India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல், அஞ்சல் அலுவலகளில் செல்வமகள் சேமிப்பு திட்டம்’ செயல்படுத்தபட்டு வருகிறது. இத்திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக ரூ.250 முதல் 1.50 லட்சம் வரை டெபாசிட் செய்ய முடியும். உங்களிடம் பணம் இருக்கும் போது டெபாசிட் செய்யலாம். இதற்கு 8% வட்டி வழங்கப்படுகிறது . இது உங்களின் பெண் குழந்தைகளின் கல்வி, திருமனம் போன்றவைகளுக்கு பயனுள்ளதாக அமையும். இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
நாமக்கல், ராசிபுரம் சுவாமி சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த மாதம் 26-ந் தேதி இரு மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் 9-ம் வகுப்பு மாணவர் கவின்ராஜ் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மாணவரை, போலீசார் காப்பகத்தில் அடைத்தனர்.இந்தநிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் வரதராஜ், செல்லப்பம்பட்டிக்கும், வகுப்பு ஆசிரியர் ராஜேந்திரன், சித்தாளந்தூருக்கும் பணியிடை மாற்றம் செய்துள்ளனர்.
நாமக்கல் மண்டலத்தில் நேற்று முன்தினம் கறிக்கோழி கிலோ ரூ.95க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையை மேலும் ரூ.4 உயர்த்தப்பட்டு ஒரு கிலோ கறிக்கோழியின் விலை ரூ.99 ஆனது. இந்த நிலையில் நேற்று மீண்டும் 2வது நாளாக ரூ.5 உயர்த்தப்பட்டு ஒரு கிலோ கறிக்கோழியின் விலை ரூ.104-ஆக உயர்ந்தது.
நாமக்கல் மாவட்டத்தில் தினம்தோறும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் விவரம் வெளியிடப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்று (14.03.2025) நாமக்கல் -சாந்தகுமார் (94 981 6 7 680), ராசிபுரம் அம்பிகா (9498106528), திருச்செங்கோடு வெங்கட்ராமன் (9498172040), மற்றும் வேலூர் சபிதா (9442215201) ஆகியோர் இரவு வந்து பணியில் ஈடுபடுகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் நாவலடி கருப்பசாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் எல்லா நாளுமே சுவாமிக்கு விசேஷ வழிபாடுகள் நடக்கிறது. எனவே, இவருக்கென தனியே விழா எதுவும் கிடையாது. இவரிடம் வேண்டிக்கொண்டு பிரார்த்தனை நிறைவேறியவர்கள் தொடர்ச்சியாக படையல் படைத்து வழிபடுகின்றனர். எனவே, இவருக்கு ‘படையல்சாமி’ என்றொரு பெயரும் உண்டு. இங்கு பிறரால் ஏமாற்றப்பட்டவர்கள் அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள்.
உணவு பாதுகாப்புத் துறை சார்பாக பள்ளிப்பாளையம் ஒட்டமெத்தை” ஈக்காட்டூர் பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் மளிகை கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மூன்று கிலோ பறிமுதல் செய்யப்பட்டது .மேலும் காலாவதியான குளிர்பானங்கள் தின்பண்டங்கள் 6 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இரண்டு கடைகளுக்கு தலா ரூபாய் 2,000 அபராதம் விதிக்கப்பட்டது.
குமாரபாளையம், எக்ஸல் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு வேளாண் பொறியியல் துறை மாணவி செல்வி. கீர்த்தனாவிற்கு மகளிர் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பாக தேசத்தின் அடையாளம் விருது 2025 – பல குரல் நாயகி விருது கோவையில் வழங்கப்பட்டது. விருதை பெற்ற மாணவிக்கு கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (13/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – லக்ஷ்மணதாஸ் (9443286911), ராசிபுரம் – ஆனந்தகுமார் (9498106533), திருச்செங்கோடு – முருகேசன் (9498133890) ,வேலூர் – ஷாஜகான் (9498167357) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் 13ஆம் தேதி காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விவரம் குமாரபாளையம் 26.40 மி.மீ, மோகனூர் 12 மி.மீ, நாமக்கல் 11.50 மி.மீ, பரமத்தி வேலூர் 10 மி.மீ, ராசிபுரம் 6.20 மி.மீ, சேந்தமங்கலம் 29 மி.மீ, திருச்செங்கோடு 26 மி.மீ, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் 17.20 மி.மீ, கொல்லிமலை செம்மேடு 19 மி.மீ என நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 157.30 மி.மீ மழை பதிவாகி உள்ளது.
நாமக்கலில் இருந்து நாளை வெள்ளி காலை 6:15 மணிக்கு 22498 ஶ்ரீ கங்காநகர் ஹம்சஃபர் ரயிலில் பெங்களூரூ, துமகூரு, அர்சிகெரே, தாவங்கரே, ஹூப்ளி, பெலகாவி, புனே, மும்பை, சூரத், அகமதாபாத், அபு ரோடு, மார்வார், ஜோத்பூர், பிகானீர் ஆகிய பகுதிகளுக்கு செல்லவும், காலை 8:34 மணிக்கு 20671 பெங்களூரூ வந்தேபாரத் ரயிலில் கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ ஆகிய பகுதிகளுக்கு செல்லவும் உள்ளன.
Sorry, no posts matched your criteria.