Namakkal

News January 29, 2025

அரசு பள்ளி ஆசிரியர் மீது புகார் போலீசார் விசாரணை

image

பள்ளிப்பாளையம் ஒன்றியத்தில் அமைந்துள்ள வீரப்பம்பாளையம் அரசு பள்ளி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் உள்ள ஆசிரியர் நந்தகுமார் என்பவர் மாணவிகளை கைகால்களை அமுக்க சொல்வதாகவும் பாலியல் ரீதியான அத்துமீறி ஈடுபடுவதாகவும், புகார் எழுந்து நிலையில் நேற்று மாலை குமாரபாளையம் போலீசார் மற்றும் கல்வி அதிகாரிகள் அரசு பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

News January 29, 2025

நாமக்கல் உழவர் சந்தை இன்றைய காய்கள் விலை நிலவரம்

image

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய (29 -01.2025) காய்கறிகள் விலை நிலவரம்: (கிலோ 1-க்கு) கத்தரி ரூ.35-40 – 44 தக்காளி – ரூ.24 – 26, வெண்டைக்காய் ரூ.56, அவரைக்காய் – ரூ 55 – 60 – 65கொத்தவரை ரூ.64 முருங்கை ரூ.120, முள்ளங்கி ரூ.20, புடலங்காய் ரூ.45-50பாகற்காய் ரூ.54, பீர்க்கங்காய் ரூ.66 நீர்பூசணி ரூ.20, பரங்கி ரூ.20 தேங்காய் 56 என விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

News January 29, 2025

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் டூவிலர் அபராதம்

image

நாமக்கல் ஆட்சியர் அலுவலக நுழைவாயில்லில் இருசக்கர வாகனங்களை வரிசையாக நிறுத்தி விட்டு சென்றனர். இதையடுத்து, ஆட்சியர் அலுவலக நுழைவாயில் பகுதியில் வாகனங்கள் நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என ஆட்சியா் உத்தரவிட்டாா். அதனையும் மீறி வாகனங்கள் நிறுத்தினர். இந்த நிலையில், போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளா் வெங்கடாசலம் 40க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு நேற்று ஆன்லைன் மூலம் தலா ரூ.500 அபராதம் விதித்தனா்.

News January 28, 2025

நாமக்கல் மாநகராட்சி நாளை சிறப்பு மருத்துவ முகாம்

image

நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மாநகராட்சியில் தினமும் பல்வேறு பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து நாளை 29/1/2025 காலை 9.30 மணிக்கு வார்டு எண்.4 செம்பாளி கரடு வடக்கு, மற்றும் காலை 11 மணிக்கு வார்டு எண்.11 செம்பாளி கரடு தெற்கு பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாநகராட்சி தெரிவித்துள்ளது.

News January 28, 2025

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து அலுவலர்களின் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (28/01/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – ஆகாஷ் ஜோஷி (9711043610), ராசிபுரம் – விஜயகுமார் (9498104763), திருச்செங்கோடு – இமயவரம்பன் (94982030141), வேலூர் – இந்திராணி (9498169033) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News January 28, 2025

வாடிக்கையாளர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்க உத்தரவு

image

பேளுக்குறிச்சியை சேர்ந்தவர் பிரேமா. ராசிபுரத்தைச் சேர்ந்தவர் செங்கோட்டையன். இருவரும் நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உள்ள கடையில், கெண்ட் ஆரோ சிஸ்டம் தயாரித்த தண்ணீர் சுத்திகரிப்பான் வாங்கினர். சுத்திகரிப்பான் குறைபாடு இருந்ததால் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இதில், வீட்டுக்கு குறைபாடான தண்ணீர் சுத்திகரிப்பான் வழங்கிய நிறுவனம் இழப்பீடாக 1 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டது.

News January 28, 2025

கடந்த ஆண்டில் மட்டும் 2,000 கிலோ குட்கா பறிமுதல் 

image

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 2,202 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 485 கடைகளில் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. 1 கோடியே 33 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. குட்கா பொருட்கள் தொடர்பான புகார்களுக்கு 9444042322 எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

News January 28, 2025

தற்காலிகப்பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

image

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் இளம் வல்லுநர்கள் தற்காலிக பணிக்கு கணினி அறிவியல் / தகவல் தொழில்நுட்ப அறிவியல் பயின்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். கல்விச் சான்றுகளுடன், ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல்களை இணைத்து 31.01.2025ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டிய முகவரி: மேலாளர், மாவட்ட மகமை, அம்மா பூங்கா எதிரில், சமுதாய கூடம், பொன்விழா நகர் (P.O), நாமக்கல்-637002

News January 28, 2025

கொல்லிமலையில் இரவு வான்பூங்கா: அரசானை வெளியீடு

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் இரவு வானத்தின் உள்ளார்ந்த வனப்பை இயற்கை கலாச்சார மற்றும் வரலாற்று வளமாக அங்கீகரிக்கும் வகையில் ரூ.1 கோடி செலவில் ‘இரவு வான் பூங்கா’ அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். அதனை செயல்படுத்தும் வகையில், இரவு வான் பூங்கா அமைப்பதற்கு ரூ.44 லட்சம் முதற்கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

News January 28, 2025

விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

image

நாமக்கல் ராசிபுரம் ,திருச்செங்கோடு, சங்ககிரி ஆகிய பகுதிகளில் கடை வணிக நிறுவனம் உணவகம் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 65 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 51 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காமல் இரட்டிப்பு சம்பளம் வழங்காதது உள்ளிட்ட காரணங்களுக்காக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தொழிலாளர் நலத்துறையால் வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

error: Content is protected !!