Namakkal

News January 9, 2025

 சிறப்பு அலங்காரத்தில் நாமக்கல்ஆஞ்சநேயர்

image

நாமக்கல் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ளது உலகபிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம். இந்த ஆலயத்தில் மார்கழி வியாழக்கிழமையை முன்னிட்டு இன்று காலை 10.30மணிக்கு பஞ்சாமிருதம் தேன் பால் தயிர் மஞ்சள் சந்தனம் சொர்ணம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் காட்சியளித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம் செய்து வருகின்றனர்.

News January 9, 2025

நாமக்கல் வெல்லம் ஆலைகளில் அதிரடி சோதனை

image

பிலிக்கல்பாளையம் பகுதிகளில் வெல்லம் காய்ச்சும் ஆலைகள், வெல்ல ஏல சந்தையில் நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் (ம) குழுவினா் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வின்போது, வெல்ல ஆலைகளில் வெல்லத்தில் கலப்படம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 10,900 கிலோ அஸ்கா சக்கரையை பறிமுதல் செய்தனா். மேலும், கலப்பட செய்யப்பட்ட 26,430 கிலோ வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது.

News January 9, 2025

நாமக்கல்: ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்

image

ராசிபுரம் வட்டத்திற்கு அடுத்துள்ள வெண்ணந்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட மணியம்பட்டி வழியாக தண்ணீர் திருமணிமுத்தாற்றில் செல்கின்றது. திருமணிமுத்தாற்றில் சாயக் கழிவுகள் மற்றும் சாக்கடை கழிவுநீர் கலப்பதால் கருப்பு நிறத்துடன் மற்றும் நுரையுடன் நீர் செல்கின்றது. திருமணிமுத்தாற்றில் கழிவுநீர் கலப்பதால் பல ஆயிரம் மீன்கள் செத்து மிதக்கும் அவலநிலை ஏற்படுகிறது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News January 9, 2025

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (09-01-2025) நிலவரப்படி கறிக்கோழி பண்ணை விலை (உயிருடன்) கிலோ ரூ.101-க்கும், முட்டை கோழி கிலோ ரூ.83-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதேபோல் முட்டை விலை 480 காசுகளாக நீடித்து வருகிறது. முட்டை விலை கடந்த நான்கு நாட்களாக விலையில் மாற்றம் இன்றி 480 காசுகளாகவே நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News January 9, 2025

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள் 

image

நாமக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு 21.01.2025 அன்று நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கல்லூரி மாணவர்களுக்கு 22.01.2025 அன்று நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியிலும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

News January 9, 2025

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் போட்டிகள் 

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 2025 பொங்கல் பண்டிகையொட்டி, பொங்கல் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்ளுமாறு, கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கையால் விருது வழங்கப்படுகிறது. மேலும், அன்று பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

News January 8, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம் 

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (08/01/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – லக்ஷ்மணதாஸ் (9443286911), ராசிபுரம் – சுகவனம் (9498174815), திருச்செங்கோடு – தங்கவடிவேல் (8667424906), வேலூர் – ராதா (9498174333) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News January 8, 2025

நாமக்கல்: இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

➤ கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த தொழிலாளர் கைது ➤ திருச்செங்கோட்டில் பருத்தி 2 லட்சத்திற்கு ஏலம் ➤ பிளாஸ்டிக் பயன்படுத்திய 3 கடைகளுக்கு அபராதம் ➤ 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற உலக சாதனை நிகழ்வு ➤ சேந்தமங்கலம் கல்லூரியில் விழிப்புணர்வு மாரத்தான் ➤ கபிலர்மலை கரும்பு ஆலைகளில் ஆய்வு ➤ பரமத்திவேலூரில் இலவச மருத்துவ முகாம் ➤ கராத்தே போட்டியில் சாம்பியன்ஷிப் பெற்ற மாணவி

News January 8, 2025

செய்முறை தேர்வுக்கான ஆயத்தப் பணிகள் தீவிரம்

image

நாமக்கல் மோகனூர் சாலையில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பிப்ரவரி மாதம் பிளஸ் 2 செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. அதற்காக ஆசிரியர்கள் என்னென்ன நடைமுறைகள் கடைபிடிக்க வேண்டும் என ஆயத்தப் பணிகள் நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்டத்திலிருந்து இயற்பியல், வேதியல் ஆகிய ஆசிரியர்கள் கலந்து கொண்டு ஆயத்தப் பணிகளை நடத்தினர்.

News January 8, 2025

திருச்செங்கோடு நகராட்சி முக்கிய அறிவிப்பு

image

திருச்செங்கோடு நகராட்சிக்கு 2024-2025ஆம் ஆண்டு வரை செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை மற்றும் தொழில்வரி ஆகியவை நிலுவை மற்றும் நடப்பாண்டிற்கு செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு, அபராத கட்டணம் வசூலித்தல் மற்றும் ஐப்தி நடவடிக்கைகளை தவிர்க்கும்படி திருச்செங்கோடு நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!