83க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

News January 19, 2025

ஜன.26-ல் கிராமசபை கூட்டம்: ஆட்சியர் தகவல்

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 ஊராட்சிகளிலும் வரும் 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்க வேண்டும். கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் மற்றும் இதர பொருட்கள் குறித்து ஆலோசனை செய்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

News January 19, 2025

நாமக்கல்: துவக்கி வைக்கும் எம்பி மற்றும் அமைச்சர் 

image

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள். தைத்திருநாள் மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, மோகனூர் கிழக்கு ஒன்றியம், என் புதுப்பட்டி ஊராட்சியில், திமுக இளைஞரணி நடத்தும், மாபெரும் குதிரை வண்டி எல்லை பந்தயம் இன்று நடைபெற இருக்கிறது. இதனை எம்பி ராஜேஷ்குமார் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைக்க உள்ளனர்.

error: Content is protected !!