India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டத்தில் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், வானம் தெளிவான மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப்பு இல்லை. வெப்பநிலையை பொறுத்தவரையில் குறைந்தபட்சமாக 75.2 டிகிரியாகவும், அதிகபட்சமாக 100.4 டிகிரியாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கலில் இருந்து நாளை வெள்ளி காலை 6:15 மணிக்கு 22498 ஶ்ரீ கங்காநகர் ஹம்சாஃபர் ரயிலில் பெங்களூரூ, அர்சிகெரே, புனே, மும்பை, சூரத், அகமதாபாத், பிகானீர் ஆகிய பகுதிகளுக்கு செல்லவும், காலை 8:34 மணிக்கு 20671 பெங்களூரூ வந்தேபாரத் ரயிலில் கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ ஆகிய பகுதிகளுக்கு செல்லவும் டிக்கெட்டுகள் உள்ளன. தேவைப்படுவோர் விரைவாக முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளவும்.
நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று, நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.7 உயர்த்த முடிவு செய்தனர் . எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.77 ஆக அதிகரித்து உள்ளது. அதேபோல் ரூ.96-க்கு விற்பனை செய்யப்பட்ட கறிக்கோழி, கிலோவுக்கு ரூ.5 உயர்த்தப்பட்டு, ரூ.101-க்கு விற்பனையாகி வருகின்றது.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் மட்டும் 500 சைபர் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது போன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மேலும் ஆன்லைன் டிரேடிங், இரட்டை பணம், உள்ளிட்டவற்றில் பணத்தை இழந்தால் 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு, புகார் தெரிவிக்கலாம்” என எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.
கோடைகாலம் முன்னரே நாமக்கல்லில் குடிநீர் கேன்கள் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தநிலையில் குடிநீர் கேன்களை அதிகமுறை பயன்படுத்தும் போது அதில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் தண்ணீரில் கலந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே ஒரு குடிநீர் கேனில் 30 முறை மட்டுமே மறுசுழற்சி செய்து குடிநீரை நிரப்பவேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளார். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (26/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கபிலன் (9498178628), ராசிபுரம் – கோமலவள்ளி (9498183251), திருச்செங்கோடு – தவமணி (9443736199) ,வேலூர் – பிரபாவதி (9842735574) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
புதுச்சத்திரம் அருகே வயதான பாட்டி உயிரிழந்த நிலையில் அவரது இறுதிச் சடங்கிற்காக உறவினர்கள் இடுகாட்டிற்கு வந்துள்ளனர். அப்போது இடுகாட்டில் சுமார் 6 மனித மண்டை ஓடுகள் எரிந்த நிலையிலும் மற்றும் அதன் அருகில் அரிவாள், ஆணி மாந்திரீகம் படங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது சந்தேகத்திற்கு இடமாக இருந்த நிலையில் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர் .
நாமக்கல்லில், விற்பனையாகும் தர்பூசணி பழங்களில், செயற்கை நிறமூட்டி சேர்க்கப்படுவதாக புகார் வருவதால், தர்பூசணியை பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.
புதுச்சத்திரம் அருகே, வயதான பாட்டி உயிரிழந்த நிலையில் அவரது இறுதிச் சடங்கிற்காக உறவினர்கள் இடுகாட்டிற்கு வந்துள்ளனர். அப்போது இடுகாட்டில் சுமார் 6 மனித மண்டை ஓடுகள் எரிந்த நிலையிலும் மற்றும் அதன் அருகில் அரிவாள், ஆணி மாந்திரீகம் படங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சந்தேகத்திற்கு இடமாக இருந்த நிலையில் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.. காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர் .
நாமக்கல்: இந்திய ராணுவத்தில் அக்னிவீர் ஆட்தேர்வுக்கான பதிவு தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 8,10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்<
Sorry, no posts matched your criteria.