India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று செப்.20 நாமக்கல் – (தேசிங்கன்- 8668105073) ,வேலூர் – (ரவி-9498168482), ராசிபுரம் -(கோவிந்தசாமி-9498169110), திம்மநாயக்கன்பட்டி – (ரவி- 9498168665) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

நாமக்கல் மக்களே.. மத்திய அரசு அறிவிப்புப்படி, LPG கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லை என்றால் இனி கவலை வேண்டாம். <

நாமக்கல் மாவட்ட ஆயுதப் படையில் வாராந்திர கவாத்து பயிற்சி இன்று (செப்.20) காலை 7.00 மணிக்கு நடைபெற்றது. நாமக்கல் ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா ஐபிஎஸ் ஆய்வு செய்தார். பின்பு காவலர்களின் குறைகளை கேட்டறிந்து அறிவுரைகளை வழங்கினார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் சேலம், நாமக்கல் மாவட்ட சுற்றுப்பயணத் திட்டம் திடீரென மாற்றப்பட்டுள்ளது. டிசம்பர் 13-ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில், தற்போது வரும் செப்.27-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதில் நாமக்கல், சேலத்தில் தலா 2 இடங்களில் உரையாற்றவும் திட்டமிட்டுள்ளார். நாமக்கல்லில் வரும் 27ஆம் தேதி பிரச்சாரத்திற்கு அனுமதி கோரி காவல்துறையிடம் த.வெ.க. நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர் .

நாமக்கல்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் வரும் அக்.10ஆம் தேதிக்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். பொதுமக்களுக்கு சிரமமில்லாத, ஆட்சேபனையற்ற (ம) பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்கவும். இணைய தளம் வாயிலாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!

நாமக்கல் மக்களே, வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலம், தமிழ்நாடு கிராம வங்கியில் காலியாக உள்ள Office Assistant உள்ளிட்ட 13,217 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் இரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.35,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க நாளையே (செப்.21) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <

நாமக்கல்லில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

நாமக்கல் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக செப்.06 முதல் இலவச டூ வீலர் மெக்கானிக் பயிற்சி நடைபெறுகிறது. இதற்கான முன்பதிவு அக்.05 வரை நடைபெறுகிறது. NCVET மத்திய அரசு சான்றிதழ், வங்கி கடன் ஆலோசனை, MSME சான்றிதழ், மதிய உணவு, தேநீர், பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 96989 96424, 8825908170 எண்ணை அழைக்கலாம். SHARE பண்ணுங்க!

நாமக்கல் மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 24ஆம் தேதி வரை, 5 நாட்களுக்கு அதிகபட்ச பகல் நேர வெப்ப நிலை, 30 முதல், 33 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும். இரவு நேர குறைந்த பட்ச வெப்பநிலை, 20 முதல் 22 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும். இன்று 6 மி.மீ, நாளை 7 மி.மீ., 22ல் 7 மி.மீ., 23ல் 4 மி.மீ., 24ல் 4 மி.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. SHARE IT!
Sorry, no posts matched your criteria.