India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கலில் இருந்து இன்று (செவ்வாய்) இரவு 8:45pm மணியளவில் ஓசூர், பங்காரபேட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ, மாண்டியா, மைசூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல 06238 இராமநாதபுரம் – மைசூர் ரயிலிலும், 06240 திருநெல்வேலி – மைசூர் ரயிலிலும செல்வதால் பொதுமக்கள் முன்பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாமக்கல் உழவர் சந்தை எதிரே உள்ள மதுரை வீரன் கோயில் அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் டிசம்பர்-13 அன்று நாமக்கல் மக்களைச் சந்திக்க உள்ளார். இதற்கான பாதுகாப்பு மற்றும் அனுமதி கோரி, அக்கட்சியினர் நேற்று நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். நாமக்கல் தவெக கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 16.09.2025 செவ்வாய்க்கிழமை ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’ நடைபெறும் இடங்கள்: நாமக்கல் மாநகராட்சி அரசு துவக்கப்பள்ளி, திருச்செங்கோடு நகராட்சி தனியார் திருமண மண்டபம், காளப்பநாயக்கன்பட்டி தனியார் திருமண மண்டபம், பள்ளிபாளையம் கலைவாணி திருமண மண்டபம், பரமத்தி சமுதாய நலக்கூடம், ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாமக்கல்லில் நேற்று (செப்டம்பர் 15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டது. இதன் மூலம், ஒரு முட்டையின் விலை ரூ. 5.25 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ளதே விலை உயர்வுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் முட்டையின் விலை ரூ.5.20 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று செப்.15 நாமக்கல்-( தங்கராஜ்-9498110895 ) ,வேலூர் -( சுகுமாரன்- 8754002021 ), ராசிபுரம் -( சின்னப்பன்- 9498169092), திம்மநாயக்கன்பட்டி -( ஞானசேகரன் -9498169073 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 15) இரவு ரோந்துப் பணிக்காகக் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர உதவிக்கு, தங்கள் பகுதிக்குட்பட்ட உட்கோட்ட அதிகாரியைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொள்ளலாம் அல்லது 100 என்ற எண்ணை அழைக்கலாம். ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

நாமக்கல் மக்களே, எழுத்துத் தேர்வு இல்லாமல், தமிழ்நாடு அரசின் எழுத்துப்பொருள் மற்றும் அச்சுத்துறையின் கீழ் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரையிலான ஊதியத்தில் 56 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 19.09.2025 தேதிக்குள் <

நாமக்கல் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <

நாமக்கல் மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <

சமீப காலமாக சிறுவர்கள் வாகனங்களை இயக்கி விபத்துக்குள்ளாகும் சம்பவம் அதிகரித்து வருகிறது. குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை விட ஆபத்தானது சிறுவர்கள் வாகனங்களை இயக்குவது. சிறுவர்கள் வாகனம் ஓட்டினால்,
✅ வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் (RC) ரத்து செய்யப்படும்
✅ வாகனம் ஓட்டிய சிறுவர்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்
✅ 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெற முடியாது
✅ பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை (SHARE)
Sorry, no posts matched your criteria.