India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல்லில் நேற்று (செப்டம்பர் 18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளை கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.25 ஆக நிர்ணயிக்கப்பட்டது. மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள போதிலும், அதன் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. முட்டை விலை ரூ.5.25 ஆகவே நீடிப்பதாகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று செப்.18 நாமக்கல்-(ராஜமோகன்: 9442256423 ) ,வேலூர் -( ரவி- 9498168482 ), ராசிபுரம் -( கோவிந்தசாமி-9498169110), திம்மநாயக்கன்பட்டி -( ரவி- 9498168665 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (18.09.2025) இரவு ரோந்து பணிகளுக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலங்களில் தங்கள் உட்கோட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம் அல்லது உடனடியாக உதவிக்கு 100 என்ற எண்ணை அழைக்கலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைப்பேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மக்களே, எல்ஐசி வீட்டு நிதி நிறுவனத்தில் (LIC Housing Finance) தொழிற்பயிற்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.12,000 உதவித்தொகையுடன் 12 மாதங்களுக்கு அந்தந்த மாநில அலுவலகங்களிலேயே பயிற்சி அளிக்கப்படகிறது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

நாமக்கலில் இருந்து நாளை வெள்ளி காலை 6:15 மணிக்கு 22498 ஶ்ரீ கங்காநகர் ஹம்சாஃபர், ரயிலில் பெங்களூரூ, துமகூரு, அர்சிகெரே, தாவங்கரே, ஹூப்ளி, பெலகாவி, புனே, மும்பை, சூரத், அகமதாபாத், அபு ரோடு, மார்வார், ஜோத்பூர், பிகானீர் ஆகிய பகுதிகளுக்கு செல்லவும் காலை 8:30 மணிக்கு 20,671 மதுரை – பெங்களூரூ வந்தே பாரத் ரயிலில் கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ ஆகிய பகுதிகளுக்கு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோகனூரில் அருள்மிகு ஸ்ரீ நவலடியான் கோயில் மிக அருகில் அரசு மதுபானக் கடை அமைந்துள்ளது. இதனால் இப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அப்பகுதியினருக்கும் மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும் சிரமம் ஏற்படுகிறது. எனவே கடையை அகற்றக்கோரி பல்வேறு தரப்பினர் எம்.பி மாதேஸ்வரனிடம் கோரிக்கை வைத்தனர்.இக் கோரிக்கை குறித்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் எம்பி மாதேஸ்வரன் வலியுறுத்தல்!

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே உள்ள வெப்படை அடுத்த லட்சுமிபாளையம் பகுதியில் வெறிநாய்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வெறிநாய் கடித்ததில் இரண்டு ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் பல பகுதிகளில் இதே பிரச்சனை இருப்பதாக புகார் எழுகிறது.உங்கள் கருத்து என்ன மக்களே கமெண்ட் பண்ணுங்க!

நாமக்கல் மக்களே இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 127 ‘Specialist Officer’ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E/B.Tech, M.SC,MBA,MCA படித்தவர்கள் அக்டோபர் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதம் ரூ.64,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <

நாமக்கலில் இருந்து நாளை வெள்ளி காலை 6:15 மணிக்கு 22498 ஶ்ரீ கங்காநகர் ஹம்சாஃபர், ரயிலில் பெங்களூரூ, துமகூரு, அர்சிகெரே, தாவங்கரே, ஹூப்ளி, பெலகாவி, புனே, மும்பை, சூரத், அகமதாபாத், அபு ரோடு, மார்வார், ஜோத்பூர், பிகானீர் ஆகிய பகுதிகளுக்கு செல்லவும் காலை 8:30 மணிக்கு 20,671 மதுரை – பெங்களூரூ வந்தே பாரத் ரயிலில் கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ ஆகிய பகுதிகளுக்கு செல்லும்.
Sorry, no posts matched your criteria.