India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் எம்பி மாதேஸ்வரன், நாடாளுமன்றத்தில் நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது சேலம் – கரூர், கரூர் – திருச்சி – காரைக்கால் பயணிகள் ரயிலை இணைத்து சேலம் – காரைக்கால் தினசரி ரயிலாக இயக்க வேண்டும். அரியலூர்-பெரம்பலூர் வழியாக நாமக்கல்லுக்கு புதிய ரயில்பாதை அமைக்க இறுதிகட்ட ஆய்வு பணி முடிந்து கிடப்பில் உள்ளது. உடனே இதற்கு நிதி ஒதுக்க நாடாளுமன்றத்தில் நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் வலியுறுத்தினார்.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு சைபர் குற்றங்கள் தொடர்பாக 1,907 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ரூ.14 கோடியே 75 லட்சத்துக்கு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. அவற்றில் ரூ.3 கோடி அளவிற்கு பணம் பிளாக் செய்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரூ.85 லட்சம் திரும்ப பெறப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது X தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நாமக்கல் மாவட்டம் மோகனூர் கிழக்கு ஒன்றிய பாஜக தலைவர் செல்வமணி, பழனி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்தபோது, மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை என தெரிவித்தார்.
நாமக்கல் ரயில் நிலையம் வழியாக பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக சேலம்-நாமக்கல்-கரூர்-திருச்சி இடையே முன்பதிவு இல்லாத ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் திருச்சி-கரூர்-நாமக்கல்-சேலம் இடையே முன்பதிவு இல்லாத ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன, அதன் விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில், 15 மாதங்களில், 2,407 சைபர் கிரைம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 14.75 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது என நாமக்கல் எஸ்.பி. ராஜேஸ்கண்ணன் கூறினார். சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றன. ஆன்லைன் டிரேடிங், திட்டங்களில் முதலீடு, இரட்டை பணம், டாஸ்கை எதிர்கொள்ளுதல் உள்ளிட்ட வழிகளில் சைபர் குற்றங்கள் அரங்கேறுகின்றன.
நாமக்கல் கோர்ட்டில் மக்கள் நீதிமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் https://namakkal.dcourts.gov.in என்ற வெப்சைட்டில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்திசெய்து, தலைவர், முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், நாமக்கல் – 637001 என்ற முகவரிக்கு நாளை (மார்ச் 21) மாலை 5 மணிக்குள் வந்துசேருமாறு, நேரிலோ-தபாலிலோ அனுப்பலாம்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகளை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (19/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கோவிந்தராசன் (9498170004), ராசிபுரம் – ஆனந்தகுமார் (9498106533), திருச்செங்கோடு – வெங்கட்ராமன் (9498172040) ,வேலூர் – சீனிவாசன் (9498176551) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நாமக்கல் கிளையின் கூட்டம், நாமக்கல்லில் இன்று 19ஆம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ஐந்து காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. முட்டை நுகர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 4.15 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அனுமன் கோயில்களில் முதன்மையானது நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில். இங்குள்ள ஆஞ்சநேயர், எதிரில் உள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். இங்கு வழிபட்டால், வாழ்வில் மறுமலர்ச்சி உண்டாகும். கடுமையான வியாதிகள் குணமாகும், எதிரிகளின் தொல்லை நீங்கி வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதை மற்ற பக்தர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
அகில இந்திய அளவிலான சிட்டிங் வாலிபால் போட்டி திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்வி நிறுவன வளாகத்தில் மார்ச் 21இல் தொடங்கி, மூன்று நாட்கள் நடைபெறுகிறது. தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, புதுச்சேரி, தெலங்கானா, உத்தரகண்ட், பீகார், சிக்கிம், இமாச்சலம், மேற்கு வங்கம், ஒடிசா, ராஜஸ்தான் உள்ளிட்ட 20 மாநிலங்களை சேர்ந்த 400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.