India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய அஞ்சல் துறையில் நாடு முழுவதும் நிரப்பப்படும் போஸ்ட் ஆபீஸ்களில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு மொத்தம் 21,413 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. <
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு BVSc பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் .சம்பளமாக ரூ.40,000 வரை வழங்கப்படும் . <
வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு அதிகபட்சம் ரூ.25,000 வரை இழப்பீட்டுத் தொகை வழங்க வழிவகை உள்ளது. எனவே, வன விலங்குகளால் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பின் விவசாயிகள் அருகில் உள்ள வன அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது
நாமக்கல் மாவட்டத்தில் உயர்கல்வி உதவித்தொகை பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார். ஏழ்மை நிலையில் உள்ள மாணவா்களுக்கு அவா்கள் படிக்கும் காலத்தில் ஒருமுறை மட்டும் ரூ. 50,000 வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதில் பயன்பெற நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட (ஜி-பிரிவு) அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அளிக்கலாம்.
நாமக்கல் மாவட்டம், முள்ளுக்குறிச்சி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து கொல்லி மலைக்கு சுற்றுலா சென்று திரும்பிய போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 13 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வாழப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும், விதைகள் மற்றும் உரங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில், விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளது என நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகளை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (23/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – வெங்கடாசலம் (9445492164), ராசிபுரம் – துர்க்கைசாமி (9498183251), திருச்செங்கோடு – முருகேசன் (9498133890) ,வேலூர் – சரண்யா (8778582088) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல்: பேளுக்குறிச்சியில், பழனியப்பர் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகன் சிலை, வேட்டைக்காரன் வடிவில், தலையின் உச்சியில் முடியை முடிச்சு போட்டுள்ளது. முருகப்பெருமான் வள்ளியை வசீகரித்து திருமணம் செய்ய அழகான வேட்டைக்கார இளைஞனாக வேடமணிந்த தலம் இது. தோல், எலும்பு நோய்கள் குணமாவதற்கும், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மகப்பேறு கிடைக்கவும் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, முருகனை வழிபடுகின்றனர்.
கடந்தாண்டு நாமக்கல் மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக நீர் நிலைகளுக்கு நீர்வரத்து காணப்பட்டது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு இயல்பு மழை அளவு 716.54 மி.மீ. தற்போது 26ஆம் தேதி வரை 10.07 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் முடிய இயல்பு மழையளவை விட 5.42 மி.மீ. அதிகமாக மழை பெறப்பட்டுள்ளது என நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 716.54 மில்லி மீட்டர் இயல்பு மழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளுக்கு நீர்வரத்து சற்று அதிகம் காணப்பட்டது. இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் 11,827 ஹெக்டரில் பயிர் வகை பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.